iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி மீனம்
மீனம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

7-8-2020 முதல் 13-8-2020 வரை

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். தொழிற்பிரிவினர் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்று மகிழ்வார்கள். பெண்கள் எதிலும் அக்கறையாக செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் சச்சரவுகள் தவிர்க்கப்படும். உங்களின் குடும்ப விவகாரங்களில் மூன்றாவது நபரை தலையிட அனுமதிக்காதீர்கள். இந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் ஞாபக சக்தி உண்டாகும்.

 

தமிழ் மாத ஜோதிடம்

16.7.20 - 16.8.20

சார்வரி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்ரம் பெற்று 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அவரோடு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருக்கும் சனியும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். இந்த வக்ர இயக்கத்தால் எதிர்பாராத சில சங்கடங்களும், சச்சரவுகளும் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

கடக புதனின் சஞ்சாரம்

ஜூலை 27-ந் தேதி கடக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் ஒரு நல்ல சம்பவம் நடைபெறும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அகலும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சியடைவர்.

மிதுன சுக்ரனின் சஞ்சாரம்

ஜூலை 30-ந் தேதி மிதுன ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். இதன் விளைவாக ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். விலங்கு வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்குவதில் இருந்த வில்லங்கங்கள் அகலும். மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். வெகுநாட்களாக முயற்சித்த காரியம் இப்பொழுது நடைபெறலாம். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும்.

மேஷ செவ்வாயின் சஞ்சாரம்

ஆகஸ்டு 12-ந் தேதி மேஷ ராசிக்குச் செவ்வாய் வருகின்றார். இதன் விளைவாக தன ஸ்தானம் வலுவடைவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் வருவது போல் தோன்றும். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.

சிம்ம புதனின் சஞ்சாரம்

ஆகஸ்டு 13-ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கின்றார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், 6-ல் வருவது யோகம் தான். உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். கூட்டுத் தொழில் செய்வோர் மாற்றம் செய்ய நினைப்பர். உறுதியாகாத திருமணப் பேச்சு முடிவாகலாம். வாழ்க்கைத் துணைவழியே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

இம்மாதம் சண்முக நவக்கிரக பாமாலையை படித்து சுப்ரமணியரை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:ஜூலை: 18, 19, 22, 30, 31, ஆகஸ்டு 4, 5, 10, 11,

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

பெண்களுக்கான பலன்கள்!

இம்மாதம் உங்கள் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். பணப்பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதே நல்லது. குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். அறுபத்து மூவர் வழிபாடு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

ஆண்டு பலன் - 2020

1-1-2020 முதல் 31-12-2020 வரை

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி,ரேவதி வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
இடமாற்றங்கள் இனிமை தரும்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய 5 கிரகங்கள் சஞ்சரிக்கும் அமைப்பு இருக்கிறது. இதனால் எதிர்பாராத சிறு மாற்றங்களும், ஏற்றங்களும் நடைபெறப் போகிறது. பொதுவாக, 10-ம் இடம் வலுப்பெறுவது யோகம் தான் என்றாலும் கூட 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்கள் இடமாற்றங்கள் வருவதும் உறுதியாகலாம். அதே நேரத்தில் 6-க்கு அதிபதி சூரியன், 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், லாபம் மற்றும் விரயஸ்தானத்திற்கு அதிபதி யான சனி ஆகியவற்றோடு பாம்பு கிரகமான கேதுவும் இணைந்திருக்கிறார். 10-ல் ஒரு பாவக் கிரகமாவது இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்சமயம் உள்ள கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. மன நிம்மதி குறையும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம்.

3, 8-க்கு அதிபதியான சுக்ரன் லாபஸ்தானத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் இழப்புகள் ஏற்படலாம். நம்பி செய்த காரியங்கள் நடைபெறாமல் போகலாம். வேலையாட்களால் பிரச்சினை வந்து போகும். இல்லத்தில் உள்ளவர்களோடு அடிக்கடி விவாதங்கள் உண்டாகும். 4-ல் ராகு இருப்பதால் குடும்பத்தினரோடு விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் திடீர் திடீரென குறைபாடுகள் ஏற்படலாம்.

