search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது தோஷம் - எளிய பரிகாரங்கள்
    X

    ராகு கேது தோஷம் - எளிய பரிகாரங்கள்

    ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.
    ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

    பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள். ராகு கேது தோஷங்களால் ஏற்படும் விளைவுகள், பரிகாரங்கள் ஆகியவற்றையும் ராகுவைப் பற்றியும் அறிவோம்.

    சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

    கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும்.

    ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது சிறப்புடையதாகும்.

    ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.
    Next Story
    ×