iFLICKS தொடர்புக்கு: 8754422764
கன்னி

இன்றைய ராசி பலன்கள்

வருமானம் திருப்தி தரும். வசதிகள் பெருக வாய்ப்புகள் உருவாகும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கை மாற்றாகக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.

வார பலன்கள்

ஏப்ரல் 14-04-2019 முதல் 20-04-2019 வரை:

இதுவரை செய்யாமலும், சொல்லாமலும் யோசிக்க மட்டுமே செய்து கொண்டிருந்த வி‌ஷயங்களில் தயக்கங்கள் விலகி இந்த வாரம் பளிச்சென்று தெளிவான முடிவுகளை கன்னியினர் எடுப்பீர்கள். அதுபோலவே எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். பனிரெண்டிற்குடைய சூரியன் எட்டாம் வீட்டில் உச்ச நிலையில் இருப்பதால் ஏதேனும் ஒரு வி‌ஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்களில் சிலருக்கு கண்களில் பிரச்னை வரும். கவனம் தேவை.

இரண்டை சூரியன் பார்ப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைத் திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணி வகுத்து வரும்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

ஏப்ரல் மாதம் 15-ம் தேதியில் இருந்து மே மாதம்14-ம் தேதி வரை

சித்திரை மாதம் கன்னி ராசிக்கு மேன்மையான மாதம்தான். மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் சுக்கிரனு டன் இருப்பது யோக அமைப்பு என்பதால் இது உங்களுக்கு நல்ல மாதம். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் இப்போது நிறைவேறும். சகோதரசகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத்தடையில்லை. இஷ்டமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நல்லவேலை கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு கனவு நனவாகும்.

உங்களில் சிலர் தூரப்பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவிஉயர்வு, சம்பளஉயர்வு இனிமேல் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்குடிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2019

கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் வருடம் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும்.

இளைய பருவ கன்னி ராசிக்கார்கள் பலர் கடந்த ஆண்டு அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள்.

சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்ற நிலைதான் சென்ற வருடம் கன்னி ராசிக்கு நடந்து கொண்டிருந்தது.

அதிலும் கோட்சார ரீதியில் நான்காமிடச் சனி ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச்சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன், சனி ராசியைப் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு உங்களில் சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள். இது போன்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் கன்னிக்கு இல்லை.

கடந்த சில மாதங்களாக உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த நான்காமிட சனி அமைப்பில், சனியை சூட்சும வலுப்படுத்தும் விதமாக வரும் மார்ச் துவக்கத்தில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலமாக கேதுபகவான் சனியுடன் இணைகிறார். இது சனியின் கெடுபலன்களைக் குறைத்து உங்களுக்கு நன்மை செய்யும் அமைப்பு.
மார்ச் மாதம் 6 ம் தேதி நடக்க இருக்கும் இந்தப் பெயர்ச்சி மூலமாக உங்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக வருடம் பிறந்ததில் இருந்தே உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் குறைய ஆரம்பிக்கும்.

உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.

அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பெரிய அளவில் பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. அர்த்தாஷ்டமச்சனி அடுத்த வருடத்தில்தான் விலகுகிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைக் கவனமாகச் செய்யுங்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது.

பெண்களுக்கு இந்த வருடம் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்

உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும் போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.

கேது சாதகமான அமைப்பில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும்.


எப்படிப் பார்த்தாலும் உங்களின் எதிர்கால நன்மைக்கு அச்சாரம் போடும் வருடமாக புது வருடம் அமையும் என்பது உறுதி.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

விகாரி வருட பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதேநேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை. கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாகத்தான் பிறக்க இருக்கும் விகாரி வருடம் இருக்கும்.

தற்போது கன்னிக்கு நடந்து வரும் அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பெரும் சங்கடங்களை எதிர் கொண்டவர்கள், புது வருடத்தில் அவற்றிலிருந்து மீண்டு வந்து நல்ல நிம்மதியான, நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிலைக்கு மாறப் போகிறீர்கள்.

கடந்த சில மாதங்களாக பெரும்பாலான கன்னியினர் வேலை, தொழில் அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்து வந்தீர்கள். சனி நான்கில் அமர்ந்து உங்கள் ராசியின் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும், ராசியையும் தன்னுடைய கெடுபலன் தரும் பார்வையால் பார்த்ததால் பெரும்பாலான கன்னியினருக்கு எல்லாவகையிலும் சங்கடங்கள் தரும் நிலைமைகள்தான் இருந்து வந்தன.

சனியின் பார்வையினால் ராசியும் பலவீனம் அடைந்திருந்ததால், “ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” என்ற கதையாக சென்ற வருடம் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு குறைகளை நீக்கி மனநிறைவையும், பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கின்ற ஆண்டாக அமையும்.

