search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு தரும் உடல் பாதிப்புகள்
    X

    ராகு தரும் உடல் பாதிப்புகள்

    ராகு பகவான் தரக்கூடிய நோய் என்ன, ராகு பகவான் எந்த ராசியில் இருந்தால் எந்த வகையான நோய்களை தருவார் என்று குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து. அதற்கு அனுபவத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஜோதிட மருத்துவத்தில் இருந்து விலகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொண்டு ராகு செய்யும் யோகம் பற்றி பார்ப்போம்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு பலமாக அமைந்தால், பல நாள்பட்ட நோய்கள், கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * ராகு பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், மங்கலான பார்வை, என்ன நோய் என்று இனம் காண முடியாத அளவில் நோய்கள் வரக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தந்தை வம்ச வழி நோய்கள் வரக்கூடும்.

    * ராகு நீச்ச ராசியான ரிஷப ராசியில் ராகு நின்று இருந்தால், சுவாசக் கோளாறு அவ்வப்போது வரும். விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய்களுக்கு ராகுவே காரணம்.

    * ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம்.

    * ராகு பகை கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய், ஆகிய கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் கெட்ட பழக்க வழக்கத்தால் பல நோய்களை தேடிக் கொள்வார்கள். தனக்குரிய நோய்கள் பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார். இவர்களுக்கு பெரும்பாலும் மரண பயமே பாதி நோய்க்கு வழி வகுக்கும்.

    * ராகு குரூரர் தன்மை கொண்ட கிரகம் என்பதால் 6, 12-ல் மறைவு பெற்றால் அதிர்ஷ்டம் தரும், அதே நேரம் 8-ல் நின்றால் நெஞ்சில் கபம் கட்டும். இதன் மூலம் சுவாசம் தடைபடும். உண்ணும் உணவு நஞ்சு ஆகும். சிலருக்கு விந்து பாதிக்கும். விந்து உற்பத்தி ஆகி செல்லும் குழாய்களில் அடைப்புகள் உருவாகும். தீராத காம இச்சை உடையவர்களாக இருப்பர்.

    * ராகு கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ தனக்கு உண்டான நோய்கள் குறித்து மன விரக்தி அடைவார். நோய் தீர்க்கும் மருந்து எடுத்துக் கொள்ளாமல், மாற்று மருந்துகள் எடுத்துக் கொண்டு அவதிப்படுவார்கள். தீர்க்க முடியாத நோய்களில் சிக்கி தவிப்பார்கள்.

    * ராகு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியுடன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படலாம். புதிய நோய்கள், தோல் அரிப்புகள், உடலில் கட்டிகள் வரக்கூடும். மருத்துவர் கண்டு பிடிக்க முடியாத மர்ம நோய்கள் வரக்கூடும்.

    * ராகு கிரகத்திற்கு பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், ஜாதகருக்கு நோய் பயம் வாட்டி எடுக்கும். காற்றில் பரவும் தொற்று நோய்கள் தாக்கக் கூடும். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாகும். பெரு குடல், சிறுகுடல் வழியாக வாயுத் தொல்லை இருக்கக் கூடும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும்.

    உலகத்தில் நடக்கும் பாதிப்பு

    ராகு கொடிய குரூரர் கிரகம் என்பதால், ராகு எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவார். பொதுவாக ராகு சுயசாரம் அல்லது கேதுசாரம் பெற்று இருந்தால் ராகுவின் உக்கிரம் அதிகமாகும். இதனால் உலகில் புயல் மூலம் சூறாவளி காற்றைக் கொடுத்து பொதுமக்களை அலற வைப்பார். மருந்தே கண்டுபிடிக்க முடியாத நோய்களை கொடுப்பார்.

    காற்று மூலம் விஷ வாயு கொடுத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவார். பூமிக்கு அடியில் நடக்கும் சுரங்கப் பணியில் உயிரிழப்பு, எரிமலைகள், பூகம்பம் அனைத்துமே ராகுவே காரண கர்த்தாவாக இருக்கிறார். விஷ பூச்சிகள் நிறைந்த காடுகள் அழிவதும், பாம்புகள் நிறைந்த காடுகள் அழிவதும், காட்டில் உள்ள விலங்குகள் நகரத்திற்குள் வருவதும், விந்தையான சம்பவங்கள் மூலம் மக்களை கிலி அடிப்பது போல் மிரள வைப்பது எல்லாம் ராகு கிரகத்தால் தான் நடக்கின்றன.

    ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    Next Story
    ×