search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கங்கா கெளரி விரத பூஜை விளக்கம்
    X

    கங்கா கெளரி விரத பூஜை விளக்கம்

    கங்கை நீருக்கு விரதமிருந்து பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும்.
    நதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை. மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை. ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.

    அருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள், காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம். பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.

    பூஜா பலன் :

    கங்கை நீருக்கு விரதமிருந்து பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா மாதா ஆசிதருவார். அந்த தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில் தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண, சந்தான தீர்க்க சுமங்கலி பாக்கியங்கள் கிடைக்கும், வியாபாரம் பெருகும். இந்த பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.  

    Next Story
    ×