search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கியது. இதையொட்டி தர்காவை சுத்தம் செய்ய மீனவ பெண்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இந்து சமுதாய மீனவ பெண்கள் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது.

    இதன்படி நேற்று மீனவ பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வந்து தர்காவில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். விழாவில் வருகிற 11-ந் தேதி மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது. 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    30-ந் தேதி மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது என்று ஏர்வாடி ஹத்தார் நிர்வாக சபையின் கமிட்டியாளர்கள் தகவல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் தலைமையில் முன்னாள் தலைவர் அம்ஜத் உசேன், தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோர் முன்னிலையில் பலர் கலந்து கொண்டனர்.
    பள்ளப்பட்டி மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்தாண்டு 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி தர்கா வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    இதையடுத்து மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சந்தனம் பூசப்பட்டு பொதுமக்கள் அனைவரும் சென்று பிரார்த்தனை செய்தனர்.
    ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா  போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்குகிறது. உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் 23 நாட்கள் ஓதுவர். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார்.

    10-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும்.  ஜூன் 11-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

    சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந்தேதி அதி காலை தர்காவிற்கு சந்தனக்கூளடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஜூன் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
    செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    கீழ்வேளூர் அருகே தே.மங்கலம் ஊராட்சி மூன்றாம் வாய்க்கால் கரையில் உள்ள செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது..

    முன்னதாக சிக்கல் பள்ளிவாசலில் இருந்து புனித கொடி கொண்டு வரப்பட்டு தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஒதி கொடி ஏற்றப்பட்டது. வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மூன்றாம் வாய்க்கால்கரை கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவில் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
    முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தை தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.

    இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்குகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் வலம் வந்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் ஜெய்க்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
    தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும்.

    ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ரம்ஜான் பண்டி கையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். த.மு.மு.க. சார்பில் இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகை யிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மற்ற மதத்தினரும் தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரித்த்துக் கொண்டனர்.

    ரம்ஜான் தொழுகையை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிவாசல்களின் அருகிலும், பள்ளிவாசல்கள் இருக்கும் சாலைகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இதேபோன்று ஆவடி, தாம்பரம் பகுதிகளிலும் தொழுகை நடைபெற்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பா டுகள் விலகி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதால் இஸ்லாமியர்கள் 2 ஆண்டு களுக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
    நோன்பு காலத்தில் இறைவனை அதிக ேநரம் தொழுது, நினைவுகூர்ந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். இந்த புனித ரமலான் காலத்தில் தான் ஜக்காத் என்னும் தர்மம் அளிப்பது அவசியமாகும். தங்களது வருமானத்தில் இருந்தும், சொத்துகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவை ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    “ரமலானின் மூலம் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை என் சமூக மக்கள் அறிந்து கொண்டால், வருடம் முழுவதும் நோன்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறுவார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க ரமலான் நோன்பை நாம் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ரமலான் நமக்கு வழங்கிய படிப்பினைகள் என்ன? இந்த ரமலான் நோன்பின் மூலம் நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொண்டோம் என்பதை சிந்தித்து அதை மற்ற காலங்கள் முழுவதும் செயலாற்ற வேண்டும்.

    இந்த ரமலான் நோன்பு மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் குறிப்பிடத்தக்கது உணவு கட்டுப்பாடு. நோன்பு காலத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் இறையச்சத்துடன் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். இதன் மூலம் நமது உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைந்தது.

    இதுகுறித்து நபிகளார் கூறினார்கள், ‘நோன்பு வையுங்கள், சுகம் பெறுவீர்கள். அதிகாலை ஸஹர் உணவில் பரக்கத் உண்டு’ என்றார்கள்.

    மற்ற காலங்களில் உணவு கட்டுப்பாடு எப்படி என்பதையும் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். பசித்தபின் சாப்பிட வேண்டும். பசி இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயிற்றில் மூன்று பகுதியாக இடம் ஒதுக்க வேண்டும். ஒரு பகுதி உணவு, ஒரு பகுதி நீர், ஒரு பகுதி சுவாசிப்பதற்கு சுலபமாக காலியாக வைக்க வேண்டும்.

    இந்த உணவு கட்டுப்பாடுகளை நாம் ரமலான் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலங்களிலும் கடைப்பிடித்து வந்தால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.