10-ம் இடத்து குருவின் சஞ்சாரம்

ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவர் தன் சொந்த வீட்டில் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களையும் குரு பகவான் பார்க்கிறார். இரண்டாமிடம் என்பது குடும்ப ஸ்தானமாகக் கருதப்படுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் அமைப்பும், கூடுதல் லாபம் தொழிலில் ஏற்படும் நிலையும் உண்டு. எனவே சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்ய முயன்று வருவீர்கள்.
குருவின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால், வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் கட்டிய வீடாக வாங்குவதா? அல்லது புதிய வீடு கட்டுவதா? என சிந்தனை மேலோங்கும். குடும்ப உறுப்பினர் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பாருங்கள். யாருக்கு பூமிகாரகன் செவ்வாயின் பலம் அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் பெயரில்தான் வீடு கட்ட வேண்டும். இல்லையேல் கட்டி முடித்தவுடன் கையை விட்டுப் போகும் சூழ்நிலையும் உண்டு. தாய்வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு மேலிடத்து நிர்பந்தம் அதிகரிக்கும். வியாழன்தோறும் விரதமிருந்து குருபகவானை வழிபடுவதோடு, குருவின் சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்றும் வழிபட்டு வாருங்கள்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் சனியும் தனுசு ராசிக்குள்ளேயே வக்ரம் பெறுகிறார். இரண்டு கிரகங்களும் ஒரே இடத்தில் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். சீரான வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் வந்து அலைமோதும். பாராளும் யோகம் பெற்றவர்கள்கூட பாதாள நிலைக்கு வரும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகள் கரையலாம். சில பொருட்களைக் கூட விற்க நேரிடும். தொழில் கூட்டாளிகள் உங்களுக்கு துணையாக இருக்கமாட்டார்கள். வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
15.11.2020-ல் மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். நீச்சம் பெற்றிருந்தாலும், குருவின் பார்வை நமக்கு உச்சம் பெற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். உடன்பிறப்புகளில் ஒரு சிலர் உங்களை விட்டு விலகிச் சென்றவர் மீண்டும் வந்து இணைவர். பிள்ளைகளின் திருமணக் கனவு நனவாக்குவீர்கள். பூர்வீகச் சொத்து தகராறுகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் அமைப்பு உருவாகும்.

ராகு - கேது பெயர்ச்சி காலம்

ஆண்டின் தொடக்கத்தில் 10-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது, 1.9.2020-ல் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். 4-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு, அதே நாளில் மூன்றாம்இடத்திற்குச் செல்கிறார். இந்த பின்னோக்கி நகரும் கிரகங்கள், நமது வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். 9-ல் சஞ்சரிக்கும் கேதுவால், பிதுர்ரார்ஜித ஸ்தானம் புனிதமடைகிறது. ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பார்கள். எனவே, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உங்கள் பங்குக்கு வந்த சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கிடைத்த தொகை மூலம் கடன் சுமை குறைய வழிவகுத்துக் கொள்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியிலிருந்த தடைகள் அகலும். விருப்பங்கள் நிறைவேற மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் கூடும். புதிய திருப்பங்கள் ஏற்படும்.

3-ம் இடத்து ராகுவால் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும். வெற்றிக்குரிய செய்திகள் வீடுதேடி வரும். வெள்ளை உள்ளம் படைத்த நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்களாக மாறுவர். பரம்பரை சொத்துக்களில் கிடைக்க வேண்டிய பங்கு உங்களுக்கு முறையாக கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடியே வரலாம். உயரதிகாரிகளின் அனுகூலம் உண்டு. சகாய ஸ்தானத்து ராகுவால் அனைத்து வழிகளிலும் உங்களுக்கு சகாயம் உண்டு. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

சனிப் பெயர்ச்சி காலம்

29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசிக்குள் சனி வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் வளர்ச்சியில் தளர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார பற்றாக்குறை அதிகரிக்கும். வில்லங்கங்கள் வீடு தேடி வரலாம். விரயங்கள் கூடும். 13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசியில் செவ்வாய் - சனி சோ்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் இருந்து கும்பத்தில் உள்ள செவ்வாயை சனி பார்க்கிறார். இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். நன்மை செய்யப் போய், அது தீமையில் முடியலாம். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கல்களில் அதிக கவனம் தேவை.

