search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை நவநாள் திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை, பொதுக்கூட்டம் போன்றவை நடைபெறும். 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி காலை 6 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். இதில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர் தொடர்ந்து பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாலமோன், பங்கு அருட்பணிப்பேரவை, இறை மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×