iFLICKS தொடர்புக்கு: 8754422764
சிம்மம்

இன்றைய ராசி பலன்கள்

சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும், நண்பர்கள் வழியிலும் விரயங்கள் அதிகரிக்கும். வாகனப் பழுதுச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.

வார பலன்கள்

செப்டம்பர் 23-09-2018 முதல் 29-09-2018 வரை:-

வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமமாக அமைவதால் செவ்வாய், புதன் இரண்டு நாட்களும் எதிலும் குழப்பமாக இருப்பீர்கள். மீதி நாட்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கொடுக்காத வாரம் இது. குறிப்பாக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வி‌ஷயம் நிறைவேறும். பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே உண்டு என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.

உங்களுடைய தடாலடி நடவடிக்கைகளால் உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில்களில் இடையூறுகள் இல்லாமல் சகஜமாகவே செல்லும். 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 24ந்தேதி மாலை 5.15 மணி முதல் 27ந்தேதி அதிகாலை 1.54 மணிவரை சந்திராஷ்டமம் என்பதால், நீண்டதூர பிரயாணங்கள், புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

செப்டம்பர் மாதம் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 17-ம் தேதி வரை

சிம்மநாதன் சூரியன் புரட்டாசி முழுவதும் தன்னை நண்பராக நினைப்பவரான புதனுடைய வீட்டில் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த புதனும் உச்ச வலுப்பெற்று அவருடன் இணைகிறார். இது உங்களுக்கு சந்தோஷங்களையும் நன்மைகளையும் தரும் நிலை என்பதால் இந்தமாதம் எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாமல் நல்லமாதமாகவே இருக்கும். அடுத்த மாதம் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் குரு பார்வையுடன் வலுப்பெறுவதால் வேலை, தொழில் அமைப்பில் இந்தமாதம் மாறுதல்கள் இருக்கும்.

உங்களில் சிலருக்கு புரட்டாசி மாதம் புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும் தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும்.

ராசிநாதன் சூரியன் உச்ச புதனுடன் இணைவதால் புத்தகம், கணக்கு, கம்ப்யூட்டர், பத்திரிக்கைத்துறை, அஞ்சல்துறை, வியாபாரிகள், பச்சைநிறம் சம்பந்தப்பட்டவர்கள், சொல்லி கொடுப்போர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் நல்ல பலன்களும், பணவரவுகளும் இருக்கும். வெகு நாட்களாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இந்த மாதம் கிடைக்கும். புரட்டாசி மாதம் தொல்லைகள் இல்லாத நல்ல மாதமே.

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ஆண்டு பலன் - 2018

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2018-ம் வருடம் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும். 

இளைய பருவ சிம்மராசிக்கார்கள் பலர் கடந்த இரண்டு வருடங்களாக அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள். 

சிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்ற நிலைதான் சென்ற வருடம் வரை சிம்மராசிக்கு நடந்து கொண்டிருந்தது. 

அதிலும் கோட்சார ரீதியில் நான்காமிடச் சனி ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச்சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் சிம்மராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் சனியின் ராசிப் பார்வையால் பாதிக்கப்பட்டு சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள். இது போன்றவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் சிம்மத்திற்கு இல்லை.

கடந்த சில மாதங்களாக உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அர்த்தாஷ்டமச் சனி அமைப்பு ஏற்கனவே விலகி விட்டது. தற்போது கேதுபகவான் இந்த வருடம் முழுவதும் மிகவும் நல்லபலன்களை தரக்கூடிய ஆறாமிடத்தில் இருப்பதும் நல்ல அமைப்பு. குறிப்பாக ராகு தனக்கு மிகவும் பிடித்த வீடான கடகத்தில் இருக்கிறார். 

கடகத்தில் ராகு,கேதுக்கள் ஆறு, பனிரெண்டாமிடங்களாக அமரும் நிலையில் பெரிய லாபங்களை தருவார்கள் என்பது ஜோதிட விதி. அதன்படி பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான ஒரு நல்ல கோட்சார நிலை இப்போது அமைந்துள்ளதால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் அமைப்புகள் மேன்மை பெறும். எனவே இந்த ஆண்டில் சனி மற்றும் ராகு-கேது நிலைகளின் மூலம் நல்ல தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பண வரவுகளையும் சிம்மத்தினர் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள். 

உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும் போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார். 

கிரகங்கள் சாதகமான அமைப்பில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும். 