26.12.2020-ல் மகர ராசிக்கு சனி பெயர்ச்சியாகிச் செல்கிறார். தற்போது 10-ல் சஞ்சரித்து வரும் சனி பகவான், 11-ம் இடத்திற்கு வரும்பொழுது, பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணக்கவலை தீரும். பாராட்டும், புகழும் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். காரியங்களை முடிப்பதற்கு தேவையான பொருளாதாரமும் உங்கள் கைகளில் புரளும்.

செல்வ வளம் தரும் வழிபாடு

செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டு வருவதோடு, வைத்தீஸ்வரன் கோவில் சென்று வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் ஆகியோரையும் யோகம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள்.
குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020 முதல் மகர ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை இருக்கிறார். அந்த நேரத்தில் தனுசு ராசியில் சனியும் வக்ரம் பெறுகிறார். இருவரும் தங்களின் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால், பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். ‘பரிவர்த்தனை யோகம்’ என்பது யோகங்களில் சிறந்த யோகமாகும். எனவே இரண்டு கிரகங்களும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்திலும் இருப்பதால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் நடைபெறும். எண்ணிய எண்ணங்கள் இனிதே நிறைவேறும்.
பெண்களுக்கான பலன்கள்

இந்த புத்தாண்டு தொடக்கத்தில் விரயங்களும், வருட மத்தியில் வளர்ச்சியும் அமையும். முக்கிய முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் உறவினர் பகை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சீர்கேடுகள் உருவாகும். நினைத்த நேரத்தில் நினைத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண முடியும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சங்கிலி தொடர்போல கடன்சுமை உருவாகலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் உருவாகலாம். கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் தர மறுப்பர். எனவே, வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்யலாமா? என்று சிந்திப்பீர்கள். குலதெய்வ வழிபாடு, குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதோடு, யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரங்களைச் செய்தால் சந்தோஷம் நிலையாக இருக்கும்.

 

சார்வரி வருட பலன்

சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் குரு பகவான், லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு உச்சம்பெற்ற செவ்வாயும் இணைந்துள்ளார். செவ்வாய், சூரியன் உச்சம் பெற்றும், புதன் நீச்சம் பெற்றும், சுக்ரன் சொந்த வீட்டில் பலம் பெற்றும் இந்த ஆண்டு தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும் ஆண்டாக இது அமையப்போகிறது.

ராகு-கேது பெயர்ச்சி

1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு ராகுவும், 9-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். ராகுவால், சென்ற ஆண்டில் முடிவடையாத சில காரியங்கள் பெயர்ச்சிக்குப் பிறகு துரிதமாக நடைபெறும். எடுத்த காரியத்தை துணிச்சலோடு செய்து முடித்து, எல்லாக் காரியங்களிலும் வெற்றி காணப்போகிறீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். கேதுவால், ஞானம் விருத்தியாகும். ஆற்றல் பெருகும். தந்தை வழியில் நன்மை கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி

15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சி யாகி செல்கிறார். அது குருவுக்கு நீச்ச வீடு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்போது, சில நல்ல பலன்களை அள்ளி வழங்கும். அதே நேரம் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி வரலாம். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு பொற்காலம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கள் விலகும்.

சனிப்பெயர்ச்சி

26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே லாப ஸ்தானம் பலம்பெறுகிறது. தொழிலில் லாபம் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப்போகிறது. அரசு வழி யிலும் நன்மை கிடைக்கும். நவநாகரிகப் பொருட்களை வாங்க நினைப்பீர்கள். சகோதரர்களின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றக் கொள்கைப் பிடிப்புடன் செயல்படு வீர்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு சனிக் கிழமையும் சனிபகவானை வழிபடுங்கள்.

குரு வக்ரமும், அதிசாரமும்

13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வக்ரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குருவக்ர இயக்கத்தில் இருக்கின்றார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் குருவோடு இணைந்து சஞ் சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இதன் விளைவாக விரயங்கள் ஏற்படலாம். வீடு மாற்றங்களும், விருப்பமில்லாத இடத்திற்கு உத்தியோக மாற்றங்களும் ஏற்படும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் மாற்றப்படும். வீண்பழிகளுக்கும் ஆளாக நேரிடும்.

