iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

அக்டோபர் 14-10-2019 முதல் 20-10-2019 வரை:

ராசிநாதன் சூரியன் நீச்ச வலுப் பெற்று பலவீனமாகும் வாரம் இது. சூரியனின் நீச்சத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் நல்ல பலன்களை தராது என்பது ஜோதிட விதி. ஆயினும் சூரியன் நீச்சபங்கமடைந்தால் சாதகமான பலன்கள் சிம்மத்திற்கு நடக்கும். இந்த மாதம் முழுவதும் கூடவே இருக்கும் ஆட்சி பெற்ற சுக்கிரனால் சூரியன் நீச்சபங்கத்தை அடைவதால் இந்த வருடம் ஐப்பசி மாதம் சிம்மத்திற்கு தொல்லைகள் எதுவும் தராது. எனவே சிம்மத்திற்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை.

ராசிநாதன் நேர்வலு இழப்பதால் அனைத்து நன்மைகளும் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும் என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. 19, 20 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ந் தேதி இரவு 10. 26 முதல் 14-ந் தேதி காலை 10.20 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

ஆண்டு பலன் - 2019

பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிம்மராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி. வேலை தொழில் அமைப்புகளில் இப்போது சங்கடங்கள் இருப்பவர்களுக்கு புது வருட ஆரம்பம் முதல் பிரச்னைகள் படிப்படியாக தீர துவங்கி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து அனைத்தும் மாறி மிகவும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள்.

வருடத்தின் ஆரம்பத்தில் மார்ச் மாதம் 6 ம் நாள் இப்போது பனிரெண்டில் இருக்கும் ராகு விலகி, பதினொன்றில் இருக்கப் போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும். அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும்.

ராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும். சுருக்கமாகச் சொல்லப்போனால் வேலை தொழில் விஷயங்களில் பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.

வருடம் முழுவதும் ராகுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான பதினோராமிடத்தில் இருக்கிறார். அதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

வருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடம் சிம்மத்தினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.

ராகு,கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது வலுவான நன்மைகளைச் செய்வார்கள் என்பதால் இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் இந்த வருடம் விலகும். அதேபோல குருபகவான் அதிசார அமைப்பில் ஐந்தாமிடத்திற்கு வருவது பணப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும் உங்களின் பொருளாதார பிரச்னைகள் இந்த வருடம் தீர ஆரம்பிக்கும்.

ராகு,கேது நிலைகளின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் அதிசார அமைப்பின் மூலம் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் கிடைக்கும். எனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். எப்படிப் பார்த்தாலும் 2019-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும்.கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

நோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும். சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.

புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் வலுவாக இருக்கும் கேது மற்றும் சனி பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் தருவார்கள். பிள்ளைகளின் சுப காரியங்கள் இந்த வருடம் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.

சிம்ம ராசி பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் புது வருடத்தில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

விகாரி வருட பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும். புது வருட ஆரம்பத்தில், மறைமுகமான தன லாபங் களைக் கொடுக்கக் கூடிய ராகு பதினோன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும். உங்களின் யோகாதிபதியான குரு வருட பிற்பகுதியான நவம்பர் மாதம் ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவது அதைவிட நல்ல பலன்களை சிம்மத்திற்குத் தரும். எனவே எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடம் சிம்மத்திற்கு நன்மைகளை மட்டுமே தரும்.

ராகு நன்மைகளைத் தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்முறை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இருப்பதால் ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன, மதம் போன்ற விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாத சிம்ம ராசிக்காரர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிரந்தரம் வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் ஆரம்பிக்கும். உங்களில் சிலருக்கு இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். ஐந்தாமிடத்தில் இருக்கும் சனியால் கடந்த இரண்டு வருடங்களாக பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகளையும், மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்தவர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீரும்.

மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.

ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும் அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும், நீடித்தும் இருக்கும்.
நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு நல்ல ஸ்தானமான ஐந்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் புத்தாண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவிஉயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவைகளும் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினை கள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம். மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத் தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள்.

எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது. கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.

இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செல வழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும். உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள்.

தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். மொத்தத்தில் சிம்மத்திற்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும்.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் இனி சிறக்கும்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சிம்ம ராசிக்கு இதுவரை கெடுபலன்களை தரக்கூடிய இடமான நான்காம் இடத்தில் இருந்து வந்த சனிபகவான் ஐந்தாமிடத்திற்குச் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு மாற்றமாக அமையும்.

