iFLICKS தொடர்புக்கு: 8754422764
மிதுனம்

இன்றைய ராசி பலன்கள்

விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். எதையும், யாரிடமும் நாசூக்காகச் சொல்வது நல்லது. ஆலய வழிபாடு அமைதியைத் தரும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

வார பலன்கள்

10-12-2018 முதல் 16-12-2018 வரை

ராசிநாதன் புதன் குருவுடன் இணைந்திருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனைத்தும் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். தொந்தரவுகள் வராது. சுக்கிரனின் ஆட்சி வலுவால் தூரதேசங்களில் தொழில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டுக் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். மூன்றுக்குடைய சூரியன் சுபத்துவம் அடைவதால் மிதுனத்தினரின் தைரியம் அதிகரிக்கும் வாரம் இது.

இதுவரை எந்த ஒரு விஷயத்தி லும், யார் உதவியும் கிடைக்காமல் தனி மனிதனாகவே போராடி கொண்டிருந்தவர்களுக்கு இனி அடுத்தவர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். உங்களில் சிலர் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். 11;15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி மாலை 5.18 மணி முதல் 13-ந்தேதி காலை 6.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 17-ம் தேதியில் இருந்து டிசம்பர் 15-ம்தேதி வரை

கார்த்திகை உங்களுக்கு நல்ல மாதம்தான். ராசிநாதன் புதன் ஆறில் இருந்தாலும் மாதம் முழுவதும் குருவுடன் இணைந்து சுபத்துவமாக உள்ளது யோக அமைப்பு என்பதால் இந்தமாதம் மிதுனத்திற்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். குருவின் பார்வையால் தொழில் ஸ்தானம் வலுப் பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து நண்பராக மாறுவர்கள்.

வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் நன்மைகள் உண்டு. சிலருக்கு இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு, சச்சரவுகள் நீங்கும். குடும்பத் தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் இனி விலகும். பணவரவு நன்றாக இருக்கும். அலுவல கங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரி கள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. இளையோர் களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி ராசியை பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் வரப்போகும் இரண்டு வருடங்களில் சிக்கல் வரும். கடன் வாங்குவதில் கவனம் தேவை.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2018

மிதுன ராசிக்காரர்களுக்கு 2018ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2018 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

வருட ஆரம்பத்தில் ஐந்தாம் வீட்டில் குருபகவான் இருப்பதால் இளம் பருவத்தினருக்கு இந்த வருடம் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் இந்த ஆண்டு துவக்கத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து அக்டோபர் மாதத்திற்குள் வாழ்க்கையில் இணைவீர்கள். 

அனைத்து மிதுன ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள். 

நீண்ட நாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும். 

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும். 

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது. 

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். 

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். 

பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். 

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். ராசியை குரு பார்ப்பதால் வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். 

மிதுன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடமாக இது இருக்கும். 

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி     
செல்: 8870 99 8888

விளம்பி வருட பலன்

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம்  பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்)

பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி ஆண்டில் மிதுனத்தினரின் கிரக நிலைகள் கெடுபலன் எதுவும் தராத நிலையில் இருப்பதால் விளம்பி ஆண்டு உங்களுக்கு துன்பங்கள் எதுவும் தராமல் நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக இருக்கும்.

இதுவரை உங்களுக்கு எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

கிரக நிலைமைகள் மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக உங்களின் வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

விளம்பி வருடத்தின் சிறப்பு பலனாக உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள்.

இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள்.

வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம்  இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

ராகு சுபத்துவமாக இரண்டாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில்  பணலாபம் இருக்கும். வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து  இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். சிறு சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பு இப்போது கூடி வரும். அது நன்றாகவும் நீடித்தும் இருக்கும். வருட ஆரம்பத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய்,சனி இணைவதால் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனம் தேவைப்படும்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.  பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். .

கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு தவறான சில முடிவுகளை எடுக்காதீர்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

மிதுனராசிக்காரர்களுக்கு இது திருப்பு முனையான தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சந்தேகமில்லை.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் இனி நிதானம்
 
(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம்  பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்)

மிதுன ராசிக்கு தற்போது ஆறாமிடத்தில் இருந்து மாறி ஏழாடத்திற்கு சனிபகவான் செல்கிறார். கடந்த காலங்களில் சனிபகவான் நிலை கொண்டிருந்த ஆறாமிடம் யோகமான இடம், தற்போது மாறி இருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களைத் தரக் கூடிய இடம் இல்லை என்றும் நம்முடைய மூல நூல்கள் சொல்கின்றன.

கோட்சார பலன்கள் என்பது ஒன்பது கோள்களின் இருப்பிடத்தையும் கணித்து பொதுவாக சொல்லப்பட வேண்டியது. அந்த அமைப்பில் பலன் சொல்ல முற்படும் போது, சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற குருப்பெயர்ச்சி ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பிறகு மிதுனத்திற்கு யோகங்களை தருகின்ற விதத்தில் அமைந்திருப்பதால் இன்னும் சில காலத்திற்கு கோட்சார பலன்கள் மிதுன ராசிக்கு சாதகமாகவே இருக்கும்.

மேலும் ஏழாமிடத்திற்கு வருகின்ற சனிபகவானால் கணவன்-மனைவி இடையே கருத்து வேற்றுமை, பிரிவு, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியக் குறைவு, நண்பர்கள், பங்குதாரர்களிடையே மனக் கசப்பு, தந்தைவழி உறவினர்களால் விரோதம் போன்ற பலன்கள் சொல்லப் பட்டிருந்தாலும் மிதுனராசிக்கு பாக்கியங்களை தரும் ஒன்பதுக்குடையவன் சனி என்கின்ற வகையில் மற்ற ராசிகளுக்கு அவர் ஏழாமிடத்தில் இருக்கும்போது தருகின்ற கெடுபலன்களைப் போல மிதுனத்திற்கு தருவது இல்லை.

எனவே தற்போது நடைபெறுகின்ற சனி மாற்றம் மிதுனத்திற்கு நிச்சயமாக கெடுபலன்களைத் தரப் போவது இல்லை. மாறாக ஒன்பதுக்குடையவன் ராசியைப் பார்க்கிறான் என்கிற விதத்தில் மிதுனத்திற்கு சில நன்மைகளே கூடுதலாக நடைபெறும்.

பொதுவாக கோட்சார பலன்கள் எல்லா ராசியினருக்கும் ஒரே போன்று அமைவது இல்லை. மாறுகின்ற கிரகம் அந்த ராசிக்கு யோகத்தை தருவதா? அவ யோகத்தை தருவதா? என்பதை வைத்துத்தான் துல்லியமான பலன்களை ஒரளவிற்கேனும் கணிக்க முடியும்.

பாபக் கிரகமாயினும் ஒரு ராசிக்கு யோகம் செய்ய வேண்டிய கிரகமாக அது இருந்தால் கெடுபலன்களைத் தந்து விடுவது இல்லை. அந்த அமைப்பின்படி மிதுன ராசிக்கு தற்போதைய சனி மாற்றம் உறுதியாக கெடுதல்களை எதையும் தராது.

ஆயினும் சனிபகவான் ராசியைப் பார்க்கப் போவதால் இந்த சனி மாற்றத்தினால் உங்களுடைய குணநலன்களில் சிறிது மாற்றம் இருக்கும். குறிப்பாக சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். சற்று சுயநலக்காரனாக மாறி விடுவீர்கள். சனியின் ராசி பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி.

எனவே நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களுடைய உடல்நலத்தில் அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். ராசியைப் பார்க்கும் சனி இனம் புரியாத கவலைகளையும், நோயே இல்லாவிட்டாலும் தனக்கு ஏதோ ஒன்று இருக்கின்றது என்கின்ற எண்ணத்தையும் கொடுத்து மனத்தையும், உடலையும் அலைக்கழிப்பார் என்பதால் இதுபோன்ற விஷயங்களில் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியது என்பது நல்லது.