வழிபாடு

சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதோடு, தென்முகக் கடவுளையும் வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை

(பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

மீன ராசிக்காரர்களுக்கு தற்போதிருக்கும் பத்தாமிடத்தில் இருந்து மிகுந்த நன்மைகளைத் தருகின்ற 11-மிடத்திற்கு சனிபகவான் மாறுகிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மிகவும் மேன்மையான ஒரு காலகட்டத்திற்குள் மீனத்தினர் நுழைகிறீர்கள். சனிபகவான் ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இதையே வேறுவிதமாக சொல்லப் போனால் 12 ராசிகளிலும் தலா இரண்டரை ஆண்டுகாலம் சனி இருப்பார். இந்த 30 ஆண்டுகால முழுச்சுற்றில் வெறும் மூன்று நிலைகளில் மட்டுமே சனி நன்மைகளைத் தரக் கடமைப்பட்டவர். அதாவது 3, 6, 11 ஆகிய இடங்களில் இருக்கும் போது மட்டுமே ஒரு மனிதனுக்கு சனிபகவான் நன்மைகளைச் செய்வார்.

அதிலும் லாபஸ்தானம் எனப்படும் 11-மிடம் சனிக்கு மிகுந்த நன்மை தரும் இடமாக நம்முடைய மூலநூல்களில் சொல்லப்பட்டு உயர்வானதாக கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்ற லாபஸ்தான, பதினொன்றாம் இடத்துச் சனி தற்போது மீனராசிக்கு வருவதால் இன்னும் மூன்றாண்டு காலத்திற்கு கோட்சார ரீதியில் மீனத்தினருக்கு நன்மைகளைத் தரக்கூடிய ஒரு மேன்மையான காலம் அமைய இருக்கிறது.

துல்லியமான கோட்சார பலன்கள் என்பது சனியை மட்டுமல்ல, ஒன்பது கிரகங்களின் நிலையையும் கணித்துச் சொல்லப்படுவது. அதன்படிதான் கிரக பலாபலன்களும் செயல்படும். அதன்படி பார்க்கப் போனால் 11-மிடத்து சனிக்கு நிகரான ஒரு நல்ல அமைப்பாக வருடக் கிரகங்களான ராகு-கேது, குரு போன்றவைகளும் மீனராசிக்கு நன்மை தரும் நிலையில் அடுத்து அமைய இருக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த குருப் பெயர்ச்சி மூலமாக உங்கள் ராசிநாதனான குரு ஆட்சி நிலையில் பத்தாமிடத்தில் இருக்கிறார். அடுத்த வருடம் அவரும் பதினொன்றுக்கு மாறி சனியுடன் இணைந்து சனியை சுபத்துவப்படுத்தி சனியை கூடுதல் நன்மைகளைத் தர வைப்பார். இது மீன ராசிக்கு நல்ல பண வரவை தரும் நிலை. இது அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கிறது.

இன்னொரு வருடக் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கிறார். வரும் செப்டம்பர் முதல் அவரும் யோகம் தரக்கூடிய மூன்றாமிடத்திகு மாறி இந்த சனிப்பெயர்ச்சி காலம் முழுமைக்கும் மூன்றில் இருப்பார். ஆகவே வருடக் கிரகங்களான மூன்று கிரகங்களும் மீனத்திற்கு நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பில் இருப்பதால் வருகின்ற மூன்று ஆண்டு காலம் மீனத்தின் பொற்காலமாக இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பிலும் நன்மையான தசா,புக்திகள் நடந்து கொண்டிருந்தால் உங்களுடைய முழு வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளை இந்த மூன்று ஆண்டுகளில் அடையும் அளவிற்கு நன்மையான கிரக நிலைகள் தற்போது மீனத்திற்கு அமைந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்லப் போனால் மீன ராசிக்காரர்களுக்கு இனிய அனுபவங்களை கொண்ட பொற்காலம் ஆரம்பிக்க உள்ளது. அனைத்து மீனத்தினரும் இந்த நன்மை தரும் நிலைக்காக பரம்பொருளுக்கு நன்றி செலுத்துவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரப் போகிறது.

