iFLICKS தொடர்புக்கு: 8754422764
விருச்சகம்

இன்றைய ராசி பலன்கள்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நாட்டுப் பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலை பேசிவழித்தகவலால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும்.     

வார பலன்கள்

ஏப்ரல் 21-04-2019 முதல் 27-04-2019 வரை:

கிட்டத்தட்ட ஏழரைச் சனி முடியும் நிலைக்கு வந்து விட்டதால் விருச்சிகத்தினர் அனைத்திலும் வெற்றி காணும் வாரம் இது. அடியை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமா கதாநாயகன் அம்மாவின் குரலைக் கேட்டதும் வீறு கொண்டு எழுந்து எதிரிகளை பந்தாடுவதைப்போல எதிலும் நீங்கள் உற்சாகம் காணும் நிலை வந்து விட்டது. எனவே விருச்சிகத்தினர் உங்கள் கவலைகளை மூட்டை கட்டி மூலையில் வைக்க தயாராகலாம். வேதனைகள் விலகும் காலகட்டம் ஆரம்பித்து விட்டதால் இனிமேல் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.

இதுவரை நிலுவையில் இருந்து உங்களை தொல்லைப்படுத்தி வந்த பிரச்னைகள் இந்த வாரம் சாதகமாக முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து கொண்டிருந்த வி‌ஷயங்கள் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். குறிப்பாக அனு‌ஷம் நட்சத்திரக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. கேட்டையினர் இனி கோட்டை கட்டுவீர்கள்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

ஏப்ரல் மாதம் 15-ம் தேதியில் இருந்து மே மாதம்14-ம் தேதி வரை

ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் விருச்சிகத்தினர் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. குறிப்பாக கோர்ட், வழக்கு போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். யோகாதிபதியான சூரியனும் உச்சநிலையில் இருப்பது உங்களைப்பாதுகாக்கும் அமைப்பு என்பதால் இந்தமாதம் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். சினிமாவில்தான் கதாநாயகன் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் அப்படி முடியாது. நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். விருச்சிகம் இனிமேல் சாதிக்கும்.

சிக்கலுக்குஉள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வரும். சூரியனுக்கு குரு பார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிகராசிக்காரர்கள்எதற்காகவும் இனி கலங்கத் தேவையில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான். செவ்வாய் சுபர் வீட்டில் இருப்பதால் பின்னடைவுகள் இல்லாத மாதம் இது. ராகு எட்டில் இருந்தாலும் சுப நிலை பெறுவதால்லாபங்களும், பண வரவுகளும்அந்நிய, இன, மத, மொழிக்காரர்களால்நன்மைகளும் இருக்கும். இதுவரை பயமுறுத்தி கொண்டிருந்த விஷயங்கள் நல்லவிதமாக மாறும். விருச்சிகத்திற்குகெடுபலன்கள் எதுவும் இனி இல்லை.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2019

கடந்த சில வருடங்களாக விருச்சிக ராசிக் காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் அதிகம் என்பதை என்னுடைய ராசிபலன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் விருச்சிக ராசி இளைய பருவத்தினர் கெடுதல்களை சமாளிக்க முடியா மல் திணறித்தான் போனீர்கள்.

2019-ம் வருடம் விருச்சிகத்தின் வேதனைக்கு முழுமையாக முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும். இந்த ஒரு காரணத்திற்காகவே பிறக்க இருக்கும் புத்தாண்டினை நீங்கள் வரவேற்பீர்கள்.
கடந்த சில வருடங்களாக விருச்சிகத்தினர் தொழில்துறையில் சிக்கல்கள், வேலையில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லைகள், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காதது, வாழ்க்கையில் இன்னும் செட்டிலாகாமல் இருப்பது போன்ற அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டீர்கள். உங்களில் சிலருக்கு சென்ற வருடமே பிரச்னைகள் தீர ஆரம்பித்து விட்டன. மீதி இருப்பவர்களுக்கும் இந்த வருடத்தோடு தொல்லைகள் ஓயும்.

எவ்வித கோட்சாரக் கிரகநிலைகள் உங்களுக்கு கைகொடுக்கா விட்டாலும் இந்த வருடத்தோடு ஏழரைச்சனி உங்களை விட்டு முழுமையாக விலகப் போகிறது என்பதே இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எல்லாவித தடைகளையும் நீக்குகின்ற ஒரு அமைப்பு.

சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பது ஜோதிடவிதி. எனவே மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி இந்த வருடத்தோடு முடியப் போவதால் விருச்சிக ராசிக்காரர்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் ஆண்டு உங்களுக்கு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும்.

