
பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழாவில் பெருமாள் சிம்மவாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை இரு வேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் பிரம் மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் கருடசேவை வருகிற 19-ந் தேதியும், திருத்தேர் விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) விமர்சையாக நடைபெற உள்ளது.
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.
இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்திரவின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.