search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    புனித உபகார அன்னை ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினர்.
    மணிகண்டம் அருகே அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்புடையான்பட்டியில் உள்ள புனித உபகார அன்னை ஆலயத்தில் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

    இதையொட்டி முன்னதாக நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ், ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ், நாங்குநேரி அருட்தந்தை அற்புத ஜோசப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருவிழாவையொட்டி சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.
    சுவாமிமலையை சேர்ந்த சிற்பி ஒருவர் 10 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து 53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலையை வடிவமைத்து உள்ளார்.
    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள அருள் நிறை அடைக்கல அன்னை திருத்தலத்துக்கு 53 அடி உயரத்தில் வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை அமைத்து தர வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு திருத்தல நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து அன்று முதல் கடந்த 10 ஆண்டுகளாக அடைக்கல அன்னை திருத்தலத்தில் வைத்து அடைக்கல அன்னையின் 53 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணியில் சிற்பி ஈடுபட்டு வந்தார்.

    சுவாமிமலையில் உள்ள தனது சிற்ப கூடத்தில் இருந்து சிலைக்கான வார்ப்புகளை தயார் செய்து ஏலாக்குறிச்சி அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு கொண்டு சென்றார். அங்குள்ள ஜெபமாலை பூங்காவில் 53 அடி முழு உருவ அடைக்கல அன்னையின் சிலையை கடந்த 10 ஆண்டுகளாக சிற்பி வடிவமைத்து உள்ளார்.

    பித்தளை, வெண்கலம், ஐம்பொன் உள்ளிட்ட உலோக பொருட்கள் கலந்து செய்து நிறைவாக 53 அடி உயர அடைக்கல அன்னையின் முழு உருவ வெண்கல சிலை 19 டன் எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலை வைப்பதற்கு பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் முழு உருவ சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை வடிவமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையை மின்னல் தாக்காமல் இருக்க இடி தாங்கியும் அமைக்கப்பட்டு உள்ளது.
    ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.
    “ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்” (எபி.2:18)

    நீங்கள் சோதனையின் மத்தியிலே, உபத்திரவத்தின் மத்தியிலே கடந்து போகும் போது, மிகவும் துக்கப்பட்டு, ஏன் இந்த சோதனை என்று அழுது புலம்புகிறீர்கள்.

    ஆனால் ஒரு சத்தியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழுகிற வரைக்கும், நீங்கள் உபத்திரவங்களையும், பாடுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.

    இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33).

    “பிரியமானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சநதோஷப்படுங்கள்” (1 பேது. 4:12,13) என்று வேத வசனம் சொல்லுகிறது.

    உங்களுடைய வாழ்க்கையிலே, உபத்திரவங்களும் பாடுகளும் வரும்போது, இது ஏதோ புதுமை என்று எண்ணி நீங்கள் திகைக்க வேண்டாம். இந்தச் சோதனையானது உங்களுடைய தரத்தை நிரூபிப்பதற்காக, சோதிப்பதற்காக வருகிறது.

    உதாரணமாக, ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டுமென்றால், அவன் தேர்வு எழுதிதான் ஆகவேண்டும். அவன் தேர்வு எழுதும்போது ஏன் இந்தச் சோதனை, ஏன் இந்தத் தேர்வு, ஏன் படிக்கக்கூடிய போராட்டம் என்று நினைக்கலாம். ஆனால் அந்தத் தேர்விலே அவன் தேர்ச்சியடையும்போதுதான் அவன் உயர் வகுப்பிற்கு செல்லுகிற மகிழ்ச்சி அவனுக்கு வருகிறது.

    அதுபோலத்தான் நீங்கள் அடுத்த நிலைக்கு, அதாவது உயர்ந்த நிலைமைக்கு செல்ல வேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கையிலே, குணாதிசயத்திலே, விசுவாசத்திலே நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் சோதிக்கப்பட வேண்டியது அவசியம். அந்தச் சோதனையையும், உபத்திரவங்களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

    ஆகவே, நீங்கள் சோதனையின் மத்தியிலும், உபத்திரவத்தின் மத்தியிலும் கடந்து போகும்போது சோர்ந்து போகாதிருங்கள். ஆண்டவருடைய வார்த்தைகளை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.

    அவர் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்ற வார்த்தையோடு நிறுத்திவிடவில்லை. ‘திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். நீங்களும் இந்த உலகத்தை ஜெயிக்கும்படி உங்களுக்கு உதவிச் செய்வேன்’ என்றார்.

    “நான்போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

    பிரியமானவர்களே, திடன் கொள்ளுங்கள். கலங்காதிருங்கள். ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
    தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
    இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.

    அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.

    மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

    உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.

    பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.

    உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.

    அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.