    அடுத்து, இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் நோன்பை திறக்கவேண்டும் என்பது ரமலானில் நாம் கற்றுக்கொண்ட பாடம். அதுபோல எந்தச் செயலையும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும். இது நமக்கு நற்பலன்களை அள்ளித்தரும்.

    நோன்பு வைத்திருந்த காலங்களில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளில் எத்தனையோ பேணுதல் கிடைத்தது. பேச்சு குறைந்தது. பார்த்தல், கேட்டல், கரங்களின் செயல்பாடு என ஒட்டு மொத்த உறுப்புக்களும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. இனிவரும் காலங்களிலும் இது போன்று நடந்து கொள்ளப்பழகிக்கொள்ள வேண்டும்.

    ரமலான் மாதம் முழுவதும் ஐந்து நேரத் தொழுகையையும் விடாமல் ஓடோடிச் சென்று தொழுவதையும் கண்டோம். அதுபோல மற்ற காலங்களிலும் ஐந்து நேரத்தொழுகையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். கேட்போருக்கும், கேட்காதவருக்கும், ஏழை எளியவருக்கும் கொடுத்து உதவி செய்ய ஊக்கமளித்தது ரமலான். அதுபோல மற்றகாலங்களிலும் நம்மால் முடிந்த அளவு இரக்க சிந்தனையுடன் தர்மம் செய்திடவேண்டும்.

    இதுபோல இன்னும் பல ரமலான்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயீல் காஷிபி, தாங்கல், சென்னை.
    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    ‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: தர்கீப்)
    தான தர்மங்கள் பலவிதங்கள். ஒவ்வொரு விதமான தர்மமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அன்னதானம் பசியை போக்குகிறது. நீர் தானம் தாகத்தை தீர்க்கிறது. கண் தானம் பார்வையை கொடுக்கிறது. ரத்த தானம் உயிரை காக்கிறது. தானம் குறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீபின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி)

    ரகசியமாக தானதர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணிக்கிறது. தீய மரணம் சம்பவிப்பதிலிருந்து தடுக்கிறது. ஒருவரின் வலது கை செய்யும் தர்மம், அவரின் இடது கைக்கே தெரியாமல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், அவர் இறைவனின் நிழலில் நிழல் பெறுவார்.

    ‘தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு நிழல் தருவான். அவர்களில் ஒருவர் யாரெனில், தமது இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக்கரத்தால் ரகசியமாக தர்மம் செய்பவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, தானதர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: தர்கீப்)

    இந்த தானங்கள் வரிசையில் நோன்புப் பெருநாளின் தானிய தர்மமும் இடம் பெறுகிறது. நோன்புப் பெருநாளின் அதிகாலையில் பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றப்படும் தானிய அறம் ‘ஸதகதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள் தர்மம்) என்று அழைக்கப்படுகிறது.

    ஒருவர் நோன்பு நோற்கும் போது அவர் செய்யும் சிறு சிறு தவறுகளால் அவரின் நோன்புகள் விண்ணை எட்டாமல் மண்ணிற்கும், விண்ணிற்கும் இடையே தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவர் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றும்போது, நோன்பின் குறைகள் நிறைவு செய்யப்பட்டு, அவை விண்ணுலகை வந்தடைகின்றன.

    ‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். அது நோன்பாளியிடம் இருந்து வெளிப்படக்கூடிய வீண் செயலையும், தீய பேச்சையும் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியையும் போக்கி விடுகிறது. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பு அதைக் கொடுப்பது ‘ஸதகதுல் பித்ராக’ (நோன்புப் பெருநாள் தர்மமாக) அங்கீகரிக்கப்படுகிறது. தொழுகைக்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மது அபூதாவூத்)

    ‘மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் உமர் (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘ரமலானின் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்களான அடிமை-சுதந்திரமானவர், சிறியவர் - பெரியவர், ஆண்-பெண் ஆகியோர் மீது தீட்டாத கோதுமை, அல்லது பேரீச்சம்பழம் இவைகளிலிருந்து ஒரு ஸாஉ அளவை (சுமார் 2½ கிலோ) நபி (ஸல்) நிர்ணயித்தார்கள். பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பு அதை வழங்கிடும்படி ஏவினார்கள்’.

    (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
    ‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
    இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்பு மிக்கது ரமலான் மாதம். இந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தை யார் அடைகின்றாரோ அவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் 2:185 கூறுவதாவது:-

    “ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் என்னும் வேதம் இறக்கப்பட்டது. அது நன்மை, தீமையைப் பிரித்தறிவித்து, நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.

    ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், அக்காலத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ரமலான் அல்லாத மற்ற நாள்களில் விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு நோன்பு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

    மேலும் தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அவ்வாறே அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்”.

    புனித ரமலான் மாதம் குறித்து நபிகளார் கூறியதாவது:- ‘மக்களே! உங்களிடம் ஒரு மாதம் வந்துள்ளது. அது கண்ணியமிக்க மாதம். பொறுமைக்குரிய மாதம். உங்களில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் மாதம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்வாதாரங்களை இறைவன் உங்களுக்கு உயர்த்தித் தருகிறான்’.

    ரமலான் மாதம் பிறந்து விட்டால் வானத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான். மனிதர்களின் பிழைகளை மன்னிக்க அல்லாஹ்வின் அருள் மழை பொழியும் மாதமாக, நன்மைகள் நிறைந்த பெட்டகமாக புனித ரமலான் மாதம் அமைந்துள்ளது. ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நற்செயல்களுக்கும், கூடுதல் வணக்கங்கள் போன்றவற்றுக்கும் 70 மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன.

    ‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.

    பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறவும், பாவங்களில் இருந்து தடுத்துக்கொள்ளவும் கேடயம் போல ரமலான் நோன்பு செயல்படுகிறது. எனவே சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை நாம் கடைப்பிடித்து எல்லாம் வல்ல இறைவனிடம், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவோம். மேலும் நோய்களில் இருந்து உடலையும், தீயவற்றில் இருந்து உள்ளத்தையும் காக்கும் கேடயமாக விளங்கும் நோன்பைக் கடைப்பிடித்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.

    காரணம் இன்றி ரமலான் நோன்பை விட்டுவிட்டால் இதற்கு ஈடாக எந்தப்பரிகாரமும் செய்ய முடியாது. இதுகுறித்து நபிகளார் கூறும்போது, “ஒருவர் தக்க காரணம் இன்றி ரமலானின் ஒரு நோன்பை விட்டுவிட்டு அதற்கு பதிலாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும், அது ரமலான் மாத நோன்புக்கு ஈடாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே அருள்மழை பொழியும் புனித ரமலான் மாதத்தில் முறையாக நோன்பு நோற்று, ஐந்து வேளை தொழுகை, தஹ்ஜத் மற்றும் தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்போம். நோன்பாளிகள் மட்டுமே செல்லக்கூடிய ‘ரய்யான்’ என்ற சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் காலம் என்பதால் இந்த நோன்பு காலத்தில் அதிகமதிகம் திருக்குர்ஆன் ஓதுவோம், தான தர்மங்கள் செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.

    பேராசிரியர் அ முகமது அப்துல் காதர், சென்னை.
    பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
    மனிதன் மனோ இச்சைகளுக்கு முன்பு பலவீனம் அடைந்து விடுகின்றான். எனவே, அவற்றை எதிர் கொண்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள நான்கு வகையான அம்சங்கள் தேவை . அவை : 1) இறை நம்பிக்கையில் உறுதி, 2) மனவலிமை , 3) உறுதியான எண்ணம், 4) சாந்தம் போன்றவை ஆகும்.

    ஒரு நோன்பாளி சூரியன் உதயமானதிலிருந்து அது அஸ்தமனம் ஆகும் வரைக்கும் உண்ணாமலிருப்பது, பருகாமலிருப்பது, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி இருப்பது ஆகிய அனைத்தும் நோன்பாளியின் இறை நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

    பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.

    அனைத்தையும் அனுபவிக்க ஏகபோக உரிமை இருந்தும், அவருக்கு அதன் மீது நாட்ட மில்லாமல் இருப்பது அவரின் உறுதியான எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

    அவர் அனைத்தையும் தாங்கும்போது எதையும் தாங்கும் இதயமும், பொறுத்துக் கொள்ளும் சாந்தமும் அவருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த நான்கு வகையான செயல்களால் ஒரு நோன்பாளி பலம் பெற்று தமது நோன்புகளை தொடர முடிகிறது.

    ‘ஈமான் கொண்டோர்களே ! உங்களுக்கு முன்இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)

    மேலும், நோன்பு தமது பசியின் கொடுமையை உணர்வதன் மூலம், ஏழைகளின் பசியையும் உணர்த்துகிறது. நமக்கு உணவளித்த இறை வனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.

    நோன்பு நான்கு விதமான நோக்கங்களுக்காக நோற்கப்படுகிறது.

