search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வியாபார நஷ்டம் தீர்க்கும் தலம்
    X

    வியாபார நஷ்டம் தீர்க்கும் தலம்

    இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், பிற்கால சோழர் கலைக்கு சான்றாகவும், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டும் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    இந்த ஆலயம் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இவ்வூர் மதுராந்தகபுரம் என்ற பெயரோடு பெரிய வணிக நகரமாக திகழ்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த எண்ணெய் வியாபாரம் செய்யும் செட்டியார் ஒருவர், தன்னுடைய வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, குடும்ப பாரம் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    சிறந்த சிவ பக்தரான அவரது கனவில் தோன்றிய இத்தல இறைவன், ‘மகா சிவராத்திரி அன்று என்னை பூஜித்து அருள் பெருவாயாக!’ என்று கூறி மறைந்தார். மறுநாள் சிவராத்திரி என்பதால் அந்த வியாபாரி, இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தார். இதையடுத்து அவரது வியாபாரம் பெருகி, நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் பெரும் பொருள் சேர்த்தார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.

    எனவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், பொருள் சேர்க்க நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று, இங்குள்ள அடியார் தீர்த்தத்தில் நீராடி தல இறைவனை பூஜிப்பதால் வியாபார நஷ்டம் தீர்ந்து வியாபாரம் இரட்டிப்பாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    Next Story
    ×