    நமது நம்பிக்கையை அழிக்கும் சோதனைகளும், பெரும் துன்பங்களும் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. இந்நேரங்களில், இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது. நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியின்படி செயல்பட இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டும். தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
    143-வது பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் 143-வது ஆண்டு பாஸ்கு விழா 2 நாட்கள் நடைபெற்றது. இடைகாட்டூர் உலகபுகழ் பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைசித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்புள்ள அலங்கரிக்ப்பட்ட அரங்கில் “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு” நாடகமாக நடித்துகாட்டப்பட்டது.

    முதன் முறையாக டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயாளிகளை குணமடைய செய்தல் உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்துகாட்டப்பட்டன.

    2-ம் நாள் பார்வை இல்லாவதருக்கு பார்வை வழங்குதல், இறந்த சீடரை உயிர் பித்தல், தொழு நோயாளிகளை குணமடைய செய்தல், யூத அரசு ஏசுவை கொடுமை செய்து தலையில் முள்கிரிடம் அணிவித்து சிலுவையில் அறையும் காட்சிகளையும், சிலுவையில் இருந்து உயிர்தெழும் காட்சி களையும் நடித்து காட்டினர். இந்த நாடகத்தில்100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து நடித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் செய்திருந் தது. முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜைகளைதிருத்தல அருட்பணியாளர் இமானுவேல் தாசன் செய்தார்.

    மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
    பெரியதம்பி உடையான்பட்டி புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
    பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.

    திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.

    மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது.

    இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது.
    ‘தூய்மையானவற்றை தூய்மையாய் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர். தூய்மையானவற்றை கற்றுக்கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்’ (சீ.ஞா.6:10)

    ‘மன அடக்கம்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் பலரும் அது சன்னியாசிகளுக்கும், ஞானிகளுக்கும் சம்மந்தம் உடையது, தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது என்று நினைக்கிறார்கள். சன்னியாசிகள் துறவு மேற்கொள்வதால் மன அடக்கத்தின் அளவு மிக மிக அதிகம் தேவைப்படும் அவ்வளவுதான். ஆனால் மன அடக்கம் ஏதோ தத்துவம் பேசுகிறவர்களை சார்ந்தது என ஒதுக்கப்பட்ட விஷயமல்ல. அன்றாட வாழ்வுக்கு மன அடக்கம் மிக அவசியம்.

    இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனப்பக்குவத்தை சோதிக்கும் சவால்களும், சோதனைகளும் நிறையவே உண்டு. பல மனிதர்களோடு பழகுவதும், தொடர்பு கொள்வதும் மனிதர்களுக்கு தவிர்க்க முடியாதவை. மேலும் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கஷ்டங்களும், பிரச்சினைகளும் வருகிறது. மன அடக்கம் இருந்தால் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். பொறுமையும், சகிப்புத் தன்மையும் மன அடக்கத்தால் தான் கிடைக்கும். மன அடக்கம் உள்ளவர்கள்தான் வாய் அடக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். யோசிக்காமல் பேசுவதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உறவு பிளவு படுகிறது. சமுதாயத்தில் தவறுகள் நடப்பதற்கு தனி மனித மன அடக்கம் பற்றிய விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஒரு காரணம் ஆகும். மனிதன் தன் மனம் போன போக்கில் செயல்படுவதால் பல நேரங்களில் குழப்பத்திற்கு உள்ளாகிறான். மன அடக்கம் இல்லாதவர்கள் நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே நமது வெற்றிக்கு தேவை மன அடக்கம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

    இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது. எனவே நாமும் அடக்க உணர்வோடு பல நல்லதை செய்ய இந்த நன்னாளில் கற்றுக் கொள்வோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    20 மேடைகள் அமைக்கப்பட்டு, 300 கலைஞர்கள் கலந்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காண்பித்தனர்.
    எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு தூய செல்வநாயகி அன்னை ஆலயத்தில் 368-வது பஸ்கா பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உலக மீட்பர் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. 20 மேடைகள் அமைக்கப்பட்டு, 300 கலைஞர்கள் கலந்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காண்பித்தனர். சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம் தலைமை தாங்கினார்.

    பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி வரவேற்றார். எடப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், எடப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், புனித மரியன்னை பள்ளி தலைவர் கொழந்தாகவுண்டர், காவடி கமிட்டி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிழா திருப்பலி மாசில்லாப்பாளையம் பங்கு தந்தை விமல், சேலம் குழந்தை இயேசு பேராலயம் ஜோசப்லாசர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    விழாவையொட்டி தேர்பவனி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் இயேசு, செல்வநாயகி அன்னை சொரூபங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    விழாவில் தேவாலயத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட அரங்கில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடக கலைஞர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர்..
    மானாமதுரை அருகே இடைகாட்டூரில் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு பாஸ்கு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தேவாலயத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட அரங்கில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடக கலைஞர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர்..

