search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை
    X

    நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை

    நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.
    நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.

    * வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் கொடுப்பது, பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பது, கையில் வெள்ளி வளையம் அணிவது, காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 15 நாட்கள் கொடுப்பது, நீர் அருந்துவதற்கு வெள்ளி டம்ளர்களை பயன்படுத்துவது போன்றவை சுக்ரனின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.

    * நீலம் மற்றும் பச்சை நிறத்தினால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் மூலமாக சனி மற்றும் புதன் கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    * தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிந்து கொண்டால், குருவருள் கிடைக்க வழிபிறக்கும். அதே போல் வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதி கரிக்கும்.

    * கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதன் மூலமும், தோலில் செய்த மணிபர்சை பணம் வைக்க பயன்படுத்தாமல் இருப்பதும், சனியின் கிரக பாதிப்பை ஓரளவு குறைக்கும்.

    * கைப்பிடி அரிசியை எடுத்து, அதனை அருகில் உள்ள நதி அல்லது ஏரியில் விடுவதன் மூலம், சந்திரன் பலன் அதிகரிக்கும்.

    * வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வது, தினமும் சூரியனுக்கு நீர் படைப்பது போன்றவை சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது, புதன் பலத்தைக் கூட்டும், பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

    * 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது பிரீதிக்கு உகந்தது. அதே போல் உளுந்து தானம் செய்தால் ராகு பிரீதிக்கு உகந்தது.

    * சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை தானமாக அளித்தால், செவ்வாய் கிரக பாதிப்பு விலகும். வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும். 
    Next Story
    ×