சில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கேது நான்கில் இருக்கும் சனியுடன் இணைந்திருப்பதால் இனிமேல் சனியின் கெடுபலன்கள் மட்டுப்படும். கேது நான்காமிடத்திற்கு மாறியிருப்பது நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு என்பதால் இந்த வருட ஆரம்பமே கன்னிக்கு சந்தோஷங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இதுவரை உங்களுக்கு தடங்கலாக இருந்து வந்த தொழில் முயற்சிகள், பின்னடைவுகள், வேலையில் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். பணியிடங்களில் இருந்து வந்த நிச்சயமற்ற நிலை, மறைமுக எதிர்ப்புகள், கூடவே இருந்து குழிபறிக்கும் தன்மை, பொறாமை, கண்திருஷ்டி போன்றவைகளும் விலகும்.

சிலருக்கு பணி நிரந்தரமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு உதவிகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஆர்டர்களும் இனிமேல் கிடைக்கும். இதுவரை நடக்காமல் இருந்த தொழில் விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகள் இனி நல்லபடியாக நடக்கும்.

நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியினால் குருபகவான் இப்போது இருக்கும் சாதகமற்ற இடமான மூன்றில் இருந்து மாறி, ஓரளவிற்கு நல்ல இடமான நான்கில் ஆட்சிநிலை பெறுகிறார். இதுவும் கன்னிக்கு சாதகமான அமைப்பு. இந்தப்பெயர்ச்சியின் மூலம் புது வருடத்தின் பிற்பகுதியில் மாற்றங்கள் உருவாகும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை, மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

ஒரு சிறப்புப் பலனாக நவம்பர் மாதத்திற்குப் பிறகு நான்காம் இடத்தில் மூன்று கிரகங்கள் ஒன்று கூடுவதால் எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்யும் கிரகநிலைகள் இது.

பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். தாயாரால் மனச் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இளைஞர்கள், மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்கவோ, கல்லூரி படிப்பிற்காகவோ வெளிமாநிலம் செல்லும் பலன்கள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்கள், வேலைவிஷயமாக தூரஇடங்களுக்கு பயணம் செல்பவர்கள், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அமைப்புகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களை தரும்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம். கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அரசு தனியார் துறை ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். னபங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கையை மீறிப்போகும் அளவிற்கு கெடுதலான விஷயங்கள் எதுவும் ஒருபோதும் நடக்காது

சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள்.

சரக்கு வாகனங்கள், பெட்ரோல்பங்க், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.
மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான பலன்கள் நடக்கும். விவசாயிகளுக்கு இது நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு செல்வீர்கள். எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் கன்னி ராசிக்கு நற்பலன்களை மட்டுமே கூடுதலாகத் தரும் என்பதால் இந்தப் புத்தாண்டை நீங்கள் மனதார வரவேற்கவே செய்வீர்கள்.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி-கவலை இல்லை இனி

(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கன்னிராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த சனிபகவான் இம்முறை நான்காம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் நான்காமிட மாற்றம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்பட்டு நன்மைகளை தராத ஒரு நிலை என்று நம்முடைய கிரந்தங்களில் சொல்லப்படுகிறது.

ஆயினும் கன்னிக்கு சனிபகவான் ஐந்துக்குடைய யோகாதிபதி என்கிற நிலையில் தற்போது அவர் மாற இருக்கும் குருவின் வீடான தனுசில் ஒரு சாத்வீகமான நல்ல நிலையை அடைவார் என்பதால் கெடுபலன்கள் எதுவும் கன்னி ராசிக்கு இருக்காது என்பதே உண்மையான நிலையாகும்..

கோட்சார பலன்கள் என்பது வருடக் கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிலையையும் கணித்து அதன்பிறகு சொல்லப்படக் கூடியது என்பதால், மற்ற வருட கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் மாற்றங்கள் கன்னி ராசிக்கு சாதகமான அமைப்பில் இருக்கும்போது சனியால் மட்டும் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக உன்னதமான பலன்களை தர இருக்கின்ற 11-ம் இடத்திற்கு ராகு மாறுதல் அடைந்து இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு கன்னிக்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார்.

