iFLICKS தொடர்புக்கு: 8754422764
மேஷம்

இன்றைய ராசி பலன்கள்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு.தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் சீராகி ஆனந்தப்படுத்தும். உதிரி வருமானங்கள் உள்ளம் மகிழும் விதத்தில் வந்து சேரலாம்.

வார பலன்கள்

ஏப்ரல் 14-04-2019 முதல் 20-04-2019 வரை:

தொழில் ஸ்தானாதிபதி சனி ஒன்பதாம் வீட்டில் குருவுடன் இணைந்து வலுவுடன் இருப்பதும், தனம், வாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சநிலையில் இருப்பதும் மே‌ஷ ராசிக்கு நன்மை தரக்கூடிய அமைப்புகள் என்பதால் உங்களுடைய அனைத்துக் காரியங்களும் வெற்றி பெறும் வாரம் இது. இளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. உங்களுடைய பாக்யாதிபதி குருவும், காதல் கிரகமான சுக்கிரனும் ஆட்சி வலுவில் இருப்பதால் சிலருக்கு காதல் வரும். சிலர் எதிர்கால துணைவரை சந்திப்பீர்கள்.

தொழில், வேலை அமைப்புகளில் இருந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் இப்போது உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதிகள் நடக்கும். சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் நடக்கும். இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாக மாறுவார்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

ஏப்ரல் மாதம் 15-ம் தேதியில் இருந்து மே மாதம்14-ம் தேதி வரை

மேஷராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்த மனதும், நேர்மையானபோக் கும், எதையும் அலட்சியமாகசமாளிக்கும் உறுதியும் வெளிப்படும் மாதம் இது. ராசியில் உச்ச சூரியன் இருப்பதால் உங்களில் சிலர் பலதரப்பட்டசிந்தனை களுடன் இருப்பீர்கள். யோகக் கிரகங்கள் நல்லநிலை யில் இருப்பதால் சிலருக்கு பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம் வரும். சித்திரை முழுவதும் சுபநிகழ்ச்சிகளும், தூர இடங்களில் இருந்து நல்ல செய்தி களும், பணவரவும் இருக்கும். சிலர் தொழில்துறையில் சாதனை படைப்பீர்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நினைத்தது போலவே நடக்கும்.

செவ்வாய் இரண்டில் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்கு வாதங்களைத்தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது. யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டிபோன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. தடங்கலாகி வந்த விஷயங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதரசகோதரிகள் உதவுவார்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. வருமானம் குறையாது. சித்திரை யோக மாதம்தான்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2019

மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்து முடிவில் அனைத்தையும் சரி செய்து நன்மைகளைக் கொடுக்கும் வருடமாக இருக்கும்.

இந்த வருடம் மார்ச் மாதம் 6-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு.

மூன்றாம் இடம் என்பது உதவிகள் கிடைக்கும் சகாய ஸ்தானம் என்பதாலும், பாபக் கிரகமான ராகு மூன்றில் அமர்வது நன்மைகளைத் தரும் என்பதாலும் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும்.

ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.

அடுத்து தற்போது சாதகமற்ற பலனைத் தரக்கூடிய இடமான எட்டில் இருக்கும் குருபகவான் அதே மார்ச் மாத இறுதியில் அதிசாரம் எனும் அமைப்பில் சில மாதங்களுக்கு, யோகம் தரும் ஒன்பதாமிடத்திற்கு மாறி பின் மீண்டும் தனது எட்டாம் நிலைக்கே திரும்பப் போகிறார்.

அதிசார நிலையில் இருக்கும் ஒரு கிரகம் தனது நல்ல, கெட்ட பலனை முழுமையாகத் தராது என்பது ஒரு விதி. அதன்படி மார்ச் மாதத்திற்குப் பிறகு மேஷத்திற்கு குருவின் எட்டாமிட சாதகமற்ற பலன்கள் இருக்காது. எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் நல்ல பலன்களை மட்டுமே உங்களுக்கு தருகின்ற வருடமாக இருக்கும்.

