search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ரமலான்- இந்நாள் பொன்னாள்
    X

    புனித ரமலான்- இந்நாள் பொன்னாள்

    புனிதமான ரமலான் மாதம் மக்களுக்கு கிடைத்த ஓர் அருள் நிறைமாதமாகும். இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான்.
    புனிதமான ரமலான் மாதம் மக்களுக்கு கிடைத்த ஓர் அருள் நிறைமாதமாகும்.

    இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவசன ஏடுகளும், நபி மூஸா (அலை) அவர்களுக்கு தெளராத் வேதமும், நபிதாவூத் (அலை) அவர்களுக்கு ஜபூர் வேதமும், நபி ஈஸா (அலை) (ஏசு) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும், இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆனும் அருளப்பட்டன. ரமளான் மாதம் 27ம் நாள் லைலத்துள் கத்ர் என்ற இரவில் திருக்குர்ஆன் முழுமையமாக்கப்பட்டு உலக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இரவு 1,000 மாதங்களைவிடச் சிறந்தது.

    இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்றாலும், அதை நெறிப்படுத்தியவர் பொருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயாகும். இறைவன் மக்களுக்கு விதித்த ஐந்து கடமைகள் 1. நம்பிக்கை, 2.தொழுகை, 3.நோன்பு, 4.ஜகாத், 5.ஹஜ் என்பதாகும். இந்த ஐந்து கடமைகளில் நான்கு கடமைகளான நம்பிக்கை. தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவை ஒரு சேர நிறைவேற்றப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். இறையச்சத்தோடு கூடிய இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு மனிதனிடம் புலனடக்கத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தை அடக்கி குணநலன்களை மேம்படுத்துகிறது.

    மனிதனுடைய வருமானத்தில் அவனுடைய வாழ்வாதாரத்திற்குரிய செலவினங்கள் போக மீதமுள்ள பணத்தில் இரண்டரை விழுக்காடு ஜகாத் என்னும் வரியை கொடுக்க இறைவன் உத்தரவிட்டுள்ளான். 100 ரூபாயில் தொன்னூற்று ஏழரை ரூபாய் போக மீதமுள்ள இரண்டரை ரூபாய் அவனுடைய சொத்துக்கு பாதுகாப்பு தரவும், அந்த சொத்தை தூய்மைப்படுத்தவும் பயன்படுகிறது.

    ரமலான் மாதம் நோன்பிருந்தோர் பகலில் பசித்திருந்தனர். இரவில் தனித்திருந்து விழித்திருந்து இறைவனை வணங்கினர். இந்த வணக்க வழிபாடு இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால்தான் நோன்பிலிருந்து தன்னை வணங்கியோருக்கு இறைவனே பரிசு தருகின்றான் என்பதோடல்லாமல்,

    நேற்று பிறை பார்த்தோம். இறைவனிடம் கூலிபெற்றோம். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த இன்று ரமலான் பண்டிகை கொண்டாடுகிறோம். நேற்று வரை தன் அடியார்கள் பசித்திருப்பதை விரும்பிய இறைவன், இன்று அனைவரும் வயிராற உண்டு மகிழ வேண்டும் என விரும்புகின்றான். இருப்போர், இல்லார் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் மகிழ்ந்திருக்க ஈதுல் பித்ர் என்ற தானிய அறத்தை நடைமுறைப்படுத்தி இன்று அதிகாலையிலேயே தகுதியுள்ளோருக்கு வழங்கி இனிப்புகளோடு ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி சகோதர, சமயத்தினரோடு நல்லிணக்கம் காட்டி மகிழும் இந்த நாள் இனிய நாள்.

    அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

    எஸ்.பைசல் ஹுசைன், சிட்டி கார்ப்பரேசன்
    Next Story
    ×