இன்னொரு முக்கிய பலனாக ஒரு ஜோதிடப் பொது மேடையில் நான் எடுத்துரைத்ததைப் போல கடுமையான ஏழரைச்சனி நடக்கும்போது மற்ற கிரகப் பெயர்ச்சிகள் அதனுள் அடங்கி நன்மைகளைத் தராது. உதாரணமாக ஜென்மச் சனி நடக்கும்போது குரு சாதகமான வீட்டில் இருந்தாலும் பலன் தர மாட்டார். சனிக்கு அடங்கித்தான் குரு பலன் தருவார்.

ஏனெனில் சனி என்பது தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு கிரகம். அவர் தண்டனை தந்து கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் புகுந்து ஜாமீனில் எடுப்பதோ, விடுதலை வாங்கித் தருவதோ முடியாத காரியம். அதன்படி கடந்த சில வருடங்களாக நடந்த ராகு-கேது, குருப்பெயர்ச்சிகள் எதுவும் விருச்சிகத்திற்கு நன்மை, தீமைகளை செய்யவில்லை. இனிமேல் அந்த நிலை மாறி மற்ற வருடக்கிரகங்கள் மூலமும் இனி உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

இந்தப் புது வருடம் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும்.

எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும்.

உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.
குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

இளைஞர்கள் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். அது கைகூடும் காதலாகவும் இருக்கும். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும். எனவே எந்த நிலையில் பார்த்தாலும் பிறக்கப் போகும் புது ஆண்டு முதல் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பது உறுதி.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

விகாரி வருட பலன்

கடந்த காலங்களில் விருச்சிகம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் விலகப் போகிறது. பாதி விலகியும் விட்டது. விருச்சிகத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தையும், வழியையும் காட்டக் கூடிய தமிழ்ப் புத்தாண்டு இது.

விருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் தனியாக யோசித்து உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தார். ஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. போனதெல்லாம் போகட்டும். இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

வருடத்தின் ஆரம்ப நாளில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதும், சமீபத்திய ராகு கேது பெயர்ச்சியால் இரண்டில் இருக்கும் சனியுடன் கேது இணைந்து சனியின் குணம் மட்டுப்பட்டிருப்பதும், விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பு. விகாரி வருட முடிவில் உங்களுக்கு ஏழரைச்சனி முழுக்க விலகுவது அதைவிட நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு.

சனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரும் நிலைகள் உருவாகும்.

நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும் தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற புது வருடமாக இது இருக்கும்.

வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும்.

உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வரும் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும்.

வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும். எதிலும் நிம்மதியற்ற சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறி ஒரு சந்தோஷமான சூழல் இருப்பதை உணர முடியும்.

மேம்போக்காகப் பார்க்கையில் விகாரி புத்தாண்டின் ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு முன் நடந்த ராகுகேதுப் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பைக் கொடுப்பது போலத் தோன்றினாலும் ராகுபகவான் பிற்பகுதி முழுவதும் குருவின் பார்வையில் இருக்கப் போவதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

அதேநேரத்தில் ராகு எட்டில் இருப்பதால் உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.
ராகுகேதுக்களை அடுத்து நவம்பரில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தடுக்கப்படும். விரயங்கள் நிற்கும். மருத்துவச் செலவுகளோ, கடன் தொல்லைகளோ இருக்காது.

குருப்பெயர்ச்சியின் மூலம் இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் விருச்சிக ராசியினருக்கு இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.

திருமணமாகாமல் இருப்பவர் களுக்கு நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

பொதுவாக சொல்லப் போனால் இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படுங்கள். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும்.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும். இனிமேல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.

சொந்தவீடு இல்லாதவர்களுக்கு கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.

கடந்த காலங்களில் சந்தித்த மனக் கஷ்டங்கள் எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். சுருக்கமாக சொன்னால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பீர்கள். உங்களைச் சுற்றி வெற்றி கொடியினை மட்டும் பறக்க விடுவீர்கள். விருச்சிகம் சாதிக்கும் வருடம் இது.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

விடிவு பிறக்கும் விருச்சிகம்   

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

எந்தப் பக்கம் செல்வது என்று கரை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அவர்களுடைய துயரங்களைத் தீர்த்துக் கரை சேர்க்கும் விதமாக 2017 அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சி அமைய இருக்கிறது.

ஏழு ஜென்மத்திற்கு உண்டான சோதனைகளை இந்த ஒரு ஜென்மத்தில் விருச்சிகத்தினர் அனுபவித்து விட்டீர்கள். நீங்கள்தான் விருச்சிக ராசியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் விருச்சிகமாக இருந்தாலே அந்த குடும்பத்தில் 2012 முதல் சோதனைகள் ஆரம்பமாகிவிட்டன.

