search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனித நேயம் காத்து சகோதரத்துவத்தை வளர்ப்போம்
    X

    மனித நேயம் காத்து சகோதரத்துவத்தை வளர்ப்போம்

    அகிலத்தை படைத்து, அதில் உள்ள அனைத்தையும் படைத்து கடலையும், காற்றையும் தன் ஆளுகையில் வைத்து எங்களை படைத்து அனைத்து உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ்க்கே புகழனைத்தும் உரியதாகும்.
    அகிலத்தை படைத்து, அதில் உள்ள அனைத்தையும் படைத்து கடலையும், காற்றையும் தன் ஆளுகையில் வைத்து எங்களை படைத்து அனைத்து உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ்க்கே புகழனைத்தும் உரியதாகும்.

    இந்த புனித ரமலான் மாதத்தில் பசித்து நோன்பிருந்து இரவில் கண் விழித்து இறை வணக்கம் செய்து நாள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது தக்வா எனும் இறையச் சத்துடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பேரன்பு கொண்டும் வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள், உண்மை, நேர்மை, மனித நேயம் காத்து சகோதரத்துவத்தை வளர்த்து கொண்டதுடன் பிறருக்கு உதவி செய்தும், ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தர்மம் கொடுத்தும் இஸ்லாம் விதித்த வருமான வரியாம் “ஜக்காத்தை” மிக சரியாக கணக்கிட்டு கொடுப்பதால் இல்லாமை நீங்கி மகிழ்வுடன் வாழ வழி வகுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.

    இப்புனித மாதத்தில் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கண்ணியப் படுத்த இஸ்லாத்தின் இருதயமாம் புனித குர்ஆனை அவர்கள் வாயிலாக உலகிற்கு தந்து அல்லாவும் அவனது மலக்குகளும் நபிகளார் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதி, எங்களையும் ஸலவாத்து ஓத கட்டளையிட்ட இறைவன், இறை ரஹ்மத்தையும் பரக்கத் தையும் அள்ளித் தருகிறான்.

    இறைவனுக்கு நன்றி (சுக்ரியா)

    இந்த வருட புனித ரமலான் மாதத்தை அடைந்திட எங்களுக்கு ஆயுளை கொடுத்தது மட்டுமின்றி நோன்பு இருந்து தொழுகை செய்து ஜக்காத் தையும் கொடுக்கின்ற பாக் கியத் தையும் தந்த இறைவா! உன்னை போற்றுகின்றேன். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாம் ஹஜ். நிறைவேற்றா தார்களுக்கு ஹஜ் செல்ல வாய்ப்பையும், நிறைவேற்றிய வர்களுக்கு மீண்டும் செல்ல வாய்ப்பையும் தந்தருளுமாறு ஈருலக நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறைவா உன்னிடம் இறைஞ்சுகின்றேன்.

    முதலாம் பத்து நோன்பில் ரிஜ்க்கில் (உணவில்) பரக்கத்தையும், இரண்டாம் பத்து நோன்பின் பாவ மன்னிப்பையும், மூன்றாம் பத்து நோன்பில் நரகத்திலிருந்து விடுதலையையும் நாம் அனைவரும் பெற்றிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக இறை வனை வேண்டுகின்றேன். எனதருமை இஸ்லாமிய மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்களுக்கும் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் வியாபார பெருமக்களுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    அல்ஹாஜ் எம்.நாசர்கான் (எ) அமான் முன்னாள் முத்தவல்லி, சேலம் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டு மேனேஜிங் பார்ட்னர், மன்னான் பீடி பேக்டரி
    Next Story
    ×