search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்களை நீக்குமா நாக வழிபாடு?
    X

    தோஷங்களை நீக்குமா நாக வழிபாடு?

    நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
    நாகராஜாவை வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் அதிகம். நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

    இறை அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு. ஆனாலும் ராகுவும், கேதுவுமே வழிபடப்படுகின்றன. நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

    திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும், மற்ற காலக்கட்டங்களில் ஒருவரின் ஜாதகத்தைப் பார்க்கும் போதும் அவரது ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கிறதா என்பதை பார்ப்பது வழக்கம். நாக தோஷம் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

    நமது இந்து மத சாஸ்திரங்களில் காமதேனு, பசு மாடு ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமான இடம் வகிப்பது நாகங்கள் மட்டுமே. பத்மா, ஐந்து தலைக்கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக்கொண்ட சேஷநாக் அல்லது ஆதிசேஷன் ஆகிய நாகங்கள் நம்முடைய தர்மத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அந்தத் திருத்தலத்தில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன் உள்ளன. வெளிச் சுவர் மற்றும் நுழைவாயில் கோபுரத்திலும் நாக சிலை அமைந்துள்ளது

    நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நாக தேவதைகள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்பு புற்றுடன் கூடிய நாகங்கள் அம்மனாக பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி போன்றவை முக்கியமானவை.

    சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அதுவழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பலவிதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவை.

    புத்திர பாக்கியம் கிடைக்க நாகங்களில் ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், நோய் நிவாரணம் நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்கலாம். நமது பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப்பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கிட வாழ்க்கை நலம் பெறும்.
    Next Story
    ×