அதன்பிறகு 20 நாட்களில் நடந்த குருப்பெயர்ச்சியும், மிகுந்த தன லாபத்தைத் தரக் கூடிய இரண்டாம் இடத்தில் நடைபெற்று தற்போது குருபகவானும் உங்களுக்கு பணவரவைத் தரக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

ஏறத்தாழ இந்த சனிப் பெயர்ச்சியின் காலம் என்று சொல்லக் கூடிய இரண்டரை ஆண்டு காலங்களில் முதல் ஒன்றரை வருட காலத்திற்கு மற்ற கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் கோட்சார நிலைகள் உன்னதமான ஒரு அமைப்பில் அமைந்திருப்பதாலும் குறிப்பாக தனம், லாபம் என்று சொல்லப்படக்கூடிய 2, 11-ம் இடங்கள் கன்னிராசிக்கு குரு மற்றும் ராகுவால் சுபத்துவ வலிமை அடைந்திருப்பதாலும் தற்போது மாற இருக்கின்ற அர்த்தாஷ்டம சனி அமைப்பு பெரிய பாதிப்புகளை தரப் போவது இல்லை.

மேலும் நான்காமிடத்து சனி தன்னுடைய பார்வையால் ஜீவன அமைப்புகளான வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளை பார்த்துக் கெடுப்பார் என்றுதான் நம்முடைய மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் பத்தாமிடம் வேறுவகையில் சுபத்துவம் அடைகின்ற ஒரு நிலைமையில், சனியின் பார்வைக்கு மாற்றாக குருவின் சுபத்துவ பார்வை போன்ற அமைப்புகள் இருக்கின்ற நிலையில் சனி மாற்றம் கெடுபலன்களை தருவது இல்லை. தற்போது இரண்டில் இருக்கின்ற குருபகவான் தன்னுடைய புனிதப் பார்வையால் பத்தாமிடத்தை நோக்குவதால் அர்த்தாஷ்டமச் சனியின் தொழில், வேலை சம்பந்தமான இடையூறுகள், உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.

கோட்சார பலன்களில் ஒரு கிரகம் அங்கே இருந்தால் இந்தக் கெடுபலன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்கு மாற்றாக வேறு விதமான சுபத்துவ வலிமைகள் அந்த கிரகத்திற்கோ, அல்லது அந்த பாவத்திற்கோ அமையுமாயின், ஒரு மனிதனுக்கு நிச்சயமாக கெடுபலன்கள் நடைபெற போவது இல்லை.

அதுபோன்ற ஒரு நல்ல நிலைமை தற்போது கன்னி ராசிக்கு இருக்கிறது. உதாரணமாக 2-ல் குரு, 11-ல் ராகு என தனலாப அமைப்புகள் வலுப் பெற்று இருப்பதால் அர்த்தாஷ்டமச் சனியின் முக்கிய பலனான வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளை சனியால் கெடுக்க முடியாது.

எனவே கெடுபலன்கள் ஏதேனும் வந்துவிடுமோ என்கிற தயக்கத்தை உதறித் தள்ளி, சனியைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் வலுவாக இருக்கின்றபடியால் வரப் போகின்ற காலங்கள் கன்னிக்கு நல்லவிதமாகவே அமையும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலைமைக்கு வருவீர்கள் என்பது உறுதி.

அதேநேரத்தில் சனி தனது பார்வையால் பத்தாமிடத்தையும் உங்கள் ராசியையும் பார்ப்பார் என்பதால் பணிபுரியும் இடங்களில் மாற்றங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். அலுவலகத்தில் எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம். இதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும், மரியாதையும் கீழிறங்கச் செய்வார் சனி.

சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் உங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் வரும் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். மேலிடத்திற்கும் உங்களுக்கும் சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் கவனம் தேவை.

அரசுப் பணியாளர்கள் முறைகேடான வழிகளில் பணம் வரும் நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான்கு சுவருக்குள் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த சுவருக்கும் கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சுய தொழில் செய்பவர்களும், வியாபாரிகளும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ, புதிய கிளைகள் தொடங்கவோ, புது முயற்சிகள் எடுக்கவோ யோசித்து செய்ய வேண்டும். ஆயிரம்தான் இருந்தாலும் குருபகவானின் தயவினால் பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முடியும்.

இன்னொரு முக்கிய பலனாக சனி இப்போது ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய குணங்கள் சற்று மாறுபடும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக் கலக்கம் இருக்கும். எதிலும் நல்லவைகளையே பார்க்கும் உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.

சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும்  என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. நான்காமிடத்து சனியால் அம்மாவிற்கு  ஆரோக்கியக் குறைபாடுகள் தோன்றும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

எந்தக் காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை  அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட சனி .

வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். இந்தச் செலவுக்கு புது வண்டியே வாங்கிவிடலாம் என்றால் அதற்கும் தடை வரும். மாணவர்களுக்கு படிப்பில் தடை வரக்கூடும் என்பதால் காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களை கட் அடித்து விடலாம்.

சனிபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு, நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையைத் தள்ளி வைப்பது நல்லது. வீடோ, நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.

இளைஞர்களுக்கு வேலை மாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். குடும்பத்தில் கடும் முயற்சிக்கு பிறகே சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களைக் கண்காணிப்பது அவசியம்.

