search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்க்கையை வளமாக்கும் வராஹி விரத வழிபாடு
    X

    வாழ்க்கையை வளமாக்கும் வராஹி விரத வழிபாடு

    பன்றி முகத்தோடும், அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
    ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வளமும் நலமும் பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இருபத்தி நான்கு மணி நேரமும் இறைவனின் திருப்பெயரை இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டு தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். தும்மும் போது கூட சிவா, முருகா என்று இறைவனின் நாமத்தை உச்சரிப்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

    சிலருக்கு வாழ்க்கையில் எப்போதாவது பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கோ பிரச்சினையே வாழ்க்கையாக அமையும். அலைபாயும்                   மனதில் நிலையான நிம்மதி கிடைக்காது. 'நெஞ்சிற்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி' என்று கவியரசு கண்ணதாசன் சொல்வார். பக்தர்களைப் பாதுகாப்பதில் வேகத்தோடு செயல்படும் தெய்வமாகவும், தொல்லை தருபவர்களை தூர ஓட்டும் தெய்வமாகவும், எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் பெற்ற தெய்வமாகவும், இடையூறுகளை அகற்றி இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் தெய்வமாகவும், செல்வ நிலையை உயர்த்திக் கொடுக்கும் தெய்வமாகவும் இந்தக் கலியுகத்தில் விளங்குவது வராஹி அம்மனாகும்.

    பன்றி முகத்தோடும், அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சஞ்சலம் தீர்க்கும் சக்தியாக, சந்தோஷம் வழங்கும் சக்தியாக, நித்தமும் வரம்தரும் சக்தியாக, நிலையான புகழ் தரும் சக்தியாக விளங்கும் சக்தி வராஹி.

    பஞ்சமி திதியில் 'வராஹி' இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று விரதமிருந்து வழிபட்டால் பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். செம்பருத்தி, செவ்வரளி, பிச்சிப்பூ, மல்லிகைப்பூ போன்றவைகளை அதற்குரிய அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். வராஹி சன்னிதியில் விளக்கு ஏற்றுங்கள். கலக்கம் அகலும். காசுபணப்புழக்கம் அதிகரிக்கும்.

    Next Story
    ×