குறிப்பாக சொல்லப் போனால் வீட்டில் வேறு யாராவது ஒருவர் மேஷ ராசியாக இருந்தால் அந்தக் குடும்பம் அளவற்ற மன அழுத்தங்களையும், துன்பங்களையும் சந்தித்தது. பிறந்த ஜாதகம் வலுவாக உள்ள மிகச்சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே பாதிப்புகள் தாங்கிக் கொள்ளும்படி இருந்தன.

ஜென்மச்சனியின் தாக்கத்தினால் நெருங்கிய உறவினரை இழந்தவர்கள், வேலையைப் பறி கொடுத்தவர்கள், தூக்கம் தொலைத்தவர்கள், கடன் தொல்லையில் அவஸ்தைப் பட்டவர்கள், உடல்நலம் கெட்டவர்கள்  இன்னும் சில சொல்ல முடியாத பிரச்னைகளில் சிக்கியவர்கள் அனைவரும் இனிமேல் அனைத்தும் சாதகமாக அமைந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.  

என்னதான் யோகசாலியாக இருந்தாலும் எல்லோரையும் சனி ஆட்டி வைத்து விட்டார். 40 வயதுக்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் ஏதாவது ஒரு வகையில் இந்த ஏழரைச் சனியால் பாதிப்புகளை அடைந்தீர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

கடந்த சில ஆண்டுகளில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் 80 சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிகத்தினை குடும்ப உறுப்பினராகக் கொண்டவர்கள் என்பதை அடிக்கடி மாலைமலர் ராசிபலன்களிலும், பேஸ்புக், யூ டியூப் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் கடந்த வருடம் கேட்டை நட்சத்திரத்தில் சனி சென்றதால் அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைகள் அனைத்தும் வருகிற சனிப் பெயர்ச்சி முதல் மாற இருக்கிறது.

இப்போதைய சனி மாற்றத்தின் மூலம் முழுவதுமாக ஏழரைச்சனி நீங்கவில்லை என்றாலும் மூன்று பிரிவாக அமையும் சனியின் தாக்கத்தில், நடுப்பகுதியான ஜென்மச்சனி எனப்படும் இரண்டரை ஆண்டு காலமே கடுமையான கெடுபலன்களை தரும் என்பதால் இனிமேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் எதுவும் நடக்காது என்பது உறுதியான ஒன்று.

அதைவிட மேலாக சனிபகவான் எங்கெல்லாம் பாதிப்புகளைக் கொடுத்தாரோ, எப்படிப்பட்ட இடத்தில் உங்களை அடித்தாரோ, அவைகளை அவரே நீக்கி இனி வேதனைகளும், சோதனைகளும் மாறுவதற்கான வழிவகைகளைச் செய்வார். எனவே இதுவரை கெடுபலன்கள் நடப்பதை மட்டும் பார்த்து மனஅழுத்தங்களில் இருப்பவர்களுக்கு சோதனைகள் விலகி படிப்படியாக நன்மைகள் நடப்பதை கண்கூடாகக் காண முடியும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணம் என்றால் என்ன, நல்லவர் யார், கெட்டவர் யார், உறவுகள் எப்படிப்பட்டது, நட்பு என்பது என்ன என்பதை சனிபகவான் புரிய வைத்து விட்டதால் அவர் தந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் நீங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலையை அடைய இந்த சனிப்பெயர்ச்சி துணை நிற்கும்.

“அதோ வருகிறது நல்லகாலம் இதோ வருகிறது நல்லகாலம்” என்று புலி வரும் கதையாக நான் சொல்லிக் கொண்டிருந்த சனிப்பெயர்ச்சி இப்போது நடந்தேறி உங்களைப் பிடித்திருந்த ஜென்மச்சனி விலகுகிறது. முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இனி  நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். சனியினால் இதுவரை நடந்த கெடுதல்கள் இனிமேல் இருக்காது. இனி உங்கள் வாழ்க்கை  உங்கள் கையில் இருக்கும்.

விருச்சிகத்தினர் சிலர் ஒவ்வொரு வாரமும், மாதமும் எனக்கு நல்ல பலன் நடக்கும் என்றுதான் எழுதுகிறீர்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லையே என்று  என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
ராசிபலன் என்பது பொதுவான ஒன்றுதான். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருக்கும் விருச்சிகத்தினரில் சிலர் மட்டுமாவது என்னுடைய ஆறுதல் ஊட்டும் பலன்களைப் படித்து நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.  

