
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள் வதால், நாகமங்களா என்று பெயர். மேலும், ஆதிசேஷனைக் குறிக்கும் விதமாக இந்தத் திருத்தலத்தை அனந்த க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.
ஸ்ரீசௌம்யகேசவர் கோயிலை நெருங்கினாலே, நமது தோஷங்களும் பாபங்களும் சூரியனைக் கண்ட பனி போல மறையும்!

'தோலாயமான கோவிந்தம் மஞ்சஸ்துவம் மதுசூதனம்
ரதஸ்துவம் கேசவம் திருஷ்டுவஹா
புனர்ஜென்மம் நதித்யதே’
- இந்த ஸ்லோகத்துக்கு, 'தேரில் உட்கார்ந்திருந்த கேசவ னைத் தரிசித்தால் மறு ஜென்மம் இல்லை’ என்று பொருள்! நீங்களும் நாகமங்களா நாயகனை தரிசியுங்கள்; வாழ்வில் நலன்கள் யாவும் கைகூடும்!
குடும்பத்தில் சச்சரவு, மனக் குழப்பம், தீராத நோய், பயம், தொழில் நஷ்டம், திருமணத் தடை, சந்தான பாக்கியம் இல்லாமை, ராகு- கேது தோஷங்கள் என சகலமும், இங்கே வந்து தரிசித்தால் நீங்கும்.