iFLICKS தொடர்புக்கு: 8754422764
ரிஷபம்

இன்றைய ராசி பலன்கள்

வெளிவட்டாரப் பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தனலாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். 

வார பலன்கள்

10-12-2018 முதல் 16-12-2018 வரை

சுக்கிரன் வலுவாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களின் தயக்கங்களும், பயங்களும் விலகும் வாரம் இது. அதேநேரத்தில் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பதால் சிலருக்கு வேலையில் மாற்றங்களும், சங்கடங்களும் இருக்கும். சனி எட்டில் அமர்ந்து பத்தாமிடத்தை பார்ப்பதால் சிலர், தொழிலை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். இப்போது எதுவும் வேண்டாம். இருக்கும் நிலையே தொடருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது நடைபெறும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நன்மைகளையே தரும் என்பதால் ரிஷபத்திற்கு துன்பங்கள் இல்லாத வாரம் இது.

வார ஆரம்பத்தில் சிலர் தவறுகளை செய்தாலும், வாரத்தில் இறுதியில் அவற்றை சீர்படுத்திக் கொண்டு உங்கள் செயல்திறனை பிறருக்குக் காட்டுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பம் விலகத் தொடங்கும். 11,12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ந்தேதி அதிகாலை 6.06 மணி முதல் 10-ந்தேதி மாலை 5.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 17-ம் தேதியில் இருந்து டிசம்பர் 15-ம்தேதி வரை

ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது எதிர் கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கும் காலமாக இருக்கும். மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பதால் இப்போது உங்களுக்கு நடக்க இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. உங்களில் சிலருக்கு வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை.

ஆறாமிடமாக இருந்தாலும் ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி வரும். தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். அதே நேரத்தில் சிறிய உடல்நல பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.. தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். நினைத்த வாகனம் அமையும்.

அஷ்டமச்சனி நடப்பதால். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மை யான முறையில் சந்திப்பது நல்லது. ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2018

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2018 புத்தாண்டு நிதானமான பலன்கள் நடக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது.

இந்த வருடத்தின் கிரகநிலைகளை எடுத்துக் கொண்டால் வருடம் முழுவதும் ராகு மூன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. இன்னுமொரு சிறப்பு அம்சமாக ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடான கடகத்தில் அவர் இருக்கிறார் என்பதால் வருடம் முழுவதுமே ராகுவின் மூலமாக நல்ல பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும் இருக்கும். 

அதேநேரத்தில் உங்களின் யோகாதிபதியான சனி பகவான் தற்போது நன்மைகளை தர இயலாத அமைப்பில் அஷ்டமச்சனியாக இருப்பதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மந்தமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். பணவரவு குறையும். ஆகவே எதுவும் புதியதாக ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல. 

சனிபகவான் நம்முடைய மனதைக் குழப்பி புதிய முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி ஒன்றை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை உருவாக்குவார் என்பதால் இந்த வருடம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. 

மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, கொலட்ரால் கொடுத்தோ தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும் ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த ஒரு பலனை தவிர்த்து 2018 புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே தரும். எனவே ரிஷப ராசிக்காரர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது. 

ஒரு சிறப்புப் பலனாக எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். 
சிலருக்கு இப்போது இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைவந்து அதைப் பறந்து பிடிக்கப் போய் “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

இருக்கும் வேலையை விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு முயற்சி செய்ய வேண்டும். அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி. 

முப்பது வயதுகளில் இருப்பவர்கள் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும். பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு நான் மேலே சொன்ன சாதகமற்ற பலன்கள் இருக்காது. 

ஆயினும் அஷ்டமச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத் தரும் என்பதால் இளைய பருவ ரிஷப ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும். 

அதே நேரத்தில் இந்த வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருமாற்றம் உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே நடக்க இருக்கும் எதையும் “நெகடிவ்” ஆக பார்க்காமல் சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். 

மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.

பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் அலைச்சலான இடத்திற்கு மாறுதல்களும் அதிகமான வேலை இருக்கும் நிலைகளும் உண்டு.

தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது. 

தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத் துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புக்கள் நடக்கும். 

சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். 

இளைஞர்கள் காதல் விவகாரங்களில் திசை திரும்புவீர்கள். மன அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் இப்போது நடக்க வேண்டும் என்பதால் இந்த வயதிற்கே உரிய விஷயங்களில் உங்கள் கவனம் செல்லும். காதலித்து, பிறகு அதில் தோல்வியைக் கொடுத்து எதிர்பாலினத்தவரை புரிந்து கொள்ளும் அனுபவங்கள் இப்போது நடக்கும். எனவே எதையும் திடமான மனதுடன் அணுகுவது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைய பருவத்தினர் தங்களின் ஆக்க சக்தியை கேளிக்கை உல்லாசம் போன்றவைகளில் வீணடிக்காமல் எதிர்கால முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது.

படிப்பு, மற்றும் வேலைக்காக வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும். 

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆறாமிடத்தில் குருபகவான் இருப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். 

இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். 
மொத்தத்தில் இந்த ஆண்டு ரிஷபத்திற்கு எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி     
செல்: 8870 99 8888

விளம்பி வருட பலன்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும்  விளம்பி தமிழ்ப் புத்தாண்டு மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்க தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும்.

இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம் வயது ரிஷபத்தினர் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது.  

விளம்பி வருடத்தின் சிறப்புபலனாக தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் உண்டு.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது.

பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

ஒரு சிறப்புப் பலனாக எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கும்படி நேரும்.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் நிமிட நேரத்தில் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

ரிஷபத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும்  இருப்பதன் மூலம் சாதகமற்ற பலன்களை நல்லவைகளாக மாற்றிக் கொள்ளும்  வருடம் இது.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் இல்லை மோசம்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்))

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் தற்போதைய மாற்றத்தால் அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார். ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழி தமிழில் உண்டு. அஷ்டமச் சனி என்றவுடன் யாவருக்கும் ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த குருப்பெயர்ச்சியில் குருவும் சாதகமற்ற ஆறாமிடத்திற்குதான் மாறி இருக்கிறார் என்ற நிலையில் தற்போது இன்னொரு நன்மைகளைத் தராத மாற்றமான எட்டாம் இடத்திற்கு மாறும் சனி என்றவுடன் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒருவிதமான மனக்கலக்கம் ஏற்படுவது இயற்கை.

ராசிபலன்களே பொதுவான பலன்கள் என்றாலும் அதிலும் ஓரளவிற்கு தெளிவான பலன்களைச் சொல்ல முயற்சிக்கும் ஜோதிடனான நான் தற்போது ரிஷபத்திற்கு மாற இருக்கும் அஷ்டமச் சனி உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறது என்பதை என்னுடைய கோணத்தில் விவரித்தே ஆகவேண்டும்.

பொதுவாக சனிபகவான் ஒருவருக்குத் தண்டனைகளைத் தர விதிக்கப்பட்ட கிரகம் என்றாலும் 12 ராசிகளுக்கும் அவர் ஒரே மாதிரியான தண்டனைகளையோ அல்லது கெடுபலன்களையோ தந்து விடுவது இல்லை. தான் இருக்கும் இடத்தை பொருத்தும், எந்த ராசிக்கு தான் பலன்களை அளிக்கப் போகிறோம் என்பதை பொருத்தும் தான் சனிபகவான் தனது நல்ல, கெட்ட பலன்களைச் செய்வார்.

அந்தவகையில் பார்க்கப் போவோமேயானால் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 2013-2014 ம் ஆண்டுகளில் மீனத்தினர் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக மேஷ ராசிக்காரர்கள் பட்ட துயரங்களும் அதிகம்.