சிக்கலில் தவிக்கும் ஒரு ஆத்மாவை இன்னும் கொஞ்சகாலத்தில் உனக்கு  நல்ல காலம் பிறக்க இருக்கிறது, கவலைப்படாதே என்று தேற்றுவதுதான் ராசிபலனின் வேலை. அதுவே ஒரு நல்ல ஜோதிடரின் கடமை. அந்தவகையில் எனது கடமையை மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் சரியாகச் செய்திருக்கிறேன் என்பதற்கு என்னுடைய பேஸ்புக்கிலும், யூ டியூப்பிலும், இணையதளத்திலும் இருக்கும் வாசகர்களின் கமெண்டுகளே சாட்சி.

இந்தப் பெயர்ச்சியினால் இளைய பருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும், மன அழுத்தத்திலும்  இருந்து விடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.

இதுவரை இருந்து வந்த தேவையற்ற பயஉணர்வுகளும், கலக்கமான மன நிலையும், சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கிப் பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

சனி மாற்றத்தினால் அனைத்து நன்மைகளும் நடக்கும். தாமதமாகி வந்த எல்லா பாக்கியங்களும் கை கூடும். சிக்கலில் ஆழ்த்திக் கொண்டிருந்த கடன் தொல்லை ஒழியும், பணபிரச்னை தீரும். கஷ்டங்களைக் கொடுத்து வந்த மகன், மகளின் பிரச்னைகள் தீர்த்து புத்திர விஷயத்திலும் நிம்மதி அடைவீர்கள். காரணம் தெரியாமல் தடையாகிக் கொண்டிருந்த மகன், மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி ஊர் வாயை அடைக்க முடியும்.

ஆரோக்கியம் மேம்படும். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். கோர்ட், கேஸ் என்று மன வருத்தங்களில் இருந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடியும். இனிமேல் நீதிமன்றம், காவல்நிலையம் என்று அலைய வேண்டி இருக்காது.

வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும் விலகி அனைத்தும் நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல்  இருக்காது. அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தொல்லை கொடுத்த அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் வருவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி குழந்தை உண்டு. சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கை கூடும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள்.  கூட்டுத் தொழிலில் இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

விருச்சிக ராசிக்கு இது முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நன்மைகளால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். மொத்தத்தில் இது உங்களுக்கு இருந்து வந்த அதிர்ஷ்டக் குறைவை விரட்டி அடிக்கும் சனிப்பெயர்ச்சியாக இருக்கும்.

பரிகாரங்கள்:

பாதச் சனி நடப்பில் உள்ளதால் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சனியின் கடுமை குறையும். கெடுதல்கள் இருக்காது. இதையே நெய் தீபமாக ராமபக்தன் ஸ்ரீஹனுமனுக்கும் செய்யலாம் .

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிக ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்ம குருவாக மாறுகிறார். ஏழரைச்சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விடியலைக் காட்டும் பெயர்ச்சியாக இது அமையும்.

இருள் கிரகமான சனி உங்கள் ராசியில் அமர்ந்ததால் கடந்த சில ஆண்டுகளாக விருச்சிகத்தினர் சொல்ல முடியாத அவஸ்தையில் இருந்தீர்கள். 2012 ம் ஆண்டிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையான சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவரவர் வயது, இருப்பிடம், சூழ்நிலைக்கேற்ப கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் விருச்சிக ராசியாக இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டில் ஒரு விருச்சிகம் இருந்தாலே அந்தக் குடும்பத்தில் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் இளைய பருவத்தினர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறீர்கள். கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக நடந்த எந்தக் குருப்பெயர்ச்சியும் விருச்சிக ராசிக்கு நல்ல, கெட்ட பலன்களைத் தரவில்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஏழரைச் சனியின் சாதகமற்ற பலன்கள் மட்டும்தான் விருச்சிகத்திற்கு முன்னே நின்றது.

இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒன்பதாமிட, பதினோன்றாமிட குருப் பெயர்ச்சிகளும் விருச்சிகத்திற்கு நன்மைகளைத் தரவில்லை. அந்த ஆண்டுகளிலும் விருச்சிகத்தினர் சோதனைகளைத்தான் அனுபவித்தீர்கள். ஆனால் உங்களை கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த ஜென்மச் சனி அமைப்பு விலகி விட்டதால் இனி குருவால் நன்மைகள் மட்டுமே இருக்கும்.

இந்த பெயர்ச்சி மூலம் இது வரை இழந்த, இழந்து கொண்டிருக்கும் அனைத்தையும் விருச் சிக ராசிக்காரர்கள் திரும்ப பெறப் போகிறீர்கள். கடுமையான சோதனைக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. இனி நடக்க இருக்கும் அனைத்து கிரகப்பெயர்ச்சிகளும் உங்களுக்கு சுப விஷயங்களை மட்டுமே தரும்.