சனியின் ஆதிக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும். 

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும். 

குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். 

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள். 

நடுத்தரவயது தாண்டிய சிம்ம ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம். 

வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத சிம்ம ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். 

குருவைத் தவிர்த்து பெரும்பாலான கிரகங்கள் தற்போது சிம்ம ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். 

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு இந்த வருடம் நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு. 

கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஐந்தாமிடல் சனி இருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மொத்தத்தில் தொட்டது துலங்கும் காலம் என்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிம்மத்தினர் தங்கள் எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி     
செல்: 8870 99 8888

விளம்பி வருட பலன்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
சிம்ம ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் துயரங்கள் எதையும் தரப் போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக சிம்மத்திற்குச் சொல்லலாம்.  

விளம்பி ஆண்டில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிம்மத்திற்கு இப்போது இருப்பதை விட நல்ல  பலன்களை தரும் என்பதாலும் மற்ற கிரகங்களின் அமைப்பும் கெடுபலன்கள் எதுவும் தராத நிலையில் உள்ளதாலும் புத்தாண்டின் முதல்பகுதியை விட பிற்பகுதி நற்பலன்களை கொண்டதாக இருக்கும்.  

பிறக்க இருக்கும் புதுவருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள்.  எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் இந்த வருடத்தில் முன்னேற்றமாக இருக்கும்.

அரசுத்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள்.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உடல்நலத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு  பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடுகட்டும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

வருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும்  ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

சிம்ம ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும் காலம் வந்து விட்டது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த விளம்பி வருடத்தில் நடக்கும்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் இனி சிறக்கும்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சிம்ம ராசிக்கு இதுவரை கெடுபலன்களை தரக்கூடிய இடமான நான்காம் இடத்தில் இருந்து வந்த சனிபகவான் ஐந்தாமிடத்திற்குச் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு மாற்றமாக அமையும்.

சனிபகவான் ஐந்தாமிடத்தில் இருப்பது நல்ல நிலை என்று நம்முடைய மூல நூல்களில் சொல்லப் படாவிட்டாலும் கடந்த மூன்று ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் அமர்ந்து ஜீவன ஸ்தானத்தை பார்த்ததன் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நிம்மதியற்ற சூழலை சனி கொடுத்துக் கொண்டிருந்தார்.

மேலும் தன்னுடைய கெடுதலான பார்வையின் மூலம் ராசியைப் பார்த்து சிம்மத்தினருக்கு மன நிம்மதி இல்லாத சூழல்களையும் உருவாக்கி இருந்தார். இதுபோன்ற நிலையில் இருந்து சனி நீங்குவது சிம்மத்திற்கு பெரிய நன்மைகளைத் தரும் என்பதால் இந்த சனிப் பெயர்ச்சியால் நன்மைகளை அடையப் போகும் ராசிகளில் சிம்மமும் ஒன்றாக இருக்கும்.

குறிப்பாக சிம்ம ராசிக்காரர்களின் உடல், மனம் இரண்டையும் பாதித்து கெடுபலன்களைத் தந்து கொண்டிருந்த சனி அர்த்தாஷ்டமச் சனி எனும் நிலையில் இருந்து மாறுவதே சிம்மத்திற்கு ஒரு மிகப் பெரிய நிம்மதியை தருகின்ற ஒரு நிலை.

கடந்த காலங்களில் சிம்மத்தினர் கடுமையான மனஅழுத்தத்தை தரக்கூடிய சம்பவங்களை எதிர் கொண்டீர்கள். இளம் பருவத்தினருக்கு வேலையில் நிம்மதி இல்லாத சூழ்நிலையும், வேலையே இல்லாத நிலைமையும், தகுதி, திறமைக்கேற்ற பணி இல்லாத ஒரு நிலையும் இருந்து வந்தது. அந்த நிலைமை இந்தப் பெயர்ச்சியின் மூலம் முற்றிலுமாக விலகி அனைத்திலும் சிம்மத்தினர் ஒரு நிம்மதியான நிலையை பெறப் போகிறீர்கள்.

வேறு சிலருக்கு வேலையில் மன அழுத்தம் தரக் கூடிய டார்ச்சர் எனப்படும் நிலைமைகள் இருந்ததோடு, சொந்த வாழ்விலும் மன இறுக்கம் தரக்கூடிய சூழல்கள் இருந்தன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, குடும்பத்தில் மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குழப்பம், பொருளாதாரச் சிக்கலினால் சண்டை, குழந்தைகளால் மனவேதனை போன்ற அனைத்து வித குழப்பங்களும் ராசிக்கு இருக்கும் சனியின் பார்வை விலகுவதால் தீரப் போகிறது.