ஏழாமிடத்து சனியால் இனம் புரியாத மனக்கலக்கம் மற்றும் ஏதோ ஒன்று தவறாக நடக்க போகிறது, அது என்னவென்று தெரியவில்லையே என்று ஒரு உறுத்தல், கெட்டது நடந்து விடுமோ என்ற பயம், ஒன்றும் இல்லாத சிறிய விஷயத்தை பெரிதாக நினைத்துப் பயப்படுதல் போன்ற விஷயங்கள் உங்களுக்கு வரும் என்பதால் எதிலும் மனஉறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஒருவிதமான மனப்பான்மையை தவிர வேறு எவ்வித கெடுதலையும் சனி உங்களுக்கு தராது என்பதாலும் சனிபகவான் ஏழாம் இடத்தில் இருந்தாலும் மற்ற கிரகங்கள் இன்றைய நிலைமையில் இன்னும் சில மாதங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்க போவதாலும், சனி தற்போது குருவின் வீட்டில் அமர போவதாலும், இன்னும் ஒரு வருடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் தனது புனித பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் மிதுனத்திற்கு தற்போதைய நிலையில் கெடுதல்கள் இல்லை.

முதல் ஒரு வருடத்திற்கு குருவின் பார்வை உங்களை காப்பாற்றுகின்ற அமைப்பில் இருக்கும் போது அடுத்த வருடம் ராசிக்கு குருவின் பார்வை விலகும் நேரத்தில் சனியுடன் ராகு-கேதுக்கள் இணைந்து அவருடைய வீரியத்தை இழக்க வைப்பதால் மிதுனராசிக்கு இந்த சனி மாற்றத்தால் எந்த வித கெடுதல்களும் நடக்கப் போவது இல்லை என்பது உறுதி.

ராசியை சனி பார்ப்பதால் ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத் தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற பயணங்கள் இப்போது உண்டு.

பெண்களுக்கு நகை சேரும் காலம் இது. வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும்.

வியாபாரிகளுக்கு தொழில் நல்லபடியாக நடக்கும் காலகட்டம் இது. நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். புதுக் கம்பெனி ஸ்டாக்கிஸ்ட், டீலர்ஷிப் கிடைத்து வியாபாரம் பெருகும். நல்ல வருமானம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆர்டர்கள் நிறையக் கிடைத்து மேன்மை அடைவீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது.

சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.  பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

சனிபகவானின் பார்வை நான்காம் வீட்டில் விழுவதால் வீடு, வாகனம், தாயார், தன்சுகம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். அதேபோல வாகனமாற்றம், புதிய அதிகவிலை உள்ள வாகனம் வாங்குதல் போன்றவற்றிலும் நிதானத்துடன் செயல்படுங்கள்.

வயதான தாயாரினால் மருத்துவச் செலவுகள் வரும். தாயாரின் உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். அவருக்கு சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏழாமிடத்தில் இருக்கும் சனிபகவானால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் என்றாலும் அவர் யோகாதிபதி என்பதால் உங்களுக்கு நேரடி கெடுபலன்களை தரமாட்டார். சிலர் வேலை விஷயமாக மனைவியை பிரிந்து வெளிமாநிலத்திற்கோ வெளிநாட்டிற்கோ இந்த காலக்கட்டத்தில் செல்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