குருவின் அமர்வால் உங்கள் ராசி ஒளி பெறுகிறது. அதாவது நீங்கள் ஒளி பெறப் போகிறீர்கள். உங்களைச் சுற்றி ஒரு பாசிடிவ் எனர்ஜி உருவாகப் போகிறது. இனிமேல் நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள். இந்த அமைப்பால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் இம்முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குருபகவான் அளிப்பார்.

குரு, சனி மாற்றங்கள் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும்.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதமாகிப் போனவைகள் கிடைக்கும். மாறும் கிரகநிலைகள் இப்போது மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர் களுக்கு மிகப்பெரிய திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப் பளுவும் அதிகமாக இருக்கும். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும்.

கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக் கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரி களையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப் பெயர்ச்சியால் இருக்கும். அடிக்கடி ஞாபகமறதி வரும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது.

வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகை களை கையாளும்போதோ கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ராசியில் அமரும் குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப் படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.

குருவின் ஏழாமிட பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள்.

மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். விருச்சிக ராசியினருக்கு மகன், மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு அருள்புரிவார்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.

குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். புத்திரதோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது.
குருபகவான் புத்திரகாரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்தநேரத்தில் எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும். இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது.

பரிகாரங்கள்: மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப் போய் உதவி செய்து அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக் குறைவான பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

விருச்சிகத்திற்கு இனி என்றும் வேதனைகள் என்பது இல்லை. நீங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் போய்விட்டது. அடுத்தடுத்து நடக்க இருக்கும் கோட்சார கிரக மாறுதல்கள அனைத்தும் இனி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். இனி விருச்சிக ராசியினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

இப்போதைய ராகு, கேது பெயர்ச்சியை பார்க்கப் போனால் இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த ராகு எட்டாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்து வந்த கேது இரண்டாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.

மேற்கண்ட இரண்டு, எட்டு எனும் இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு கிரகம் கெட்ட இடத்தில் அமர்வதால் மட்டுமே கெடுபலன்களைத் தந்துவிட முடியாது. அந்த இடத்தில் யாருடன் அந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்தே அது செய்யும் நல்ல, கெட்ட பலன்களை முடிவு செய்ய முடியும்.

அதன்படி இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் எட்டாமிடத்திற்கு ராகு மாறினாலும் வரும் நவம்பர் மாதம் முதல் குருவின் பார்வையை பெறப்போவதால் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தின் கெடுபலன்களை ராகு செய்யமாட்டார்.

அதேபோல இரண்டாமிடத்திற்கு மாறும் கேது, குருவின் வீட்டில் இருக்கப் போவதாலும், நவம்பர் முதல் குருவோடு இணையப் போவதாலும் கெடுதலாக சொல்லப்படும் இரண்டாமிடத்து கேதுவும் உங்களுக்கு கெடுபலன்களை செய்யாது என்பது உறுதி.

அதே நேரத்தில் எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் குறிக்கும் இடம் என்பதாலும் ராகு எதையும் தலைகீழாக மாற்றும் கிரகம் என்பதாலும் உதாரணமாக கிழவனைக் குமரனாகவும், பிச்சைக்காரனை குபேரனாகவும் ராகு மாற்றுபவர் என்பதால் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் ஒருவர் பாக்கியில்லாமல் சந்தோஷமாக இருக்க வைப்பதே ராகுவின் எட்டாமிடத்து பலனாக இருக்கும்.

இன்னொரு குறிப்பிட்ட பலனாக இதுவரை ஒரே இடத்தில் நிலையாக இருப்பவர்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி மாற்றியமைக்கும் என்பதோடு இருக்கும் இடத்தை விட்டு தூரத்திற்கும் அனுப்பும் என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் எல்லா நிலைகளுக்கும் தயாராக இருப்பது நல்லது.

எட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்குப் போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்கனவே மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.

கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங் களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.

இதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்\. தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர் களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை இனிமேல் நீங்கும்.

கேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 2020ம் ஆண்டு ஆரம்பத்திலேயே சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.

உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்தக் ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.
உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல் வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையின ருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.

சிலருக்கு வாழும் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையான அவதார புருஷர் களை அடையாளம் காண்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கு சென்று அடுத்தவரால் ஆராதிக்கப்படுவீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.
இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும்.

கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள். நவம்பருக்குப் பிறகு குருபகவானால் நல்ல மாறுதல்கள் இருக்கும்.

வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும். மொத்தத்தில் விருச்சிகத் திற்கு திருப்புமுனையாக இந்தப் பெயர்ச்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பரிகாரங்கள்

ராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store