search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏசுவின் தாகம்
    X

    ஏசுவின் தாகம்

    அன்பு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள். ஏசுகிறிஸ்து நமது ஆண்டவர், நம் ரட்சகர் அவருக்கு ஏன் தாகம்? எதின் மீது தாகம்? என்று பார்ப்போம்.
    அன்பு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள். இந்த தபசுக்காலத்தில் தவக்கால செய்தியாக ஏசுகிறிஸ்துவின் தாகத்தை தியானிப்போம். ஏசுகிறிஸ்து நமது ஆண்டவர், நம் ரட்சகர் அவருக்கு ஏன் தாகம்? எதின் மீது தாகம்? என்று பார்ப்போம்.

    ஆண்டவரின் தாகம் அவருடைய சரீரத்தில் ஏற்பட்டது என்பதுபோல தோன்றினாலும் அவர் நம்மேல், அவர் படைத்த ஆத்மாக்கள் மேல் அதிகமாக இருந்தது. யோவான் 19:28-ல் தாகமாயிருக்கிறேன் என்றார். அப்பொழுது காடி நிறைந்த பாத்தி ரத்தில் கடற் காளானை தோய்த்து ஈசோப்புத்தண்டில் மாட்டி அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். கசப்பு நிறைந்த காடியை அவருக்கு குடிக்க கொடுத்தார்கள். எவ்வளவு கொடுமை! நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள் என்று போதித்த நீதியின் சுடர் ஏசுவின் தாகத்திற்கு கசப்பு கலந்த காடியா? ஏசு எப்பொழுதும் தேவனோடு உறவாடிக்கொண்டிருந்தார்.

    சங்கீதம் 42:2-ல் என் ஆத்மா தேவன் மேலேயே தாகமாயி ருக்கிறது என்றார். பாவிகளை கண்டபோது அவர் மனதுருகி அவர்களை தம்மிடம் சேர்த்து அவர்கள் பாவங்களை அவர்களை விட்டு துரத்துவதில் தாகமாயிருந்தார். யோவான்:4:4-30 வசனங்களில் சமாரியா என்னும் நாட்டில் சீசார் என்னும் ஊர்ப்பெண் ஒருத்தியிடம் தாகத்துக்குத்தா என்று கேட்டார்.

    யூதர்கள் சமாரியர்களுடன் சம்பந்தங்கலவாத வர்கள் என்ற போதும் அப்பெண்ணிடம் ஏசு பேசுகிறார். அவளைக்குறித்த உண்மைகளை ஏசு சொன்னபோது அவள் அவரை தீர்க்கதரிசி என்றும் கிறிஸ்து என்றும், மேசியா என்றும் அறிந்து தன் ஊரார் அனைவருக்கும் போய்ச்சொல்லி வந்து பாருங்கள் அவர் கிறிஸ்துதானோ? மேசியாவோ? என்கிறாள். அந்த ஊரார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.

    அன்புச்சகோதர, சகோதரிகளே இன்று என் தாகம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? பணம், பதவி, பொருள், வீடு, ஆஸ்தி என உலகத்தைச்சார்ந்து இருக்கிறதா? அல்லது இச்சைகள், உலக சிற்றின்ப மோகங்கள் இப்படி இருக்கிறதா? இன்று மனந்திரும்பி அழிந்து போகிற ஆன்மாக்களைத்தேடி ஏசுவைபோல் தாகம் கொள்வாயா? அவர் தாகம் அநேக ஜனங்களின் பாவம் போக்குவதாயிருந்தது. உன் தாகம் அவருடைய தாகத்தைப்போல் மாறட்டும் என்று வாழ்த்துகிறேன். ஒரேமுறை பிறப்பு இன்னொரு ஜென்மம் இல்லை. எனவே இக்காலத்திலே மனந்திரும்பு. ஏசுவே உன் ரட்சகர் ஆமென்.

    - பாஸ்டர். ஆனந்த்சாத்ராக்.

    Next Story
    ×