search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவக்கிரக தோஷம் நீங்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
    X

    நவக்கிரக தோஷம் நீங்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இந்த கோவில் இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.

    இது ஓரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

    இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள் மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாகும். 
    Next Story
    ×