search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: வெற்றியுள்ள வாழ்வு
    X

    தவக்கால சிந்தனை: வெற்றியுள்ள வாழ்வு

    நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம்.
    நம்மை படைத்த தேவன் நம் உள்ளத்தை ஆராய்ந்திருக் கிறார். கடந்த காலத்தை குறித்து நமக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம். நிகழ்காலத்தை குறித்து அறிந்திருக்கலாம். ஆனால் ஏன் நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்முடைய தேவன் நமது முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

    நாம் நோய்வாய்பட்டால் பல்வேறு மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர்களை பார்த்து வியாதியில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறோம். இப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

    அப்படி செய்யும் போது தேவன் நமக்கு நிறைவான வெற்றியுள்ள வாழ்வை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவர். தேவனே என்னை முற்றிலும் அறிந்து கொள்ளும் என்பதே தேவபக்தனின் வேண்டுதலாக உள்ளது. எனவே தூய்மையான வாழ்வு வாழ, நம்முடைய சிந்தனைகள் நல்ல சிந்தனையாக மாற தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

    கெட்ட சிந்தனை இருதயத்தில் பாவம் செய்ய தூண்டுகிறது. இருதயம் கேடுள்ளதுமாயிருக்கிறது என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக பரிசுத்தமாக வைத்திருந்தால் இருதயத்தில் நல்ல சிந்தனை உருவாகும்.

    இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையுடனும், நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாக உள்ளதா? சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்று தேவ சமூகத்தில் அனுதினமும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    வேதாகமத்தில் சங்கீதம் 139-ம் அதிகாரம் 23, 24 வசனங்களில் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் என்று எழுதப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும். நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம். அப்போது தேவன் நம்முடைய இருதயத்தில் நல்ல சிந்தனை களை சிந்திக்க உதவி செய்வாராக ஆமென்.

    சகோ.ஜோசப், பல்லடம்.
    Next Story
    ×