மீனத்திற்கு அஷ்டமச் சனியாக இருந்தபோது சனிபகவான் அதிகம் வலிமை தருகின்ற உச்சம் என்கிற ஒரு பாபத்துவ நிலையிலும், மேஷத்திற்கு எட்டில் இருந்தபோது பகைவீட்டிலும் நிலை கொண்டிருந்ததால் மிகக் கடுமையான கெடுபலன்களை மேற்கண்ட ராசிகளுக்கு செய்தார்.

ஆனால் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் தனக்கு மிகவும் பிடித்த வீடான, தான் பெரிதும் சாந்தமடைகின்ற ஒரு புனிதராசியான தனுசுக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார். தனுசில் அவர் இருக்கும் நிலையில் அவர் அமைதியான குணத்தை கொண்டிருப்பார் என்பதால் ரிஷபத்தினர்களுக்கு தாங்க முடியாத கெடுபலன்கள் எதுவும் உறுதியாக வரப் போவது இல்லை.

மிகத் தெளிவாகச் சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன, மேஷ ராசிக்காரர்களுக்கு நடந்த சாதகமற்ற, சங்கடமான பலன்கள் எதுவும் ரிஷப ராசிக்கு இருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயமாக ரிஷப ராசியின் ராஜ யோகாதிபதி சனி பகவான் மட்டும்தான். ஒரு கிரகம் யோகம் தர விதிக்கப்பட்ட ராசிகளுக்கும், தான் அதிபதியாகும் ராசிகளுக்கும் கெடுபலனை தராது என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.

அதன்படி பார்த்தால் ரிஷபத்தவர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும், தன்மைகளையும் தர விதிக்கப்பட்டவர் சனிபகவான் ஒருவர்தான். ஆகவே அவர் தண்டனைகளைத் தருகின்ற ஒரு பொதுவான கிரகம் என்றாலும் நல்லவைகளையும் தரக் கூடிய ராஜயோகாதிபதி  என்பதால் ரிஷபத்தின் மேல் சனிக்கு எப்போதும் ஒரு மென்மையான போக்கு கண்டிப்பாக உண்டு.

எந்த ஒரு காரணத்தினாலும் மற்ற ராசிகளுக்கு அஷ்டமச் சனியில் நடக்கின்ற கெடுபலன்கள் எதுவும் தற்போதைய சனிப் பெயர்ச்சியால் உறுதியாக ரிஷபத்திற்கு நடக்காது. ஆயினும் வரும் முன் காக்க உரைப்பதுதான் ஜோதிடம் என்கிற விதிப்படியும், சனியைப் போலவே இன்னொரு வருடாந்திர கிரகமான குருவும் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பில் இருப்பதாலும் எந்த ஒரு ரிஸ்க் எடுக்கின்ற தொழில் அமைப்புகளையும் ரிஷபத்தினர் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது.

“என்னடா இது.. அஷ்டமச்சனி கெடுதல்களை செய்யாது” என்றும் சொல்லி விட்டு, “ரிஸ்க் எதையும் எடுக்காதே” என்று குருஜி சொல்கிறார் என்று யோசித்தால் முறையான பலன்கள் என்றால் இப்படித்தான் இருக்கும். கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்கப் போவது இல்லை. ஆயினும் அனைத்திலும் தற்காப்புடன் முனைப்புடன் இருந்து கொள்வது நம்முடைய கடமை.

எனவே இன்றைய குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நிலைப்படி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் எந்த விதமான ரிஸ்க் எடுக்காமலும், இருப்பதை கட்டிக் காத்தும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.

“அரசனை நம்பி புருஷனைக் கை விடும்” அமைப்பு அஷ்டமச் சனியில் இருக்கும் என்பதால் மாற்றங்கள் எதையும் நீங்களே தேடிக் கொண்டு போகாமல்  மாற்றங்கள் வந்தால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொண்டு, நம்மால் முடிந்த வகையில் திறம்படச் செய்வதே சிறந்தது.


இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படும் அமைப்பும் அது போன்ற எண்ணங்களும் சிலருக்கு வரலாம். அதுபோன்ற விஷயங்களும் தற்போது நடக்கும். அது போன்றவர்கள் எதிலும் பேராசைப் படாமல், புதிதாக எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பிக்காமல் விழிப்புணர்வுடனும், மனக் கட்டுப்பாட்டுடனும் இருப்பதன் மூலம் சனியால் நடக்க இருக்கும் சங்கடமான அமைப்புகள் இருந்தால் கூட அவற்றை சாதகமானவைகளாக கண்டிப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்னொரு பலனையும் சொல்கிறேன். அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களைத் தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் செட்டிலாக விடாமல் தடுக்கும். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும்.
நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார்.

சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதகமற்றவை செய்வார். குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணச்  சிக்கல்களும், கடன்தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப் பணியாளர்கள் இதர வருமானங்கள் வரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள். எல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள்.    
அஷ்டமச் சனி நடக்கும்போது மாணவர்கள் மற்றும் இளையவர்களுக்கு சோம்பலும், விரக்தி மனப்பான்மையும் வரும் என்பதால் இளைய பருவத்தினர் மற்றும் மாணவர்கள் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் அக்கறையுடன் கவனிப்பது நன்மைகளைத் தரும்.

சிலருக்கு இந்த நேரத்தில் படிப்பதை தவிர வயதுக்கேற்ற மற்ற விஷயங்களில் ஆர்வம் வந்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்குவது, வீட்டை  இடித்துக் கட்டுவது, புதுவீடு வாங்குவது போன்ற விஷயங்களில் இப்போது அவசரம் காட்டவேண்டாம். இருக்கும் வீட்டை விற்று, வீடு விற்ற பணம் வேறுவகையில் செலவாகி, இருந்த சொந்த வீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்கச் செய்வார் சனி என்பதால் கவனமுடன் இருங்கள். அவசரப்படாதீர்கள்.

போட்டி, பந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை கை கொடுக்காது. இவைகளில் சிறிது பணம் வருவது போல் ஆசை காட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம்.  பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது ஸ்ரீராமதாசன் ஹனுமானின் சந்நிதியில் சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுங்கள். அஷ்டமச்சனியின் கடுமை குறையும்.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும் ஆறாம் இடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு பகவான் மாறுகிறார்.

ஏழாம் இடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் இந்த இடம் மிகுந்த நன்மை தரும் இடமாக குருவிற்கு சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கோட்சார ராசிபலன்களாக இருந்தாலும் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்களாக இருந்தாலும், எதிலும் நுணுக்கமாக கணித்து பலன் சொல்லக்கூடிய நான் இம்முறை ரிஷப ராசிக்கு சொல்ல இருக்கும் குருப் பெயர்ச்சி பலன்களும் சற்று மாறுபாடானதாகத்தான் இருக்கும்.

வருடாந்திர கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள் தரும் பலன்களில் கோட்சார அமைப்பில் ஒருவருக்கு சனியின் பலன்கள் மட்டுமே கூடுதலாக தலைதூக்கி நிற்கும். அதிலும் சனி சாதகமற்ற அமைப்பில் இருக்கும்போது மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும், அவைகள் தரும் நற்பலன்களை சனிபகவான் தடுப்பார்.

குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் சனியின் ஆதிக்கம் மட்டுமே ஒரு ஜாதகருக்கு முன் நிற்கும் என்பதால், இந்த காலகட்டங்களில் வருகின்ற குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்றவை தங்களுடைய நல்ல, கெட்ட பலன்களை சனிக்கு முன் பாகத் தர இயலாது.
கோட்சார ரீதியில் தற்போது ரிஷப ராசியினர் அஷ்டமச் சனியின் ஆதிக் கத்தில் இருக்கிறீர்கள். அஷ்டமச் சனி காலத்தில் ஒரு

வருக்கு தொழில் முன் னேற்றமும், சொந்த வாழ்க்கையில் நல்ல பலன்களும், பண விவகாரங்களில் நன்மைகளும் நடக்காது என்பது விதி. இந்த அமைப்பின்படி பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது நன்மைகள் எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் செட்டிலாக தடை செய்யும் அமைப்புகள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவ ரிஷப ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங் களில் முன்னேற்றம் இல்லை. இது அஷ்டம சனி முடியும் காலமான 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

