search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரமலான் நோன்பின் மகத்துவங்கள்
    X

    ரமலான் நோன்பின் மகத்துவங்கள்

    விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183).
    விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183).

    எந்த ஒரு நோன்பாளி தவறான பேச்சுகளையும் தவறான நட வடிக்கைகளை யும் விட்டு விலக வில்லையோ அவர் உண்ணுவதையும் பருகு வதையும் விட்டு விடுவதில் அல்லாவிற்கு எந்த தேவையு மில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

    தவறான பேச்சு, நடவடிக்கை

    புறம் பேசுதல்: புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு அவர் கள் அல்லாவும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிவார்கள் என்று பதில் அளித்தார் கள். அப்போது நபி அவர்கள் எனது சகோதரன் எதை வெறுப் பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும் என்றார். அப்போது தோழர்கள் நாங்கள் கூறுவது எங்களுடைய சகோதரியிடத்தில் இருந்தாலுமா என்று கேட்டனர்.

    அதற்கு நபி அவர்கள் நீங்கள் சொல்வது உங்கள் சகோதரர் களிடத்தில் இருந்தால் அதுதான் புறம் பேசுதல் நீங்கள் சொல்வது அவர் களிடத்தில் இல்லை என்றால் அது அவதூறு ஆக கருதப் படும் என்றார். பொய் சாட்சியம் சொல்வது: மூமின்களே நீங்கள் நீதியில் நிலைத்து இருங்கள் பொய்சாட்சி சொல்லாதீர்கள். அது உங்களுக்கோ உங்களுடைய பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் பரவாயில்லை (அல் குர் ஆன் 4: 135). ஒரு மனிதன் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் எந்த மொழியை பேசினாலும் எந்த குலம் மற்றும் கோத்திரத்தை சார்ந்தவனாக இருந்தாலும் மனிதர்கள் அனை வரும் ஒரு தாய் மக்கள் என்பதால் மனிதன் மனிதனாக மனித நேயத்தோடு வாழ இறைவன் உதவி செய்வார். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.

    கனிமுகமது
    Next Story
    ×