பார்ட்னர்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும், சந்தேகங்களையும் சனி உருவாக்குவார் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவரப்படாமல் தீர்க்கமாக ஆலோசித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நிறுவனத்தை நடத்திச் செல்வது நல்லது.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்டநாள் திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக நடந்து அனைத்தும் சீரடையும். இளையவர்களுக்கு மனத்திற்குப் பிடித்தமான வேலை அமையும். திருமண பருவத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையை இப்போது சனிபகவான் அடையாளம் காட்டுவார். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஏழாமிடத்து சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதையும் தராமல் மிதமான நற்பலன்களை மட்டுமே மிதுனத்திற்குத் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் அய்யப்ப பக்தர்கள் நான்கு பேருக்கு உங்கள் வீட்டில் இல்லாமல் பொது இடத்தில் அல்லது  கோவிலில் கருப்பு வேட்டி கருப்பு துண்டு தானம் செய்யுங்கள்.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது நற்பலன்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் இருந்து, சாதகமற்ற பலன்களை தருவதாக சொல்லப்படும் ஆறாம் இடத்திற்கு குரு மாறுதல் அடைகிறார்.

பொதுவாக ஆறாம் இடம் என்பது கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் என்பதாலும், சுப கிரகமான குரு ஆறாம் இடத்தில் அமரும் நிலையில் கடன், நோய் தொந்தரவுகளை வளர்ப்பார் என்ற முறையிலும் ஆறாம் இடம் குருவுக்கு பகவானுக்கு ஏற்றதல்ல என்று சொல்லப்பட்டது. ஆனாலும் அனைத்து விதிகளும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டது என்ற முறையில், எல்லா ராசிகளுக்கும் குரு பகவான் ஆறாம் இடத்தில் ஒரே பலனைத் தருவதில்லை.

மிதுனம் என்பது ஒரு உபய ராசி என்பதாலும் உபய ராசிக்கு கேந்திராதிபதிகளாக வரும் குருவும், புதனும் மறைவு ஸ்தானங்களில் நல்ல பலன்களைத் தருவார்கள் என்ற விதிப்படியும், தற்போது தனக்கு பிடித்த அதிநட்பு வீடான ஆறாமிடத்தில் குருபகவான் அமர்ந்து இருப்பதாலும், ஆறாமிடத்து கெடுபலன்களை மிதுன ராசிக்கு கண்டிப்பாக குரு தரமாட்டார்.

அதைவிட மேலாக இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்தை புனிதபடுத்துபவர் குருபகவான் என்ற விதிப்படி அவர் பார்க்கும் இடங்களான பத்து, பன்னிரெண்டு, மற்றும் இரண்டாம் இடங்கள் தற்போது மிதுன ராசிக்கு புனிதமடைகின்றன.

இதில் பத்தாமிடம் என்பது வேலை, தொழில் போன்றவைகளை குறிக்கின்ற ஒரு இடமாகும். எனவே இதுவரை மிதுன ராசியில் பிறந்து நிம்மதியற்ற தொழிலில் இருப்பவர்களும், முன்னேற்றம் இல்லாத வேலையில் உள்ளவர்களும் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் வரும் அக்டோபர் மாதம் மாதத்திலிருந்து வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள்.

தொழில் விஷயங்களில் விரிவாக்கங்கள், புதிய முயற்சிகள் போன்றவற்றை செய்வதற்கு யோசித்து, தயங்கி கொண்டிருந்தவர்கள் இனிமேல் தாராளமாக புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். படித்த படிப்பிற்கு ஏற்றார்போல வேலை கிடைக்காத மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு அவர்களின் மனதுக்கு ஏற்ற மாதிரியான வேலைவாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.

அடுத்து குருபகவான் ஆறாம் இடத்தில் இருந்து 12-ஆம் இடத்தைப் பார்ப்பது வீண் செலவுகளையும், விரயங்களையும் தருகின்ற ஒரு நிலை என்பதாலும் ஆறாம் இடத்தில் இருந்து அவர் பார்க்கிறார் என்பதாலும் செலவுகள் விஷயத்தில் இந்த வருடம் நீங்கள் கவனமுடன் இருந்தாக வேண்டி இருக்கும். 6-ஆம் இடம் என்பது கடன் தொந்தரவுகளை கொடுக்கக்கூடிய இடம்தான். இருப்பினும் கடன்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சுபக்கடன் எனவும் அடுத்தது அசுபக்கடன் எனவும் சொல்லப்படக் கூடியது.