    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக நாதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை இமானுவேல் தாஸன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை( 23-ந் தேதி) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 145-வது ஆண்டு திருவிழா நாளை (ஏப்ரல் 23-ந் தேதி )(சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும்  ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருத்தல  முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்படுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மே 1-ந் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
     
    காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு புதுவை&கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்  தலைமையில் திருவிழா, மாலை திருப்பலி, இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

    மே 2-ந் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையர்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரர் ஜீவா,  அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூர் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.
    உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்து கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்து கொள்ளப்பார்த்தால் அவரை தடுக்காதீர்கள்(லூக்6:29)

    குற்றம் செய்கின்றவரை இரக்க உணர்வால் பொறுத்துகொள்கின்ற திறனே மன்னிப்பு. மற்றவர்கள் மீது நாம் இரக்கம் கொள்கின்ற பொழுது நாம் மன்னிக்கும் ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம். உலகத்தில் இயல்பாகவே இன்று எல்லோருக்கும் தவறு இழைத்த மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். நாம் மன்னிக்கின்ற போது மட்டும் தான் இறைபணியில் பங்கு பெறுகின்றவராக நாம் உருமாறுகிறோம். மன்னிப்பு அளிப்போர், பெறுவோர் ஆகிய இருவருக்கும் அது அருள் ஆசிரை கொண்டு வருகிறது.

    மன்னிப்பு முறிந்து போன உறவுகளை அன்போடும் அருள் இரக்கத்தோடும் சீராக்குகிறது. உள்ளத்தை குணமாக்குகிறது.

    புகழ்பெற்ற ஒவியர் லியோனாடாவின்ஸ் இயேசுவின் இரவு உணவு சித்திரத்தை வரைந்து கொண்டிருந்தார். அவர் வரைந்து கொண்டிருந்த போது அவருக்கு அங்கு இருந்த ஒரு மனிதர் மேல் அடங்காத கோபம். கோபம் பற்றி எரிந்தது. கடும் சொற்களால் அவரை அசைவாடினார். அவரை வெளியே அனுப்பி விட்டு மீண்டும் அவர் சித்திரம் தீட்டினார். இயேசுவின் முகத்தில் ஒரு மெல்லிய கோடை அவர் வரைய முனைந்தார். ஆனால் அவரால் இயலவில்லை. ஒவியம் வரைவதை விட்டுவிட்டு அந்த மனிதரிடம் சென்று மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவரால் படம் வரைய முடிந்தது என்று அவர் சொல்கிறார்.

    நாமும் பிறரை குறை கூறிக்கொண்டே இருந்தால் பல நேரங்களில் வாழ்வில் வெற்றியடைய முடியாது. நாம் மன்னித்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்ற பொழுது தான் பல சாதனைகளை நம்மால் இந்த உலகத்தில் படைக்க முடியும். எனவே முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
    குழந்தாய் இளமை முதல் நற்பயிற்சியை தேர்ந்து கொள். முதுமையிலும் ஞானம் பெறுவாய்(சீராக் 6:18)

    கல்லூரிதான் ஒரு மனிதன் மரியாதை உணர்வோடும், உண்மையோடும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் இடம். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் நீங்கள் ஒரு குழந்தை அல்ல. மாறாக நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதர். ஏராளமான நல்லவற்றை நீங்களும் கற்று கொண்டு பரந்து பட்ட இவ்வுலகில் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி எடுக்கும் மாபெரும் தளம். உங்கள் பொறுப்பு மிகப்பெரியது என்பதை உங்களுக்கு உணர்த்துகின்ற இடம். உங்கள் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்களை பொறுத்து அமைந்திருக்கிறது என்று எடுத்து சொல்லுகின்ற இடம்.

    பள்ளியில் பயின்ற காலத்தை காட்டிலும், கல்லூரியில் உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் பலரும் உங்களை நம்பி இருக்கின்றனர். உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பற்றி எத்தனையோ கனவுகளை வளர்த்து கொண்டிருக்கூடும். அவை அனைத்தையுமே நனவாக்க மன உறுதியையும் கல்லூரியிலிருந்து நீங்கள் பெற்று கொள்கிறீர்கள்.

    கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள். வீணாக பொழுது போக்காதீர்கள். உங்கள் வாழ்வில் நெருக்கடியான பருவம் இது என்பதை உணர்ந்திருங்கள். உள்ளத்தில் உறுதியான தீர்மானமும், விழிப்புணர்வும் கொண்டு தொடர்ந்து வாழ்வில் முதிர்ச்சி பெற்றவர்களாக உருமாறுங்கள்.

    கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி அலைய வேண்டியது இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு அறிவு கூர்மை உடையவர்களாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உருவாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் கொண்டிருங்கள்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    ×