இளைய பருவத்தினருக்கு உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை காண்பீர்கள். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. சுய தொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான வெற்றியைப் பெற்று பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். பொதுவாழ்வில் இருப்பவருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு வேலை உண்டு. ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.

சொந்த வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு சந்தர்ப்பம் வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் நகை சேர்க்கை இருக்கும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

மீன ராசிப் பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மேன்மைகளை அளிக்கும். வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து உங்களுடைய மேலாண்மை நிலை நாட்டப்படும். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.

குலதெய்வ வழிபாடு செய்ய முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய வரும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத் தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

சிலர் வெளிநாடு செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். இதுவரை இருந்த வீண் செலவுகளும் விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் பணவரவும் லாபங்களும் இருக்கும் என்பதால் நல்லவகையில் முதலீடு செய்யமுடியும். பங்குச் சந்தை யூக வணிகம் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும்.

மீன ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி மட்டுமின்றி, அடுத்துவரும் பெயர்ச்சிகளும் சாதகமாக இருப்பதால் பரம்பொருள் தரும் இந்த சந்தர்ப்பத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

மீனத்திற்கு பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. வீட்டிலிருந்து கிளம்பும் போது சுவாமியின் திருவுருவப் படத்தின் முன்பு நின்று “இன்று எவருக்கும் என்னால் எவ்வித தீங்கும் வர விடாமல் செய்க பெருமானே” என்று வேண்டி அதன்படி நடப்பது மட்டுமே சிறந்த பரிகாரம்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)

குருப்பெயர்ச்சி பலன்கள்

மீன ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குரு தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், தடைகளை ஏற்படுத்தினாலும் ராசிநாதனே தொழில் ஸ்தானாதிபதியுமாகி ஆட்சி நிலை பெறுவதால் முடிவில் அனைத்தும் விலகி வேலை, தொழிலில் லாபமும் பணவரவும் இருக்கும். முக்கியமாக குருவே உங்கள் ராசிநாதன் என்பதால் நிச்சயமாக உங்களுக்கு கெடுபலன்கள் இருக்காது.

அதேநேரத்தில் மிக முக்கிய ஒரு பலனாக இன்னும் சில வாரங்களில் வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இது மீனத்திற்கு மிகுந்த நன்மைகளை தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்தக் குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் இருக்கும். எனவே இதுவரை அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லாவற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.

2020ம் ஆண்டு மீன ராசியினர் உழைப்பை நம்ப வேண்டிய காலமாக இருக்கும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலைமைகள் இப்போது முன்னேற்றமாக இருக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குரு தான் இருக்கும் வீட்டை விட, பார்க்கும் வீட்டையே பலப்படுத்தி நன்மைகளைத் தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பத்தில் அமரும் குரு தனது புனிதப் பார்வையால் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் வலுப் பெறும்.
குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.

குரு நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

சனி நல்ல அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலருக்கு அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

ராசிநாதனின் வலுவால் சிலர் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

குரு பத்தில் அமர்வதால் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மொத்தத்தில் நல்லபலன்கள் அதிகம் உள்ள பெயர்ச்சியாக இது இருக்கும்.

பரிகாரங்கள்:

குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை குரு ஹோரையில் குருவை நிகர்த்த பெரியோர்களை சாஷ்டாங்கமாக வணங்கி ஆசி பெறுங்கள்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

மீன ராசிக்கு இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்து பிள்ளைகள் விஷயங்களில் மன வருத்தங்களையும், நிம்மதியற்ற நிலைகளையும், அதிர்ஷ்டக் குறைவையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகு தற்போது நான்காமிடத்திற்கு மாறுவது உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பு.

அதேநேரத்தில் இதுவரை லாபஸ்தானம் எனப்படும் பதினோராமிடத்தில் இருந்து உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை கொடுத்து வந்த கேது பத்தாமிடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது சாதகமான பலன் தரும் அமைப்பு அல்ல.