சனிபகவான் ஐந்தாமிடத்தில் இருப்பது நல்ல நிலை என்று நம்முடைய மூல நூல்களில் சொல்லப் படாவிட்டாலும் கடந்த மூன்று ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் அமர்ந்து ஜீவன ஸ்தானத்தை பார்த்ததன் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நிம்மதியற்ற சூழலை சனி கொடுத்துக் கொண்டிருந்தார்.

மேலும் தன்னுடைய கெடுதலான பார்வையின் மூலம் ராசியைப் பார்த்து சிம்மத்தினருக்கு மன நிம்மதி இல்லாத சூழல்களையும் உருவாக்கி இருந்தார். இதுபோன்ற நிலையில் இருந்து சனி நீங்குவது சிம்மத்திற்கு பெரிய நன்மைகளைத் தரும் என்பதால் இந்த சனிப் பெயர்ச்சியால் நன்மைகளை அடையப் போகும் ராசிகளில் சிம்மமும் ஒன்றாக இருக்கும்.

குறிப்பாக சிம்ம ராசிக்காரர்களின் உடல், மனம் இரண்டையும் பாதித்து கெடுபலன்களைத் தந்து கொண்டிருந்த சனி அர்த்தாஷ்டமச் சனி எனும் நிலையில் இருந்து மாறுவதே சிம்மத்திற்கு ஒரு மிகப் பெரிய நிம்மதியை தருகின்ற ஒரு நிலை.

கடந்த காலங்களில் சிம்மத்தினர் கடுமையான மனஅழுத்தத்தை தரக்கூடிய சம்பவங்களை எதிர் கொண்டீர்கள். இளம் பருவத்தினருக்கு வேலையில் நிம்மதி இல்லாத சூழ்நிலையும், வேலையே இல்லாத நிலைமையும், தகுதி, திறமைக்கேற்ற பணி இல்லாத ஒரு நிலையும் இருந்து வந்தது. அந்த நிலைமை இந்தப் பெயர்ச்சியின் மூலம் முற்றிலுமாக விலகி அனைத்திலும் சிம்மத்தினர் ஒரு நிம்மதியான நிலையை பெறப் போகிறீர்கள்.

வேறு சிலருக்கு வேலையில் மன அழுத்தம் தரக் கூடிய டார்ச்சர் எனப்படும் நிலைமைகள் இருந்ததோடு, சொந்த வாழ்விலும் மன இறுக்கம் தரக்கூடிய சூழல்கள் இருந்தன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, குடும்பத்தில் மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குழப்பம், பொருளாதாரச் சிக்கலினால் சண்டை, குழந்தைகளால் மனவேதனை போன்ற அனைத்து வித குழப்பங்களும் ராசிக்கு இருக்கும் சனியின் பார்வை விலகுவதால் தீரப் போகிறது.

சமீபகாலங்களில் இரண்டு பெரும் பாபக் கிரகங்களில் ஒன்றான ராகு உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்ததும், அந்த ராகுவை இன்னொரு பெரும் பாபரான சனி பார்த்ததும் சிம்மத்தினரின் மனம், உடல் இரண்டையும் பாதித்திருந்தன. பெரும்பாலான சிம்மத்தினருக்கு உடல்நலம் பாதித்தது இந்த அமைப்பால்தான்.

முன்னரே நடந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இரு மாதங்களுக்கு முன்பு ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி விட்டதும், தற்போது சனி மாற்றத்தினால் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் இருந்து விலகுவதும், ஒளி மிகுந்த ராசியான சிம்மத்தை மீண்டும் ஒளி வீசச் செய்யும் அமைப்புகள் என்பதால் உங்கள் உடலும், மனமும் இனி சீராகும்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையில் இருந்த சிம்மத்தினர் மீண்டும் இழந்த நம்பிக்கையைப் பெற்று வாழ்க்கையில் அனைத்தையும் சந்திக்கத் துணியும் செயல்திறனுடன், புத்துணர்ச்சியோடு வலம் வர தொடங்குவீர்கள். எனவே கெடுபலன்கள் நீங்கப் போகின்றது என்ற வகையில் இந்த பெயர்ச்சி ஒரு மகத்தான மாற்றத்தை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் உங்களுக்குக் கொடுத்து வாழ்வில் முன்னேற்றத்தினை தர இருக்கிறது.

அதேநேரத்தில் ஐந்தாமிடத்தில் அமரும் சனி என்ன பலன்களைத் தருவார் என்று பார்க்கும்போது பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களையும், குழந்தைகள் மூலமான நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதையும், பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய இயலாமல் போவதுமான பலன்களைச் செய்வார்.