    1) ஆன்மிக நோன்பு, 2) அரசியல் நோன்பு, 3) ஆரோக்கிய நோன்பு, 4) அழகிய நோன்பு

    ஆன்மிக நோன்பு என்பது மதம் சார்ந்த கடமை . அது இறைவனின் ஆணைக்கிணங்க , அவனின் திருப்தியை பெற நோற்கப்படுகிறது. அரசியல் நோன்பு என்பது ஒருவர் தமது உரிமைக்குரலை அரசாங்கத்தின் பக்கம் தெரிவிக்க , அரசின் கவனத்தை பெ ற உண்ணாவிரதம் மேற்கொள்வது.

    ஆரோக்கிய நோன்பு என்பது மருத்துவரின் அறிவுரையின்படி ஒரு சில உணவுகளை சில காலங்கள் வரைக்கும் தவிர்த்து கொள்ளும்படி அவரின் கூற்றை ஏற்று உண்ணாமல் இருப்பது, பத்தியம் இருப்பது. அழகிய நோன்பு என்பது உடல் எடை கூடாமல் இருக்க , அழகிய தோற்றம் பெற உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது.

    இந்த நான்கு வகை காரணங்களுக்காக உண்ணாமல், பருகாமல் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்மிக நோன்பு நோற்கும் போது, கடமையும் நிறைவேறுகிறது. இறைவனின் திருப்தியும் கிடைத்துவிடுகிறது. இத்துடன் அனைத்துவித உடல்சார்ந்த நலன்களும், உலகம் சார்ந்த பயன்களும் கிடைத்து விடுகிறது.

    ‘ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    இறையச்சம், இறையருள், பாவமன்னிப்பு, உடல் ஆரோக்கியம் உள்பட ஏராளமான நற்பாக்கியங்களைத்தரும் ரமலான் நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடித்து நன்மைகள் பெறுவோம், ஆமீன்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
    திருநெல்வேலி டவுண்.
    நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
    எந்தநேரமும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். எந்தநிலையிலும் இறைக்கட்டளைக்கு முதலிடம், இறை உவப்பே தனது இலக்கு என்கிற பயிற்சியினைப் பெறுகிறார்கள்.

    பகலில் நோன்பு நோற்பதன் மூலமும், இரவில் தொழுகையின் மூலமும், இப்பயிற்சியினைப் பெறுகின்றார்கள். குர்ஆனுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பும் மிக முக்கிய காரணம் ஆகிறது. குர்ஆனை ஓதுதல், கேட்டல், புரிதல் ஆகியவற்றின் மூலமாக பயிற்சி மெருகூட்டப்படுகிறது.

    வழக்கமாக உணவு உண்ணும் வேளைகளில் உணவை உண்ணாமலும், ஆழ்ந்து தூங்கக் கூடிய நேரத்தில் உண்ணுவது என்ற அளவில் நமது செயல்பாடுகளை இறைக் கட்டளைகளுக்காக மாற்றிக் கொள்கின்றோம். அவ்வண்ணமே தாம்பத்ய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றோம், இறைவன் கட்டளை என்பதால். அவன் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற உள்ளுணர்வு நம்முள் உண்டாகின்றது.

    இவ்வாறான நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.

    இம்மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்காக கூலி பன்மடங்காக இறைவன் வழங்குகின்றான். இறைநம்பிக்கையாளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கூடுதலாக நன்மைகளை அறுவடை செய்கின்றார்கள். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது இவ்விதமாக பிரார்த்தனை செய்வார்கள்:

    “தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகிவிட்டது, அல்லாஹ் நாடினால்”.

    நோன்பாளியின் அனைத்து செயல்களும் இறைவனின் கூலியை எதிர்பார்த்துதான் இருக்கின்றன. நோன்பு திறக்க நமது பள்ளிவாசல்களில் செய்யப்படும் ஏற்பாடுகளும், மக்கள் அதற்காக செலவு செய்ய போட்டி போடுவதுமாக - இறைநம்பிக்கையாளர்கள் இறையருளை பெற காட்டும் ஆர்வம்தான் என்ன! கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    ஆக, நன்மையான செயல்களை தொடருவோம். நன்மை தட்டை கனக்கச் செய்வோம். பெற்ற பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்போம். அதுதான் நாம் ரமலான் மாதத்தின் மூலம் பெறக் கூடிய ‘தக்வா’ என்ற இறையச்சமாக திகழ முடியும்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
    ×