search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா
    X

    திருச்சி நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா

    திருச்சி ஹத்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    திருச்சி ஹத்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சந்தன கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக தர்காவில் நத்தஹர்வலி சன்னதியில் (மஜார்) மலர்போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மலர்போர்வை போர்த்தப்பட்டபின் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் நிர்வாக தலைமை அறங்காவலர் ஏ.பி.டி. பாதுஷாஸ், மைசூர் செங்பட்னா தொழில்அதிபர் எஸ்.கே. சையத் சாதாத் சகாப், செய்யாறு எம்.எல்.ஏ. தூசிமோகன், முஸ்லிம் இலக்கிய மன்ற தலைவர் உஸ்மான், தர்கா பங்காளிகள் சையதுசர்புதீன், சலாவுதீன், சவுக்கத், தர்கா சதர் கலிபா சையது ஹயாத் கலந்தர், பரம்பரை பங்காளி சையது ஆரிப், ஹமீத் அலி சேட், தர்கா கலிபா மஜ்ஹருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சந்தன கூடு ஊர்வலம் காந்திமார்க்கெட் நுழைவு வாயில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு மேல் புறப்பட்டது. ஊர்வலம் பெரியகடை வீதி, சிங்காரதோப்பு உள்ளிட்ட வீதி வழியாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. அதன் பின் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி நத்தஹர்வலி தர்கா மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் தர்கா அமைந்துள்ள தெரு மற்றும் மதுரை சாலை மின்விளக்கு களால் ஜொலித்தன. அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) பீர் சர்குரு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு நிறைவு நாள் கச்சேரி நடைபெற உள்ளது. 
    Next Story
    ×