எனவே இந்த சனி மாற்றத்தால் பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். பிள்ளைகள் தங்களுடைய வயதிற்குரிய விஷயங்களைச் செய்து உங்களுக்கு மன வருத்தத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் பள்ளியிறுதி-கல்லூரி வயதில் இருக்கும் குழந்தைகளை அக்கறையுடன் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில்  பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். சனியின் பத்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருந்து விலகுவதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும்.

சனியின் பார்வை ராசியில் இருந்தும் விலகுவதால் இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நல்லவைகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் ஆரம்பிப்பீர்கள். மனஅழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி வரும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை பிறக்கும். அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆட்களைச் சந்திப்பீர்கள்.

மொத்தத்தில் அர்த்தாஷ்டமச் சனி என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் விலகுவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று எதிர்காலத்தை உங்களுடையதாக்கி கொள்வீர்கள்.

சனிபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் மகன், மகளுக்கு ஆகவேண்டிய திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறையும். சாதாரண சிறு விஷயங்களுக்குக் கூட மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாகவும் கவனக்குறையாகவோ எடுத்துக் கொள்ளாமல் முழு கவனத்துடன் செய்ய வேண்டி இருக்கும்.

என்னதான் சனி ஐந்தாமிடத்தில் இருந்தாலும் பணவரவுக்கு குறை இருக்காது. வருமானம் தடைப்படாது. சனி எந்த ஒரு விஷயத்திலும் சிறு பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தருவாரே தவிர பண விஷயங்களில் கைவைக்கமாட்டார். அதே நேரத்தில் சேமிக்கவும் முடியாது என்பதால் எந்த ஒரு செலவு செய்யும் முன்பும் யோசித்து செய்வதும், சிக்கனமாக இருப்பதும் நல்லது.

கடந்த காலங்களில் சுக ஸ்தானமான நான்காமிடத்தில் சனி இருந்ததால் ஆரோக்கியக் குறைவையும், உடல்நலப் பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். மருத்துவர்களுக்கு அடங்காத நோய்களும் இப்போது பரம்பொருளின் கருணையால் வெகு விரைவில் குணமாகும். இதுவரை மருத்துவத்துக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.   

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்லபலன்கள் இருக்கும். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. நகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். இதுவரை வாங்க முடியாத விரும்பிய வாகனம் வாங்க முடியும். தாயாருக்கு உடல்நலக் குறைவு சரியாகும். அம்மாவைப் பற்றிக் கவலைப் பட அவசியம் இருக்காது.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரங்கள்:

ஒரு கருப்பு நிறமுள்ள மனிதரை மேற்குமுகமாக நிறுத்தி வைத்து நீங்கள் அவருக்கு எதிரில் கிழக்கு பார்த்து நின்று ஒரு இரும்புச் சட்டியில் வழிய வழிய நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் தானம் கொடுப்பது சனிபகவானை திருப்திப்படுத்தும். தானம் பெறுபவர் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் சிறப்பு.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார்.

நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் உங்கள் ராசிக்கு யோகாதிபதியான குருபகவான் நான்கில் அமர்ந்து தனது புனிதப் பார்வையால் பத்தாம் இடத்தைப் பார்க்கப் போகிறார். இதன் மூலம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று உங்களின் பொருளாதார நிலை மேம்படும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அனைத்தும் மேன்மை அடைந்து நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள்.

குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தைப் வலுப்படுத்துவார் எனும் விதிப்படி உங்கள் ராசிக்கு 8, 10, 12ஆம் பாவங்களை குரு பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட ராசிகள் முழுவலிமை பெறும். எட்டாம் பாவமும், பனிரெண்டாம் பாவமும் வெளி மாநிலம், வெளிநாடு இவைகளை குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநில வேலை வாய்ப்புகளையும், அது சம்பந்தமான தொழில்களில் இருப்போருக்கு நல்ல லாபங்களையும் தரும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குருபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

நான்காமிட குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.

பத்தாமிடத்தைக் குரு பார்க்கப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட சிம்ம ராசியினர் அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.

சுபக்கிரகமான குருபகவான் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம்.
பலநாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்லபடியாக நடைபெறும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் இப்போது ஓரளவு கை கொடுக்கும். எட்டாமிடம் என்பது புதையல், லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச் செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும். குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ, நிலமோ விற்ற பணம், விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு இப்போது சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் பார்வையால் எட்டாமிடம் வலுப் பெறுகிறது. ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவத்தின் கெட்ட பலன்கள் அதிகமாக நடக்கும் என்பதால் உங்களுக்கு எதிர்மறையான செயல்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் நடக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து பின் அதை புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன்தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத்தரும்.

