search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி பகவான் தரும் பாதிப்புகள்
    X

    சனி பகவான் தரும் பாதிப்புகள்

    நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு.
    நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம் போன்றவற்றுக்கும் சனி பகவான் தான் காரணமாக இருக்கிறார்.

    மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த, தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.

    ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபடுவது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன்.

    பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு. தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், ஒழுக்க நெறி தவறிய ஆன்மிக மடம், ஆலயங்கள் ஏற்படவும் சனியே காரணமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் ஆயுள் முடியும் அன்றைய தினம் முழுவதும் சனியே அந்த நபரை ஆதிக்கம் செய்கிறார்.

    -ஆர். சூரிய நாராயணமூர்த்தி. 
    Next Story
    ×