search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா
    X

    திருச்சி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா

    திருச்சி வரகனேரி புனித பதுவை அந்தோணியார் ஆலய 10 நாள் திருவிழா தொடங்கியது. இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் அந்தோணியாரின் பக்தி முயற்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.
    திருச்சி வரகனேரியில் பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 199-ம் ஆண்டு திருவிழாவாக நேற்று மாலை கொடியோற்றத்துடன் தொடங்கியது. அதன்படி இந்த விழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.

    நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியால் புனிதரின் கொடியேற்றமும், அதனைத்தொடர்ந்து சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியும் நடந்தது. இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 11-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு அந்தோணியாரின் பக்தி முயற்சியும், 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

    வருகிற 12-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், அதனைத்தொடர்ந்து ஆடம்பர உள்வீதி தேர் பவனியும் நடைபெறுகிறது. 13-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் மறைமாவட்ட ஆயர் ஜூட்ஜெரால்டு பால்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர வெளி வீதி தேர்பவனியும் நடைபெறுகிறது.

    14-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதான திருப்பலியும், மாபெரும் அன்னதானமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தெரு நிர்வாகம் சார்பில் தலைவர் முத்தப்பன், துணைத் தலைவர் பல்த்தசார், செயலாளர் பாபு பெர்னான்டஸ், துணைச் செயலாளர் கஸ்பர் ரீகன், பொருளாளர் பிராங்கிளின் ராஜேஸ், துணைப்பொருளா ளர் ஆரோக்கியராஜ், உப தேசியார் ஜோசப், சாமுவேல் மற்றும் தெரு மக்கள், செயற்குழு, புனித பதுவை அன்பியம், அன்னை தெரசாள் அன்பியம், நம்பிக்கை, மாதா மரியாயின் சேனை, விழாக்குழுவினர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×