ஜோதிடக்கலை அரசு
ஆதித்ய குருஜி88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

சிம்ம ராசிக்கு இதுவரை பனிரெண் டாமிடத்தில் அமர்ந்து அடிக்கடி பயணங் களையும் தேவையற்ற அலைச்சல்களையும் விரயங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகு தற்போது மிகவும் யோகம் தரக்கூடிய நிலையான பதினொன்றாமிடத்திற்கு மாறுகிறார்.

ராகு பதினொன்றாமிடத்தில் இருப்பது பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அமையக்கூடிய ஒரு நிகழ்வு என்பதோடு, ராகு உள்ளிட்ட பாபக் கிரகங்களுக்கு பதினொன்றாம் இடம் மிகவும் நன்மை களைத் தரக்கூடிய இடமாக நம்முடைய மூலநூல்களில் சொல்லப்பட்டிருப்ப தால் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் நல்ல நன்மைகளை அனுபவிக்க இருக்கும் ராசி சிம்ம ராசியாகும்.

சரியான கோட்சார கிரக நிலைகள் அமையாமல் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பம்பர் பரிசாக இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அமையும் என்பதால் மிகுந்த நன்மைகளைத் தரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

பதினொன்றாமிடத்திற்கு மாறும் ராகுவால் செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக் காரர்களால் நன்மை. வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிது முயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். இதுவரை சிம்ம ராசிக் காரர்களுக்கு நடக்காமல் தட்டிப் போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும் இப்போது தடையின்றிக் கிடைக்கும்.

ராகு சேரும்போது அல்லது சுபரால் பார்க்கப்படும் போது தானும் சுபராக மாறி அதிகமான நன்மைகளைச் செய்வார் என்பதால் இம்முறை சிம்மராசிக்கு இரட் டிப்பு நன்மையாக வரும் நவம்பர் மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ராகு குருவின் பார்வையில் இருப்பார் என்பதால் தாராள பணவரவு, குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களையும் சிம்ம ராசிக்குச் செய்வார். குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் ராகுதசை அல்லது ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் இம்முறை ராகுவால் மேம்பட்ட நல்ல லாபங்கள் கிடைக்கும்.

அடுத்து ராகு ஒரு ராசிக்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இருக்கும் போது அவருக்கு எதிரில் சாதகமற்ற நிலைமையில் கேது இருப்பார் என்பது ஜோதிட விதி.

ஆயினும் இம்முறை கேது இதுவரை இருந்த நல்ல இடமான ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாம் இடத்திற்கு வந்து உங்களுக்கு சாதகமற்ற பலன்களை கொடுக்க இருந்தாலும், குருவின் வீட்டிற்கு மாறி, குருவோடு இணைய இருப்பதால் கேது இம்முறை கெடு தல்களைச் செய்யமாட்டார்.

மேலும் கேதுவிற்கு சுபரின் வீடுகள் நன்மை தரும் வீடுகளாக நமது மூல நூல்களில் சொல்லப்பட்டிருப்பதால் இம்முறை குருவின் தனுசு வீட்டிற்கு மாறும் கேது, சிம்ம ராசிக்கு கெடுதல்கள் எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே ராகு-கேது இரண்டு முனைகளிலும் இம்முறை நல்ல பலன்களே சிம்ம ராசிக்கு நடக்கும் என்பதால் இந்தப்பெயர்ச்சியில் அதிகம் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள் என்பது உறுதி.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயி ருந்தவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகை யில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர் களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற் சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள்.

கூட்டுத் தொழிலில்இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு களும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முயற்சிகளை இப்போது செய்யலாம். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டிருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கி யம் தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

வழக்கு கோர்ட் காவல் துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண் டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.

நவம்பர் மாதத்தில் நடைபெறும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருவும் யோகம் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் அனைத்து சுபகாரியங்களும் நிறைவேறி அதன் மூலம் சுப விரையங்களே இருக்கும். வீண் விரையங்கள் இருக்காது. செலவுகள் இருக்கும் என்பதால் செலவழிக்க பணவரவும் தாராளமாக இருக்கும்.

வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம் வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதிய வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. நல்ல நேரத்தில் வந்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிம்ம ராசியினர் உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.

பரிகாரங்கள்

ராகு பகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள திருநாகேஸ்வரம் போன்ற திருத் தலங்களுக்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபடுங்கள். தமிழ் நாட்டில் நாகநாத சுவாமி என்ற பெயருள்ள அத்தனை கோவில்களும் ராகுகேது திருத்தலங்கள்தான். உங்கள் அருகில் உள்ள கோவில்களில் வழிபடலாம்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store