search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தாமதத்தை ஏற்படுத்தும் தோஷங்கள்
    X

    திருமண தாமதத்தை ஏற்படுத்தும் தோஷங்கள்

    பொதுவாக ஜாதக ரீதியாக பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது? அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய நவ நாகரீக உலகில் திருமணத் தடைகள், தாமதங்கள் ஆண் பெண் என இருபாலருக்கும் பெரும் வருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக ஜாதக ரீதியாக பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது? அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    செவ்வாய் தோஷம் தவிர  ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகிய தோஷங்களும் திருமண தாமதத்துக்கு காரணமாக அமைகின்றது.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1,2,4,7,8, ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும்.செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தில் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

    ராகு-கேது தோஷம்

    லக்னம், 2,7,8, ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத்துக்கு 8-ஆம் இடத்தில் சூரியன், ராகு, கேது,சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி ஆகும். 8 ஆம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தியாகும்.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,7,8, ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதாரயோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.

    களத்திர தோஷம்

    களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண தாமதம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரியோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் இரண்டு அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அது கட்டாயம் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

    திருமண தோஷங்கள் நீக்கி மங்கல வாழ்வைத் தரும் திருவிடந்தை

    சென்னைக்கு அருகில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிடந்தை திருத்தலம் . எத்தகைய திருமண தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் தீர்த்து திருமண வாழ்க்கையை உறுதி செய்யும் அற்புதமான பரிகாரத் தலமாக விளங்குகிறது திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருத்தலம்.

    திருவிடந்தை திருத்தல மண்னை மிதித்து நித்திய கல்யாணப் பெருமாளை கண்குளிர தரிசனம் செய்து திரும்பும் கன்னிப் பெண்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள் தங்களின் தோஷம் நீங்கப் பெறுகிறார்கள். அடுத்த முறை திருமணக் கோலத்தில் தம்பதியினராக பெருமாளை சேவிக்க வருகிறார்கள்.
    Next Story
    ×