தற்போது வருகின்ற குரு பெயர்ச்சி, அஷ்டமச் சனியின் ஆதிக்கத்திற்கு முன்னர் பலன் தர இயலாது. ஒரு ஸ்தம்பித்த நிலையில்தான் பலன்கள் இருக்கும். எனவே ஏழாமிடத்துக் குருவால் கோட்சார ரீதியில் அது நடக்கும், இது நடக்கும் என்று எழுதி ரிஷப ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிவிட நான் தயாராக இல்லை. எனது இந்த பலனை மறுப்பவர்கள் அடுத்த வருடம் குரு மாறிய பிறகு ஒரு வருட காலத்தை பின்னோக்கிப் பார்க்கும் போது எனது பலனின் உண்மை தன்மையை உணருவார்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பெரிய நன்மை எதுவும் தந்துவிடப் போவதில்லை. அதே நேரத்தில் குருவின் பார்வை மூலம் ராசி உறுதித்தன்மை பெறுவதால் எதையும் சமாளிக்கும் மனோதிடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது உண்டாகும். அதாவது அஷ்டமச் சனியால் உண்டாகும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதை சமாளிக்க கூடிய தைரியத்தை குரு பகவான் தருவார் என்பதுதான் சரியான பலனாக இருக்கும்.

நான் ஏற்கனவே எழுதியுள்ளபடி ரிஷபராசி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. அடுத்தவரை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்

இந்த காலகட்டத்தில் எவரை நம்பியும் எந்தத் தொழிலும் செய்யக் கூடாது. கூடுமானவரை புதிய தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே செய்ய நேரிட்டாலும் அதிகமான முதலீடு இல்லாமல், சுத்தமாக பணத்தை முதலீடு செய்யாமல் உங்களுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து செய்யக்கூடிய தொழிலைச் செய்யலாம். பண முதலீடு கூடவே கூடாது அகலக் கால் வைக்காதீர்கள். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் கசப்பு மட்டுமே வருகின்ற காலகட்டம் இது.

அதேநேரத்தில் ரிஷப ராசியில் பிறந்த எல்லோருக்கும் கெடுதலான பலன்கள் மட்டுமே நடந்து விடுவதில்லை. பிறந்த ஜாதக அமைப்பின்படி யோக தசாபுக்திகள் நடப்பவருக்கு கடுமையான கெடுபலன்கள் இருக்காது. அதே நேரத்தில் நல்லவைகளும் நடக்காது.

குருபகவான் 7-ஆம் இடத்திற்கு மாறுகின்ற நிலையில், தன்னுடைய சுப பார்வையால் 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுவார். அவர் பார்வை பெறும் பதினொன்றாம் இடம் லாபஸ்தானம் என்பதால் பாலைவனத்தில் நடந்து செல்பவனுக்கு நடுவே ஒரு சோலை தெரிந்தார் போல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு சில பணவரவு மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். ஆயினும் அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் அதுவும் தடைகளோடுதான் நடக்கும்.

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் திருமணத்தை நடத்தி வைக்க கூடிய ஏழாம் இடத்து குரு வந்திருப்பதால், தசாபுக்திபடி தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் நடக்கும். அதேநேரத்தில் திருமணத்தின் மூலமாக பலன்களை அனுபவிக்க முடியாதபடி ஒரு சில சிக்கல்கள் இருக்கும்.

சிலர் திருமணமான உடனே வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு திருமணம் ஆகாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பு மனதுக்குள் ஓடும்.