இங்கே கடன் வாங்காமல் எந்த மனிதரும் இருக்க முடியாது. கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறோம். தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடன் வாங்குகிறோம். கடன் வாங்காமல் எந்த ஒரு உயிரும் இருப்பதில்லை. அதேநேரத்தில் வாங்குகின்ற கடன் நல்லவழியில் செலவாகிறதா அல்லது கெட்ட வழியில் செலவாகிறதா என்பதுதான் நமக்குள்ள பிரச்சினையாக இருக்கும்.

குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதாலும், அவர் ஆறாமிடத்தில் நட்பு வீட்டில் சுபமாக அமர்ந்திருப்பதாலும், இம்முறை மிதுன ராசிக்காரர்களுக்கு சுபக் கடன்களை மட்டுமே தருவார் என்பது உறுதி. இதில் சுபக்கடன் என்பது வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களான திருமணம், தொழில் அமைப்பு போன்றவர்களின் மட்டும்தான் இருக்கும்.

மருத்துவச் செலவு போன்ற தேவையில்லாத கடன்களை குருபகவான் ஒருபோதும் தருவதில்லை. ஆகவே ஆறாமிடத்தில் வருகின்ற குரு பகவானைப் பார்த்து மிதுன ராசிக்காரர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அடுத்து குரு பகவான் தன்னுடைய 7-ஆம் பார்வையால் 12-ஆம் இடத்தைப் பார்ப்பது விரயங்களையும் குறிக்கும் என்பதால், இம்முறை மிதுன ராசியினர் வீட்டில் திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப செலவினங்களும் அதற்கேற்றார்போல சுபக்கடன் வாங்கும் நிலையும் இருக்கும்.

இதுவரை வீடு இல்லாதவர்கள் கடன் வாங்கி வீடு கட்டவோ அல்லது ஹவுசிங் லோன் போட்டு, பிளாட் வாங்குவது போன்ற நற்பலன்கள் இருக்கும். சிலருக்கு வாகன கடன்கள் ஏற்படலாம். நல்லவைகளை வாங்கத் தூண்டும் கிரகமான குரு இம்முறை உங்களை நல்ல செலவு செய்ய வைப்பார்.

அடுத்து குரு பகவான் தன்னுடைய 9ம் பார்வையால் இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஏற்கனவே இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் சிலர் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சற்று முன்பின்னாகத்தான் இருக்கிறது.

நினைத்த இடத்தில் பணம் கிடைக்காமல் சிலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற வருமானத்திலும் சிலருக்கு துண்டு விழுந்திருக்கிறது. நிரந்தர வருமானம் இல்லாமல் சிலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய் கூட கிடைக்காமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் அதிகம் பேர்.

இது போன்றவர்களுக்கு தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இந்த அக்டோபர் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதார நிலைமை நன்கு மேம்படும். தொழில் வேலை அமைப்புகளில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குரு பகவானால் இதுவரை திருமணம் ஆகாத சிலருக்கு குடும்பம் அமையும். 35 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண், பெண்களுக்கு இது போன்று குடும்ப ஸ்தானத்திற்கு சுப கிரகமான குருவின் பார்வை கிடைக்கும் போதுதான் திருமண அமைப்பு கூடி வரும் என்பதால் இம்முறை திருமணத்திற்கு தாமதமானவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.

உங்களில் நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டு பிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

சிலருக்கு வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தூர இடங்களுக்குச் செல்லும்படி இருக்கும். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்துடன் செய்ய வேண்டும்.

குருபகவான் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆக வேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்சினையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

இதுவரை தாமதமாகி வந்த வங்கிக் கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆனால் அந்தக் கடனைக் கட்ட முடியாமல் சிக்கல்கள் வரும். எனவே கடன் வாங்குவதில் உஷாராக இருங்கள்

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப்படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

பொதுவில் மிதுனத்திற்கு கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நற்பலன்களை மட்டுமே தரக்கூடிய குரு பெயர்ச்சி இது.