உங்கள் உடலும், மனமும் இந்த வருடம் புத்துணர்ச் சியுடன் இருக்கும். முகத்தில் சந்தோஷம் தெரியும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களில் சிலருக்கு சென்ற காலங்களில் இருந்து வந்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இந்த வருடம் மாறும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இந்த வருடம் நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் இன்னும் மேன்மையான நல்ல பலன்கள் உண்டு.

மார்ச் மாதத்திற்குப் பிறகு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதியான சூழல் இருக்கும்.

அனைத்து மேஷ ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்ட நாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர் களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர் களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.
இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது.

கிரகநிலைமைகள் மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். மேஷ ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடம் இது.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

விகாரி வருட பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டான விகாரி வருடம் நல்ல யோகங்களையும், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களையும் தருகின்ற வருடமாக இருக்கும். வருடக் கிரகங்கள் எனப்படும் சனி, ராகு-கேது, குரு ஆகியோரின் இருப்பு நிலைகள் உங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்கின்றன. வருடம் முழுவதும் ராகு, மூன்றாமிடத்தில் நல்ல யோக நிலைமைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார். வருடத்தின் நடுப்பகுதியில் தற்போது சாதகமற்ற இடத்தில் இருக்கும் குரு மிகவும் யோகத்தை தரக்கூடிய ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கனவே ஒன்பதாமிடத்தில் சனியும், கேதுவும் சுபத்துவ நிலையில் இருக்கிறார்கள்.

இந்த அமைப்பினால் மேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விகாரி வருடத்தின் ஆரம்பத்தில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில் நல்ல யோகமான விஷயங்களும் இருக்கும். மூன்றாமிடத்தில் ராகு இருப்பதால், பிறக்கவிருக்கும் புது வருடத்தில் இதுவரை முயற்சி செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் அதிர்ஷ்டத்தின் துணை கொண்டு, எளிதாக நிறைவேறும். தேடிச் சென்று கேட்டும் உதவாதவர்கள் இனிமேல் வலிய உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்வார்கள்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் அதிசார முறையில் குரு ஒன்பதாமிடத்தில் இருப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பு. இதன் மூலம் இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும் வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து மாற்றம் அடைய ஆரம்பிக்கும். கிரகநிலைமைகள் மேஷத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக் கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப்புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத் தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

விகாரி வருடத்தின் சிறப்பு பலனாக உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக் காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள்.

வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்த வர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மேஷ ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். வரும் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

ராகு சுபத்துவமாக இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மறை முகமான வகைகளில் பண லாபம் இருக்கும். வாக்குறுதிகளை இந்த வருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.

முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பு இப்போது கூடி வரும். அது நன்றாகவும் நீடித்தும் இருக்கும். வருட ஆரம் பத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய்,சனி இணைவதால் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனம் தேவைப்படும். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளை களின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங் களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர் வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒருமுடிவுக்கு வரும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடி யாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள். பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும்.

நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் இருந்து வந்த தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும்.

சகோதர சகோதரி கள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங் களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு மேன்மைகளைத் தரும்.

புத்திரபாக்கியம் தாமதமான தம்பதிகளுக்கு இந்தவருடம் குழந்தைப்பேறு உண்டு. சிலருக்கு இந்த வருடம் வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.

தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்ற மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு இது திருப்பு முனையான தமிழ்ப் புத்தாண்டு என்பதில் சந்தேகமில்லை.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம் இனி சந்தோஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும்  சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக எல்லா விஷயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும், அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் கொடுத்துக் கொண்டிருந்த அஷ்டமச்சனி எனப்படும் எட்டாமிடத்துச் சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் விலகுகிறது.

தற்போது மாற இருக்கும் ஒன்பதாமிடம் சனிக்கு அதிர்ஷ்டம் தரும் இடம் என்று நம்முடைய மூலநூல்களில் சொல்லப்படா விட்டாலும், கடுமையான கெடுபலன்களைத் தரும் அஷ்டமச்சனி அமைப்பு விலகுவது மிகப்பெரிய ஆறுதலை மேஷத்திற்குத் தரும்.