சுப கிரகமான குரு பகவான் ஏழாம் இடமான நட்பு வீட்டில்அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், தொல்லை களை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும், செயல்திறனும் ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்டாகும் எதையும் ஒரு எதிர்கால நோக்கோடு செயல்படுத்த முயற்சிப்பீர்கள். எதையும் தனி ஒருவராக போராடிப் போராடித்தான் செய்வீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யவும் ஆள் இருக்காது.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகுவை பார்ப்பது இந்த பெயர்ச்சியின் மூலம் கிடைக்க இருக்கும் ஒரு அற்புதமான நிலை. இதன் மூலம் மூன்றாம் இடத்தின் சுப காரகத்துவமான முயற்சி, புகழ், கீர்த்தி ஆகியவை நடைபெறும். இதுவரை தாழ்வு மனப்பான்மையால் எதையும் முயற்சிக்காமல் இருந்தவர்கள் தற்போது தைரியமாக முயற்சி செய்வீர்கள்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்த வர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப்பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.

இதுவரை கருத்து வேற்று மைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

அஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.

ஜோதிடக்கலை அரசு
ஆதித்ய குருஜி88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

ரிஷபராசிக் காரர்களுக்கு தற்போது நான்கு, பத்தாமிடங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் மிகவும் நற்பலன்களை தரக்கூடிய மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாற இருக்கிறார்கள்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்ல பலன்களை அடையப் போகும் ராசிகளில்  ரிஷப ராசியும் ஒன்று. கடந்த காலங்களில் வீடு, வாகனம், உயர்கல்வி, தாயார் நலம், தன் சுகம் ஆகிய பலன்களை காட்டக் கூடிய நான்காமிடத்தில் இருள் கிரகமான ராகுபகவான் அமர்ந்திருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மேற்கண்ட விஷயங்களில் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நடைபெற வில்லை.

குறிப்பாக வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த நிலைமை, சொந்த வீட்டுக் கனவு இழுத்துக் கொண்டே போகுதல், தாயார் வழி விஷயங்களில் தடைகளும், தாமதங்களும், அம்மா சம்பந்தபட்ட விஷயங்களில் எதிர்மறை பலன்கள், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமின்மை, உயர்கல்வி கற்க தடை, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறை ஆகியவை நான்காமிடத்தில் இருந்து வந்த ராகுவால் நடந்து கொண்டிருந்தன.

மேற்கண்ட சாதகமற்ற பலன்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் மாறுதல் அடைந்து அனைத்திலும் இருக்கும் தடைகள் உங்களுக்கு நீங்கும்.

குறிப்பாக தன்னுடைய 18 ஆண்டுகால ஒரு முழுச் சுற்றில் ராகு-கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களில் மட்டுமே நற்பலன்களை தருவார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதாவது தன்னுடைய சுற்றுப் பாதையில் வெறும் நான்கரை ஆண்டு காலம் மட்டுமே ஒரு மனிதனுக்கு நன்மைகளை தரக்கூடிய விதத்தில் ராகு-கேதுக்கள் அமர்வார்கள். அதில் மிக முக்கியமான ஒரு அமைப்பு மூன்றாமிடமாகும்.

எனவே 18 ஆண்டுகளுக்கு மட்டுமே வரக் கூடிய மூன்றாமிட ராகு தற்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்திருப்பதால் இது ஒரு சிறப்பான ஒரு நற்பலன்களை தரக் கூடிய பெயர்ச்சியாகவே ரிஷபத்திற்கு இருக்கும். இன்னும் ஒரு கூடுதல் நன்மையாக தற்போது மாற இருக்கும் கடக வீடு, ராகுவிற்கு மிகவும் பிடித்த ஒரு வீடு என்பதாலும் இம்முறை ரிஷபத்திற்கு நற்பலன்கள் நன்றாகவே இருக்கும்.

அடுத்து ஒன்பதாமிடத்திற்கு மாற இருக்கும் கேதுபகவான் அவர் மாறப்போகும்  மகர வீடு சனியின் நட்பு வீடு என்பதால், சிலருக்கு ஆன்மிக எண்ணங்களை கூடுதலாக தருவார். கேதுபகவான் நல்ல அமைப்பில் இருக்கும் போது ஒரு மனிதனுக்கு ஆன்மிக அனுபவங்கள் தூக்கலாக இருக்கும் எனும் விதிப்படி. தற்போது மாற இருக்கும் கேதுவின் அமைப்பினால் உங்களுக்கு நல்ல ஆன்மிக அனுபங்கள் ஏற்படும்.

