search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் தொல்லை: எந்த ராசிக்கு என்ன பரிகாரம்
    X

    கடன் தொல்லை: எந்த ராசிக்கு என்ன பரிகாரம்

    கடன் தொல்லை தீர எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும்.

    இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும். அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    மேஷம்: தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

    ரிஷபம்: ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

    மிதுனம்: தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும் - கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்.

    கடகம்: ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

    சிம்மம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

    கன்னி: சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

    தனுசு: வீடு இழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

    மகரம்: சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

    கும்பம்: வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றொருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

    மீனம்: தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

    Next Story
    ×