முப்பது வயதுகளில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களை இந்த அஷ்டமச் சனி வாட்டி எடுத்து விட்டது. இளம் பருவத்திற்கே உரிய வேலை, வியாபாரம், தொழில் போன்ற எந்த ஒரு ஜீவன விஷயத்திலும் மேஷ ராசி இளைய பருவத்தினர் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காமல் தடுமாறித்தான் போனீர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியினால் மேஷராசி இளைஞர்களுக்கு இதுவரை செட்டில் ஆகத் தடையாக இருந்து வந்த அனைத்தும் விலகி மிகவும் மேன்மையான நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பாகச் சொல்லப் போனால் பனிரெண்டு ராசிகளில் சிரமங்கள் விலகி நன்மைகளை அனுபவிக்கப் போகும் ராசிகளில் மேஷமும் ஒன்று.

நடுத்தர வயதினருக்கு அஷ்டமச்சனி அமைப்பினால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலைமை, வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன விஷயங்களில் சிக்கல்கள், குடும்பத்தில் பிரச்னை, ஆரோக்கியக் குறைவு, மனஅழுத்தம், வம்பு, வழக்கு, கடன் தொல்லை, நெருங்கிய உறவினர் மரணம், வீட்டில் சுபகாரியத் தடை, அனைத்திலும் தோல்வி, யாரும் உங்களை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை போன்ற பலன்கள் நடந்து வந்தன.

மேஷத்திற்கு இதுவரை இருந்து வந்த எல்லா சாதகமற்ற நிலைகளும் இந்த சனிப் பெயர்ச்சி மூலம் நீங்க இருக்கிறது.. இந்தப் பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும், கடந்த 3 ஆண்டுகாலமாக தட்டிப் போயிருந்த விஷயங்கள் இனிமேல் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்வதை கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள். சிறிதளவு முயற்சி பெரிய வெற்றி என்கிற நிலைமை இனிமேல் உங்களுக்கு இருக்கும்.

பொதுவாகவே அஷ்டமச்சனி முடிந்தவுடன் வாழ்க்கை செட்டிலாகும் என்பதால் இதுவரை எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்ததோ அவை அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தேவையான அனைத்தும் இப்போது கிடைத்தே தீரும் என்பதால் இதுவரை தள்ளிப்போய் இருந்த திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகள் இனிமேல் கிடைக்கும்.

நீங்கள்தான் மேஷ ராசியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் ஒருவர் மேஷமாக இருந்தாலோ அதாவது குடும்பத் தலைவர் வேறு ராசியாக இருப்பினும் குழந்தைகளில் ஒருவரோ, மனைவியோ மேஷமாக இருந்தால் கூட அந்தக் குடும்பம் முன்னேற்றம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இனி அந்த நிலைமை விலகி அனைத்திலும் ஒரு நல்லது மேஷராசிக்கு ஆரம்பிக்க உள்ளது.

இன்னுமொரு நல்ல விஷயமாக கடந்த மாதம் முதல் குருபகவானும் சாதகமற்ற பலனைத் தரும் ஆறாமிடத்திலிருந்து ஏழாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான  பலன்களைத் தரும் என்பது உறுதி.
   
அரசு ஊழியர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

பண விஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப் புழக்கம் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது. செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும்  செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும்.

பணம் இருந்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத்தில் திருமணம், பூப் புனித நீராட்டுவிழா, குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இருக்கும்.  குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும்.  

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.   