பாக்கிய ஸ்தானத்திற்கு வரப் போகும் கேதுவால் இதுவரை கிடைக்காத சில பாக்கியங்கள் உங்களுக்கு இப்போது கிடைக்கும். அவரவர்களின் வயதிற்கேற்ப அந்த வயதிற்குரிய நல்ல அமைப்புகள் இப்போது நிறைவேறும். எதுவும் கிடைக்க இருந்து வந்த தடைகள் விலகும்.

ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்கப் போகும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களுக்கு அஷ்டமச் சனியாக மாற இருக்கும் நிலையில் ராகு-கேதுக்கள் முயற்சி மற்றும் தைரிய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் வருவது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைப்பு.

இதன் மூலம் உங்களுடைய சிந்தனை தெளிவாகும். திட்டமிடல் நன்றாக இருக்கும். எந்த ஒரு பிரச்னையையும் தீர்க்கமுடன் யோசித்து சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி’   
அதே நேரத்தில் ராகுகேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் வரப் போவதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த வித புது முயற்சிகளும், தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம்.

வேலை செய்பவர்களும் இருக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வருவது நல்லது. மேலதிகாரி சொல்லும் பேச்சுகளைக் கவனமாக கேட்டு நடங்கள். அலுவலகங்களில் வீண் ஈகோ பார்க்க வேண்டாம். வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போக போகிறேன் என்பது இந்த நேரங்களில் உதவாது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இப்போது நடக்கும் என்பதால் இருக்கும் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. அல்லது இன்னொரு வேலை கிடைத்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. ஆனால் புதிதாய்க் கிடைக்கும் வேலை நன்றாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சில நேரங்களில் இந்தப் பேயை விட அந்தப் பிசாசிடமே இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கும்.

அரசு, தனியார், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் சம்பள உயர்வு, படிகள் போன்றவை ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

சிலருக்கு இப்போது வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றம் வேண்டாததாக, பிடிக்காததாக இருக்கலாம். சில நிலைகளில் சீதோஷ்ண நிலை ஒத்து வராத இடங்களில் இருக்க வேண்டியிருக்கும். எங்கேயாவது நமது தாய்மொழி காதில் கேட்காதா என்று ஏங்கும்படி முற்றிலும் அந்நிய மொழி, இன, மத பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

பொருளாதார நிலை மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பிற இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். ராகு-கேதுப் பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது.

இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத ரிஷப ராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் ஒரு காலகட்டம் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

ராகுபகவான் மூன்றாமிடத்தில் நிலை கொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப் பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று நல்ல முடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

குறிப்பாக அடுத்த சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மதங்களில் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வின் சில முக்கிய திருப்பு முனையான அமைப்புகளைப் பெறுவீர்கள் என்பதோடு அதன் மூலம் உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாகவும் இருக்கும் என்பதும் உறுதி.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். வருமானம் வந்தால்தானே செலவு செய்ய முடியும்? எனவே பணவரவும் திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். இந்தப் பெயர்ச்சியில் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது. அதேநேரத்தில் முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும்  அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செய்யாத தவறுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால் எதற்கும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள்.  

ரோகினி நட்சத்திரக்கார்களுக்கு:

இந்த  வருட பிற்பகுதியில் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். சிலருக்கு ஒரு வருட காலம் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கே உரிய போக்கால் மனக்கஷ்டங்களையும் தருவார்.

மிருகசீரிடம் நட்சத்திரக்கார்களுக்கு:

வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

பரிகாரங்கள்

சென்னையில் இருப்பவர்கள் மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை தினத்தன்று நடக்கும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்து கொண்டு நன்மை பெறுங்கள். வெளியூரில் இருப்பவர்கள் அருகாமை கோவில்களில் இந்த ஹோமம் நடைபெறும்போது கலந்து கொள்ளுங்கள்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store