search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் உள்ள தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். 11-ந் தேதி திருப்பலிக்கு எடிசன் தலைமை தாங்குகிறார். அந்தோணி பிச்சை மறையுரையாற்றுகிறார். 12-ந் தேதி மதன் தலைமையில் திருப்பலியும், ஸ்டீபன் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.

    13-ந் தேதி அருட்பணியாளர் கிளாட்ஸ்டன் திருப்பலியும், சேம் மேத்யூ மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். 14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் அருளானந் நிறைவேற்றுகிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தின சிறப்பு திருப்பலி பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. இதனையடுத்து நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

    16-ந் தேதி அருட்பணியாளர் அருள் தலைமையில் திருப்பலியும், செல்வராஜ் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.

    17-ந் தேதி திருப்பலிக்கு அருள்சீலன் தலைமை தாங்குகிறார். ஸ்டேன்லி மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி பெர்பெச்சுவல் தலைமையில் திருப்பலி நடக்க இருக்கிறது. டன்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். அதன் பிறகு இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்ல முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் மற்றும் இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×