வியாபாரிகளுக்கு வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.  

பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் பரம்பொருளின் அருளினால் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு இந்த கோட்சாரக் கிரகக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை.

பரிகாரங்கள்:

அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் நன்மைகளைத் தரும்.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குருபகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும்.

பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது சுபப் பார்வைகளால் கணவன் அல்லது மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாபங்கள் தரும் இடமான பதினொன்றாமிடத்தையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இனங்கள் மூலமாக இப்போது நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.

மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசா, புக்திகள் நடக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கோட்சாரக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நல்ல பணவரவும், வருமானங்களும் இருக்கும், பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இனி இருக்கப் போவது இல்லை.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் காலம் வந்து விட்டதால் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளைய பருவத்தினர் ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவார்கள். இளைய தலைமுறைக்கு இந்த குருப் பெயர்ச்சி யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதாலும், அவரே உங்கள் ராசிக்கு ஐந்துக்குடையவனாகி பார்ப்பதாலும் வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. செய்யும் தொழில் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் செல்ல முடியும்.

குருவின் ஏழாமிடப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.

திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு திருமணம் நடக்கும். கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப் பெயர்ச்சியால் ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து, வாழ்க்கை கோணலாகி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு குரு இரண்டாவது வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும். சில கன்னி ராசிக்காரர்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது.

சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். குருபகவானின் ஒன்பதாமிடப் பார்வையால் தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வட மாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக் கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார்.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுப காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கன்னி ராசிப் பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டாம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும் போதே கர்ணனின் கவச குண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன், அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

பொதுவாக கன்னி ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரங்கள்: வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருப் பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். சென்னையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் சேக்கிழார் பெருமான் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குரு ஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவில் ஸ்ரீதட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

குருபகவானின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவினைத் தந்து அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

ஜோதிடக்கலை அரசு
ஆதித்ய குருஜி88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

கன்னி ராசிக்கு தற்போது மாற இருக்கும் ராகுவிற்கான பத்தாம் இடமும், கேதுவிற்கான நான்காம் இடமும் நன்மையைத் தரும் இடங்களாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை.

பத்தாமிடத்திற்கு மாறும் ராகு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளையும், நான்காமிடத்திற்கு மாறும் கேது வீடு, வாகனம், தாயார், சுகம் போன்ற அமைப்புகளையும் பாதிப்பார் என்று நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் தான் நுழைந்த ராசிக்கான பலன்களை பெயர்ச்சியின் பிற்பகுதியில் கொடுக்கும் வழக்கம் கொண்டவை ராகு,கேதுக்கள். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் ராகு, குருவின் பார்வையையும், கேது குருவின் இணைவையும் பெறப் போவதால் கன்னிக்கு கெடுபலன்கள் எதுவும் இம்முறை இருக்காது.

ஏற்கனவே அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான கன்னி ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம், வீடு, குடும்பம் போன்றவைகள் மந்தமான நிலைகளில் இருந்து கொண்டிருக்கும் போது இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியால் நன்மைகள் இருக்கலாமே ஒழிய தீமைகள் இருக்கப் போவது இல்லை.
எனவே தற்போது பத்தாமிடத்திற்கு மாறும் ராகுவாலும், நான்காமிடத்திற்கு மாறும் கேதுவாலும் தீமைகள் என்று எதுவும் சொல்வதற்கு இல்லை. தீமைகள் எதுவும் உங்களுக்கு ராகு-கேதுக்களால் நடக்கவும் செய்யாது.

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தவர்கள் இனிமேல் மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும்.

உங்களில் பெரும்பாலோருக்கு இதுவரை வேலை தொழில் வியா பாரம் போன்ற விஷயங்களில் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்களும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், நியாயமான பதவிஉயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எல்லாத்துறையினருக்கும் இனிமேல் நல்லபலன்கள் நடக்கும்.

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணை யான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும்.

வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

வயதானவர்களில் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும்.

குறிப்பிட்ட ஒரு பலனாக உங்களில் சிலர் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.

முதல் ஆறு மாதங்கள் ராகுவிற்கு சனியின் பார்வை மட்டும் இருப்பதால் வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந் தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சி கள் வெற்றியாகும்.

மொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியால் துன்பங்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. உங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

பரிகாரங்கள்

ராகு பகவானால் ஏற்பட இருக்கும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள சலவைத் தொழிலாளி ஒருவருக்கு சனிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமையில் அவர் இருக்கும் இடத் திற்கு தேடிச் சென்று அடுப்புக்கரியினை ஏழு கிலோவிற்குக் குறையாமல் தானம் செய்யுங்கள்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store