மேஷராசி பெண்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

எழுத்து சம்பந்தப்பட்ட  துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித் துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர், விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது.
தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திற்கு இது வரையிருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

எல்லாவகையிலும் உங்களை மேன்மைப் பட்டுத்தக் கூடிய அமைப்பில் கிரகங்கள் இருப்பதால் மேஷராசியினர் தயக்கங்களை உதறித் தள்ளி, தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி, எதையும் தைரியமாக முன்னெடுத்து, வேலைகளை ஆரம்பித்தால் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

கடுமையான அஷ்டமச்சனி விலகுவதால் அருகில் உள்ள ஒரு முதியோர் இல்லம் அல்லது அநாதை விடுதியில் உங்களின் ஜென்ம நட்சத்திர நாள் அல்லது ஒரு சனிக்கிழமையன்று மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சனி ஹோரையில் அவர்களுக்கு விருப்பமான உணவு அளியுங்கள். அதில் ஏதேனும் ஒரு பதார்த்தத்தை நீங்களே உங்கள் கையால் பரிமாறுங்கள். இதுவே மிகச் சிறந்த சனிப் ப்ரீத்தி.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டாலும் பாபக்கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுபக்கிரகங்கள் ஒருபோதும் கெடுதல்களைத் தருவதில்லை.

மேலும் குருபகவான் உங்களுக்கு பாக்கியாதிபதி என்ற நன்மைகளைக் கொடுக்கும் கிரகம். அவர் உங்களுடைய ராசிநாதன் செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகத்தில் அமரப் போகிறார். அந்த வீடு அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடு. எனவே எப்போதும் அவர் மேஷராசிக்கு அஷ்டம குருவாக அவர் செயல்பட மாட்டார்.

எட்டாம் இடம் என்று நினைத்தாலே கடுமையான கெடுதல்கள் நடந்துவிடுமோ என்று தோன்றும். ஆயினும் ஒரு கிரகம் சுபமான அமைப்பில் எட்டில் அமரும்போது நல்ல பலன்களை மட்டுமே செய்யும். பாபகிரகம் எட்டில் இருந்தால் கெடுதல் செய்யும். அதன்படி கடந்த முறை எட்டில் சனி அமர்ந்ததால் மூன்று வருடங்களுக்கு கடுமையான சிக்கல்களை சந்தித்தீர்கள். ஆனால் தற்போது குரு நட்பு வீட்டில் அமரப்போவதால், எட்டாம் இடத்தின் நல்ல பலன்களான, தூரத்தில் இருப்பதால் லாபம், வெளிநாடு, வெளிமாநில மேன்மை, திடீர் அதிர்ஷ்டம், அதிக முயற்சி இல் லாமலேயே பணம் கிடைத்தல் போன்ற நல்ல பலன்களை மேஷத் தினர் அடைவீர்கள்.

சமீபத்தில்தான் மேஷராசிக்கு அஷ்டமச் சனி எனப்படும் மிகவும் சாதக மற்ற, கெடுதலான ஒரு நேரம் முடிவடைந்திருக்கிறது. கடந்த 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் மேஷ ராசிக்கு மிகுந்த துயரத்தை தந்து கொண்டிருந்த அஷ்டமச்சனி காலம் நடந்தது. இது போன்றதொரு சாதகமற்ற விளைவினை அஷ்டம குரு ஒருபோதும் தராது.

எந்த ஒரு ராசிக்கும் துன்பங்கள் ஒருபோதும் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்து தான் வர வேண்டும் என்பதன் அடிப்படையில், அஷ்டமச்சனி முடிந்த பிறகும் அதே போன்ற துயரங்கள் இன்னொரு முறை வரப்போவதில்லை.

அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை செட்டில் ஆகும் என்பதும் ஒரு விதி. அதன்படி இந்த வருடம் பிறந்த பிறகு சில மாதங்களாக மேஷ ராசியினர் அவரவர் வயதுக்கேற்ற சில நல்ல பலன்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாத இளைஞர்கள் தற்போதுதான் நிலை கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மீண்டும் சோதனைகள் என்பது நிச்சயமாக வரவே வராது. எனவே கண்டிப்பாக எட்டில் இருக்கும் குரு உங்களுக்கு தொல்லைகளை தரப்போவதில்லை.
எட்டாம் இடம் என்பது மாறுதல் களை குறிக்கக்கூடிய ஒரு இடம் என்பதால் இதுவரை சாதகமற்ற நிலைகளில் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல விதமான மாற்றத்தை குருபகவான் கொடுத்தருள்வார்.

