search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்திரனும் - உடல் நோயும்
    X

    சந்திரனும் - உடல் நோயும்

    சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.
    * சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.

    * சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

    * சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும் நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.

    * சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் ஒன்றாக இருப்பது. அதாவது உத்திரம் 1-ம் பாதம் மற்றும் பூரட்டாதி 4-ம் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் போது, ராசி அதிபதியும், நட்சத்திர அதி பதியும் ஒருவராக இருக்கிறார்கள். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் சந்திரன் நின்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கும்.

    * குரு, புதன், சுக்ரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.

    * சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய புதிய நோய்கள் வந்து போகும்.

    * சனி ஆட்சி செய்யும் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கம், உணவு முறைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் வரக் கூடும்.

    * சந்திரனோடு, சுப கிரகங்களான குரு, புதன், சுக்ரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.

    * சந்திரனோடு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.

    * சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்.

    * சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏதாவது ஒரு உடல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
    Next Story
    ×