சமீபகாலங்களில் இரண்டு பெரும் பாபக் கிரகங்களில் ஒன்றான ராகு உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்ததும், அந்த ராகுவை இன்னொரு பெரும் பாபரான சனி பார்த்ததும் சிம்மத்தினரின் மனம், உடல் இரண்டையும் பாதித்திருந்தன. பெரும்பாலான சிம்மத்தினருக்கு உடல்நலம் பாதித்தது இந்த அமைப்பால்தான்.

முன்னரே நடந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இரு மாதங்களுக்கு முன்பு ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி விட்டதும், தற்போது சனி மாற்றத்தினால் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் இருந்து விலகுவதும், ஒளி மிகுந்த ராசியான சிம்மத்தை மீண்டும் ஒளி வீசச் செய்யும் அமைப்புகள் என்பதால் உங்கள் உடலும், மனமும் இனி சீராகும்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையில் இருந்த சிம்மத்தினர் மீண்டும் இழந்த நம்பிக்கையைப் பெற்று வாழ்க்கையில் அனைத்தையும் சந்திக்கத் துணியும் செயல்திறனுடன், புத்துணர்ச்சியோடு வலம் வர தொடங்குவீர்கள். எனவே கெடுபலன்கள் நீங்கப் போகின்றது என்ற வகையில் இந்த பெயர்ச்சி ஒரு மகத்தான மாற்றத்தை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் உங்களுக்குக் கொடுத்து வாழ்வில் முன்னேற்றத்தினை தர இருக்கிறது.

அதேநேரத்தில் ஐந்தாமிடத்தில் அமரும் சனி என்ன பலன்களைத் தருவார் என்று பார்க்கும்போது பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களையும், குழந்தைகள் மூலமான நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதையும், பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய இயலாமல் போவதுமான பலன்களைச் செய்வார்.

எனவே இந்த சனி மாற்றத்தால் பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். பிள்ளைகள் தங்களுடைய வயதிற்குரிய விஷயங்களைச் செய்து உங்களுக்கு மன வருத்தத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் பள்ளியிறுதி-கல்லூரி வயதில் இருக்கும் குழந்தைகளை அக்கறையுடன் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில்  பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். சனியின் பத்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருந்து விலகுவதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும்.

சனியின் பார்வை ராசியில் இருந்தும் விலகுவதால் இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நல்லவைகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் ஆரம்பிப்பீர்கள். மனஅழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி வரும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை பிறக்கும். அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆட்களைச் சந்திப்பீர்கள்.

மொத்தத்தில் அர்த்தாஷ்டமச் சனி என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் விலகுவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று எதிர்காலத்தை உங்களுடையதாக்கி கொள்வீர்கள்.

சனிபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் மகன், மகளுக்கு ஆகவேண்டிய திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறையும். சாதாரண சிறு விஷயங்களுக்குக் கூட மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாகவும் கவனக்குறையாகவோ எடுத்துக் கொள்ளாமல் முழு கவனத்துடன் செய்ய வேண்டி இருக்கும்.

என்னதான் சனி ஐந்தாமிடத்தில் இருந்தாலும் பணவரவுக்கு குறை இருக்காது. வருமானம் தடைப்படாது. சனி எந்த ஒரு விஷயத்திலும் சிறு பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தருவாரே தவிர பண விஷயங்களில் கைவைக்கமாட்டார். அதே நேரத்தில் சேமிக்கவும் முடியாது என்பதால் எந்த ஒரு செலவு செய்யும் முன்பும் யோசித்து செய்வதும், சிக்கனமாக இருப்பதும் நல்லது.

கடந்த காலங்களில் சுக ஸ்தானமான நான்காமிடத்தில் சனி இருந்ததால் ஆரோக்கியக் குறைவையும், உடல்நலப் பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். மருத்துவர்களுக்கு அடங்காத நோய்களும் இப்போது பரம்பொருளின் கருணையால் வெகு விரைவில் குணமாகும். இதுவரை மருத்துவத்துக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.   

