search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அதிர்ஷ்டம் கிடைக்க கடக ராசியினருக்கான பரிகாரங்கள்
    X

    அதிர்ஷ்டம் கிடைக்க கடக ராசியினருக்கான பரிகாரங்கள்

    கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்நாளில் எப்போதும் யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    “கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த” ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கடக ராசியினர் தங்கள் வாழ்வில் என்றென்றும் மேன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள் பெருகவும் கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பலன்களை பெறலாம்.

    திங்கட் கிழமைகள் தோறும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்க வேண்டும். அதேபோல கோயிலில் இருக்கும் அம்பாளுக்கு மல்லிகைப்பூ சாற்றி வணங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் உங்கள் ராசிக்குரிய நவக்கிரக நாயகனான சந்திர பகவானை வழிபடுவது உங்கள் ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.

    சந்திரன் பெண் தன்மை நிறைந்த ஒரு கிரகம் ஆவார். எனவே வருடம் ஒரு முறை உங்கள் உறவுகளில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் மனமகிழ புடவை, அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை தானமாகத் தந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவது உங்களுக்கு இருக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும்.

    முக்கியமான காரியங்கள் செய்யும் போதும், பணம் சம்பந்தமான விவகாரங்களில் ஈடுபடும் அன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்கோ இருக்கும் வெள்ளை நிற பசு மாட்டிற்க்கு அகத்திகீரை, பழம் போன்றவற்றை தந்து பசுமாட்டை வணங்கி செல்வது உங்களின் தனவரவை அதிகப்படுத்தும். உங்கள் தாயார் கையால் ஒரு வெள்ளி நாணயம் மற்றும் சிறிது அரிசியை வாங்கிக்கொண்டு, ஒரு வெள்ளை நிறத் துணியில் அவற்றை போட்டு ஒன்றாக முடிந்து, உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்வது நன்மையான பலன்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.
    Next Story
    ×