குருபகவானின் நன்மைகளை கூடுதலாகப் பெற வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்ணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள்.

ஜோதிடக்கலை அரசு
ஆதித்ய குருஜி88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதுமே யோகத்தை தரக்கூடிய கிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன. ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக நமது மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பனிரெண்டு ராசிகளில் மிதுன ராசிக்கு மட்டும் ராகு பகவான் சுபத் தன்மையுள்ள யோகர் என்ற நிலை பெறுவார் என்பதால் எப்போதுமே ராகு-கேதுக்கள் மிதுன ராசிக்கு கெடுபலன்களை தருவதில்லை. மேலும் தற்போது ராகு மாற இருக்கும் கடக வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு வீடு என்பதால் கடத்தில் அமரும் ராகு நன்மைகளை செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நம்மைகளை மட்டுமே செய்வார்.
அதிலும் கடகம் ஜலராசி என்பதாலும், கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு செல்வதை குறிக்கும் ராசி என்பதாலும், இந்தப் பெயர்ச்சியினால் மிதுன ராசிக் காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான லாப வரவுகள் இருக்கும்.

கேதுபகவான் 8-மிடத்திற்கு மாறினாலும் அது மிதுன ராசியின் பாக்கியாதிபதியான சனி பகவானின் மகர வீடு என்பதால் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிக்கு யோக கிரகமான சனியின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார். எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத்தேவையில்லை.

அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டின் அமரும் ராகுவால் மிதுன ராசிக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.

எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.

அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகுபகவான் தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டாலே இந்த ராகு-கேது பெயர்ச்சி எந்த வித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.

அதே நேரத்தில் 8-ம் இடத்தில் சுபத்துவமாக அமரப் போகும் கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று வருவது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை முடித்து கொடுப்பதன் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

எட்டாமிடம் சுபத்துவம் அடைவதால் அதன் நல்ல பலன்களான எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.

மேலும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நன்மைகளைச் செய்யப் போகும் ஒன்றாக இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக மிதுனத்திற்கு சாதகமற்ற அமைப்பில் இருந்து வந்த குருபகவான் இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு நன்மை தரும் இடமான ஐந்தாமிடத்திற்கு மாறி உங்கள் ராசியை தனது சுபப் பார்வையால் பார்க்கப் போகிறார். இது உங்களுக்கு மேன்மை தரும் அமைப்பு.

குருவின் பார்வையினால் ராசி சுபத்துவம் அடைந்திருக்கும் நேரங்களில் மற்ற கிரகங்கள் தரும் சாதகமற்ற பலன்கள் மட்டுப் படும் என்பது ஜோதிட விதி. எனவே மிதுனத்திற்கு இந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் சங்கடமான சூழ்நிலைகள் எதுவும் வந்து விடப் போவதில்லை.

இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள்  வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும்  வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும்.

இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் ராகு கேதுப்பெயர்ச்சியால் இருக்கும்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.

கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது. பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் குருபலம் வருவதால் இனிமேல் நல்லபடியாக திருமணம் நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு.

பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

எந்தக் காரணத்தை முன்னிட்டும் வீட்டுப் பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது. வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம்  இது.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

ராகு பகவான் கடக வீட்டில் ஸ்தான பலம் பெறுவதால் வேறு இன  மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். பெயர்ச்சியின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்கள் நட்சத்திர நாதனான குருபகவான் இன்னும் சில வாரங்களில் ராசியைப் பார்க்கப் போகிறார். இது மிகவும் யோகமான ஒரு அமைப்பு. பணத்திற்கு அதிபதி குருபகவான்தான். அதாவது குருதான் தனகாரகன். ஒருவரை மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆக்குபவர் குருதான். அவர் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பணம் சம்பாதிப்பதில் இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடமாக இருக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. வாகனவிஷயங்களில் செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம் வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.

பரிகாரங்கள்

ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு   கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.  

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store