search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண் திருஷ்டி நிவர்த்தி பரிகாரங்கள்
    X

    கண் திருஷ்டி நிவர்த்தி பரிகாரங்கள்

    கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், பொருள் இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    கண் திருஷ்டி நீங்குவதற்கு, ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

    தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.

    வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

    திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.

    சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான். சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான். திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.

    பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் நலக்குறை இருந்து கொண்டே இருக்கும். கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள். அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.
    Next Story
    ×