எனவே எந்த வகையில் பார்த்தாலும் மேஷ ராசிக்கு மாற்றங்களை மட்டும் கொடுத்து அதன்மூலம் முன்னேற்றங்களை தருகின்ற ஒரு சிறப்பு குருப்பெயர்ச்சியாக இது இருக்குமே தவிர ஒருபோதும் உங்களுக்கு கெடுதல்களை கண்டிப்பாக தரப்போவதில்லை.

மேஷத்தினருக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பான தாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

குருபகவானின் பார்வை பலம்தான் ஜோதிடத்தில் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வளப்படுத்துபவர் குரு என்பதால் இம்முறை அவர் பார்க்கக்கூடிய 12, 2, 4 ஆகிய மூன்று பாவகங்களின் மூலம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும்.

12-ஆமிடம் வெளிநாடு, வெளி மாநிலம் போன்ற இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு தூர இடங்களில் வேலைக்கு செல்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதற்கான முயற்சிகளில் இருந்தவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவருக்கு நல்ல பலன்கள் உண்டு.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கும் சரியான வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க போகிறது. குறிப்பாக உங் களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி இனிமேல் உங்களை புரிந்து கொண்டு சாதகமான வகையில் நடந்துகொள்ள ஆரம்பிப்பார் அல்லது தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அதிகாரி மாறுதல் ஆவார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தான மாகிய இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இதுவரை பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருந்தவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்கள், நிரந்தர வேலை இல்லாதவர்கள், மனதிற்கு பிடிக்காத தொழில் அமைப்புகளில் இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் மாற்றம் உண்டாகி நல்ல பலன்களும், பணவரவும் உண்டாகும்.

குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை குரு தன்னுடைய அதிநட்பு வீட்டிலிருந்து பார்ப்பதால், இளைய பருவத்தினருக்கு இப்போது திருமணம் நடைபெறும். இதுவரை குடும்பம் அமையாமல் இருப்பவர்கள் குடும்பஸ்தனாக முடியும். எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக உங் களில் சிலர் அடையாளம் காண்பீர்கள்.

குருவின் இரண்டாம் வீட்டு பார்வையால் வாக்குப்பலிதம் உண்டாகும் என்பதால் ஒருவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த அமைப்பின் மூலம் பணவரவு நிலையாகி சம்பளம் மூலமாகவோ, இதர வருமானம் மூலமாகவோ வருமானம் வந்து வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை சொன்ன தேதிக்கு கட்ட முடியும். எனவே இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது

குருபகவானின் அதி உன்னத சுப பார்வை நான்காம் வீட்டில் படு வதால் இதுவரை வசதியற்ற வீட்டில் இருப்பவர்கள், வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது குத்தகைக்கு செல்லவோ முடியும். சிலர் இதுவரை காற்றோட்டமில்லாத மிகச் சிறிய வீட்டில் கூண்டுக்குள் அடைபட்டு இருந்தது போன்ற நிலை மாறி நல்ல விசாலமான காற்றோட்டமான வீட்டிற்கு மாறுவீர்கள்.

உங்களில் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் அமைகிறது. வங்கிக் கடன் பெற்று வீடு அமையும். வீடு வாங்குவது கனவாகவே இருந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக நல்ல வீடு அமையும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். வாகன மாற்றம் உண்டு. செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கி ரிப்பேர் செலவு இல்லாமல் இருப்பீர்கள்.

மேஷராசி பெண்களுக்கு இது மிகவும் நல்ல காலகட்டமாகும். சமீபத்திய மூன்றாண்டுகளில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தந்து மனதை மிகவும் சந்தோஷமுடன் வைத்திருக்கும்..

வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையை உணர்வீர்கள். தொந்தரவு செய்து கொண்டிருந்த சிலரின் கைதாழ்ந்து உங்களுடைய கை ஓங்கும். வீட்டிலும் பணியிடங்களிலும் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் வந்து ஒரு நிம்மதியான சூழலை பெண்கள் உணர்வீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொது வாழ்வில் இருக்கும் அரசியல் வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சினிமா, தொலைகாட்சி, பத் திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும்.

மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இந்த குருபெயர்ச்சி மேஷ ராசிக்கு நன்மைகளை தவிர தீமைகளைத் தராது.

பரிகாரங்கள் :

மேஷ ராசிக்காரர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.

ஜோதிடக்கலை அரசு
ஆதித்ய குருஜி88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

மேஷ ராசிக்கு சாதகமற்ற இடமாக சொல்லப்படும் நான்காமிடத்தில் இருந்து மிகுந்த நன்மைகளை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு ராகு மாறுகிறார். அவரது எதிர்முனை கிரகமான கேது தற்போதிருக்கும் தொழில், வேலையைப் பாதிக்கக் கூடிய பத்தாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு செல்வார்.

ராகு,கேதுக்கள் 3, 6, 11-மிடங்களில் இருக்கும்போது மிகப் பெரிய நன்மையைச் செய்வார்கள் என்று நம்முடைய ஜோதிட மூலநூல்கள் ஒருமுகமாக வலியுறுத்திச் சொல்கின்றன. அதிலும் சகாயஸ்தானம் எனப்படும் இந்த மூன்றாம் இடத்திற்கு ராகு வருவது ஒருவரின் ராசிக்கு 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆகும். ஆகவே இம்முறை ராகு,கேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை அனுபவிக்க கூடிய முதல் தர ராசியாக மேஷம் இருக்கும்.

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மேஷத்திற்கு அஷ்டமச்சனி நடந்த காரணத்தினால் மிகப் பெரிய நன்மைகள் எதுவும் நடைபெறவில்லை. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அஷ்டமச்சனி முடிந்த பிறகு ஒரு மனிதனுக்கு நல்ல விதமாக வாழ்க்கை செட்டில் ஆக வேண்டும் என்பது விதி. தற்போதைய கோட்சார கிரக நிலைகள் அனைத்தும் மேஷ ராசிக்கு சாதகமாக அமைந்து வருவதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் மேஷ ராசியினருக்கு அவர்களது வயது, இருப்பிடம், தகுதிக்கு ஏற்றார்போல நன்மைகள் மட்டுமே அதிகமாக நடைபெறும்.

18 வருடங்கள் கொண்ட ஒரு முழுச்சுற்றில் ராகு, கேதுக்கள் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நிலை கொண்டிருப்பார்கள். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு ராசிக்கு மாறிய உடனே அவர்கள் பலன் தந்து விடுவது இல்லை. மெதுவான இயக்கத்தை கொண்ட கிரகங்களான ராகு, கேதுக்கள் ராசியின் நடுப்பகுதியில் இருக்கும் காலம் முதல்தான் தங்களுடைய உண்மையான பலனைத் தருவார்கள். அந்த நிலையின்படி 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ராகு-கேது பெயர்ச்சி நடந்து ஆறுமாதத்திற்குப் பிறகு நீங்கள் ராகு-கேதுக்கள் தரும் நன்மைகளை உணர முடியும்.

அந்த நேரத்தில் தற்போது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருக்கும் குரு எட்டாமிடத்தில் இருந்து மாறி, ஒன்பதாமிடத்திற்கு செல்ல இருப்பதால் வரும் நவம்பர் மாதம் முதல் ராகு உங்களுடைய தர்ம,கர்மாதிபதிகளான குரு மற்றும் சனியின் பார்வையில் இருப்பார்.