பொதுவாக நம்முடைய மூலநூல்களில் கேந்திர ஸ்தானங்களில் அமரும் ராகு - கேதுக்கள் அந்த வீட்டின் பலனைக் கெடுத்து தங்களின் பலன்களைத் தருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்படி தற்போது நான்காம் வீட்டிற்கு மாறும் ராகுவால் உங்களுக்கு வீடு, வாகனம், தாயார், கல்வி ஆகிய விஷயங்களில் பின்னடைவுகள் இருக்கும் என்றாலும் வரும் நவம்பருக்குப் பிறகு ராகு குருவின் பார்வையைப் பெறப் போவதால் சாதகமற்ற போக்குகள் எவ்வித பாதிப்புகளையும் தராது.

நான்காமிட ராகுவால் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் மீன ராசிக்காரர்களின் வயது, தகுதி, வாழ்க்கைமுறை, இருக்கும் நாடு ஆகியவற்றைப் பொறுத்து வீடு, வாகனம், தாயார், கல்வி, தன்சுகம் எனப்படும் ஆரோக்கியம் ஆகியவற்றில் சில பின்னடைவுகள் ஏற்படும்.

இதுவரை நல்ல வீட்டில் இருந்தவர்கள் சற்று வசதிக் குறைவான வீட்டிற்கு மாறுவீர்கள். வீட்டினை அடமானம் வைத்து தொழில் செய்பவர்கள், வீட்டின் பேரில் பணப்பிரச்னைகள் மற்றும் வங்கிக்கடன் உள்ளவர்கள், வீட்டின் மீது நீதிமன்ற வழக்குகள் இருப்பவர்கள், வீடு சம்பந்தமான பாகப்பிரிவினை சிக்கல்கள் உள்ளவர்களுக்கு நான்காமிட ராகுவினால் பாதிப்புகள் இருக்கும்.

மேலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் புதிதாக வீட்டுப்பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து தற்போது புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது.

அடுத்து வாகனவிஷயங்களில் செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம் வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.

வயதான தாயாரைக் கொண்ட வர்கள் அவரின் ஆரோக்கியத்தின் மேல் விழிப்புடன் இருங்கள். தாயாரால் விரையங்கள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. குறிப்பிட்ட சிலருக்கு தாயாருடன் மனக்கசப்புகளும், தாயாரைப் விட்டு பிரிதலும், பெற்றோரை விட்டு தூர இடங்களில் அல்லது வெளி நாடுகளில் பணிபுரிவது போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.

சிலருக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அக்கறை எடுத்து படித் தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாக இருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும் என்பதால் பதின்பருவத்தில் இருக்கும் மீனராசிக் குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையுடன் கவனிப்பது நல்லது.

பத்தாமிடத்திற்கு கேதுபகவான் மாறினாலும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு குருவோடு இணைவதால் தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சங்கடங்கள் எதுவும் வந்து விடாது. மேலும் சர்ப்பக்கிரகங்களில் ராகுதான் வலிமையானது என்றும் தலை என்றும் சொல்லப்படுவதாலும் கேது வலிமையற்ற வால் போன்றதுதான் என்பதாலும் பத்தாமிடத்தில் ராகு இருந்தால் மட்டுமே ஜீவன அமைப்புகளில் தொந்தரவுகள் வரும் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.
எனவே இந்தமுறை கேது தொழில் ஸ்தானத்திற்கு இடம் பெயருவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவை பாதிக்குமோ என்று மீனராசிக்காரர்கள் கவலைப்படத் தேவையில்லை.

உங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப்படுவீர்கள்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

உறவினர்களிடம் சுமுக உறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இந்த வருடம் செய்ய வேண்டாம். சொத்துப் பிரிவினை, நிலப்பிரச்னைகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள்.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு குருபலம் இருப்பதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். மீன ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு. மேலும் ராகுகேதுக்கள் இம்முறை புத்திரகாரகனாகிய குருவுடன் சம்பந்தப்படுவதால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை தற்பொழுது நல்ல விதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

யூக வணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும். வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரங்கள்

வேலூர் வாலாஜா பேட்டையில் அமைந் திருக்கும் ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நடைபெறும் யாகத் தில் கலந்து கொள்ளுங்கள். அங்கே மகான் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமி களால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store