பார்க்கும் கிரகத்தின் பலனை அப்படியே தரக்கூடிய ராகுவால் வருகின்ற நவம்பர் மாதத்திற்கு பிறகு மேஷ ராசிக்கு நன்மைகளும் மேன்மைகளும் நடைபெற இருக்கின்றன. 9. 10-க்குடைய தர்ம,கர்மாதிபதிகளின் பார்வை சுமார் ஒரு வருட காலம் வரை அதாவது அடுத்த ராகு-கேது பெயர்ச்சி வரை ராகுவுக்கு இருப்பதால் கிட்டத்தட்ட அவர் உங்களுடைய தர்ம,கர்மாதிபதியாகவே மாறி சிறந்த நல்ல பலன்களை தர இருக்கிறார்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் அடுத்த 2020ம் ஆண்டு நீங்கள் தொழில், மற்றும் வேலையில் நிலை கொண்டு, நிறைந்த லாபத்தையும் நல்ல பலனையும் பெறுவதற்கான அஸ்திவார அமைப்புகளை இந்த ஆண்டு ராகு செய்து தருவார். எனவே இந்த ராகு, கேதுப்பெயர்ச்சியின் மூலம் முதல்தரமான நன்மைகளை மேஷ ராசிக்காரர்கள் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி.

ராகு மூன்றாமிடத்தில் நிலைகொள்வதால் உங்களுடைய சொல்லாற்றல், செயல்திறன், வாக்குப்பலிதம், மனதைரியம், எதையும் சமாளிக்கும் திறன், தெளிவான சிந்தனை போன்ற அனைத்துப் பண்புகளும் இப்போது உறுதி பெற்று மிகச்சிறந்த நல்லமுடிவுகளை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்து உங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கி கொள்வீர்கள்.

மேலும் இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத இளையபருவ மேஷராசிக் காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமான நன்மைகளையும், எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களையும் உருவாக்கும் என்பதால் இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் நிலை கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் இந்த ராகுப்பெயர்ச்சியின் மூலம் உருவாகும். அவற்றை சிறியவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

ஏற்கனவே எந்த ஒரு விஷயத்திலும் காலூன்றி நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் தங்கள் துறைகளில் நிலைபெற முடியும். குறிப்பிட்ட சில மேஷ ராசிக்காரர்களின் செயல்திறன் நல்லவிதமாக வெளிப்பட்டு சாதனைகளும் செய்வார்கள். எனவே பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சாதகமான வாய்ப்பு மேஷராசிக்கு தற்போது வந்திருப்பதால் இந்த வாய்ப்பினை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை வளம்பெறச் செய்து கொள்வீர்கள் என்பது உறுதி.

ராகு நல்லநிலையில் இருக்கும் போது கேது அதற்கு எதிரான சாதகமற்ற நிலையில் இருப்பார் என்றாலும், தற்போது பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதிற்கு மாறும் கேதுவால் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இருக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.ஏனென்றால் தற்போதைய மாற்றத்தால் கேது, சுபரான குருவின் வீட்டிற்கு மாறுகிறார். அதைவிட மிகப்பெரிய நிலையாக பெயர்ச்சியின் ஆறு மாதங்கள் கழித்து, கேது குருவுடனேயே இணைகிறார். எனவே ஒன்பதாமிடத்துக் கேது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்.

பொதுவாக ஒன்பதாமிடத்துக் கேது பாபத்துவம் அடைந்தால், தந்தையார் வழியில் கெடுபலன்களையும், தந்தைவழி உறவினர்கள் மூலம் வீண் விவகாரங்களையும், பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலைமையையும் அதிர்ஷ்டம் குறைகின்ற நிலைமைகளையும் தருவார். ஆனால் இம்முறை தனுசில் குரு, மற்றும் சனியுடன் இணையும் கேது எவ்வித கெடுபலன்களையும் தராமல் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.

கேதுவின் பலனாக மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பும், இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடும் இருக்கும். சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேது தருவார்.

தள்ளிப்போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் பயணங்களும் தற்போது கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேஷத்தினரின் அந்தஸ்து, கௌரவம், மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாக இருக்கும். நான்குபேர் இருக்கும் இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்..

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது.

பரிகாரங்கள்

ஏழைகளுக்கும், முடியாமல் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து, அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் ராகுவால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store