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்லபலன்கள் இருக்கும். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. நகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். இதுவரை வாங்க முடியாத விரும்பிய வாகனம் வாங்க முடியும். தாயாருக்கு உடல்நலக் குறைவு சரியாகும். அம்மாவைப் பற்றிக் கவலைப் பட அவசியம் இருக்காது.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரங்கள்:

ஒரு கருப்பு நிறமுள்ள மனிதரை மேற்குமுகமாக நிறுத்தி வைத்து நீங்கள் அவருக்கு எதிரில் கிழக்கு பார்த்து நின்று ஒரு இரும்புச் சட்டியில் வழிய வழிய நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் தானம் கொடுப்பது சனிபகவானை திருப்திப்படுத்தும். தானம் பெறுபவர் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் சிறப்பு.

கணித்தவர்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
செல்:  8870 99 8888

குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குரு பகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார்.

பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது சுபப் பார்வைகளால் கணவன் அல்லது மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாபங்கள் தரும் இடமான பதினொன்றாமிடத்தையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இனங்கள் மூலமாக இப்போது நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.

மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசா, புக்திகள் நடக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கோட்சாரக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

கடந்த காலங்களில் உங்கள் ராசியில் இருந்த ராகுவாலும், நான்காமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்த சனியாலும் சிம்மத்திற்கு எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. மாறாக சிம்மத்தினருக்கு வேலை, தொழில் போன்றவைகளில் பாதிப்புகளும் உடல், மனரீதியிலான தொல்லைகளும் மட்டுமே இருந்து வந்தது.
உங்களை பாதிப்பிற்குள்ளாக்கிய ராகு, சனி இரண்டும் இப்போது உங்களை விட்டு விலகுவதால் இனிமேல் சிம்மத்தின் சிந்தனையும், செயல்திறனும் மிகவும் மேலோங்கிய நிலையில் இருக்கும். குறிப்பாக சிம்மத்திடம் பழைய கம்பீரத்தையும், கர்ஜனையையும் இனிமேல் பார்க்க முடியும்.

வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியன்று நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி முதல் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அர்த்தாஷ்டமச் சனி எனப்படும் நான்காமிடத்துச் சனி விலகுவதால் இனிமேல் உங்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கிய அனைத்துப் பிரச்னைகளும் விலகும். வீட்டிலும், தொழில் இடத்திலும் சங்கடங்கள் விலகி நிம்மதி பிறக்கும்.

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நல்ல பணவரவும், வருமானங்களும் இருக்கும், பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இனி இருக்கப் போவது இல்லை.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் காலம் வந்து விட்டதால் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், சுய தொழில் செய்பவர் களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதாலும், அவரே உங்கள் ராசிக்கு ஐந்துக்குடையவனாகி பார்ப்பதாலும் வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. செய்யும் தொழில் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் செல்ல முடியும்.

குருவின் ஏழாமிடப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.
திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு திருமணம் நடக்கும். சிம்ம ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப் பெயர்ச்சியால் ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து, வாழ்க்கை கோணலாகி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு குரு இரண்டாவது வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்து தருவார். சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

குருபகவானின் ஒன்பதாமிடப் பார்வையால் தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வட மாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின்

அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக் கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும்.

சிம்ம ராசிப் பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

குருப்பெயர்ச்சிக்கு பிறகு சில வாரங்களிலேயே சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சனி நான்காமிடத்திலிருந்து மாறி புத்திர பாவமான ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார். இதனால் குழந்தைகள் விஷயத்தில் ஏதேனும் மனச் சங்கடங்கள் சிலருக்கு வரலாம்.

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும் போதே கர்ணனின் கவச குண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரம் :

வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருப் பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். சென்னையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் சேக்கிழார் பெருமான் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குரு ஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவில் ஸ்ரீதட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
88709 98888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

கடந்த முறை நடந்த ராகு-கேது பெயர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராசிகளில் சிம்மமும் ஒன்று.

ராசியில் ராகு இருந்த நிலையில் இன்னொரு பாப கிரகமான சனிபகவானும் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம சனி என்ற நிலைமை இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் சற்று திணறித்தான் போனீர்கள்.

ராசியிலேயே பகை அமைப்பில் சென்றமுறை ராகு அமர்ந்ததால் பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல், மன பாதிப்புகள் இருந்தன. உங்களில் பலருக்கு வேலைகளில் சங்கடங்கள் இருந்து வந்தன. வேலை பளு அதிகமாக இருந்தது. பலர் பிடித்தம் இல்லாத வேலையை நிர்பந்தத்திற்காக செய்ய வேண்டிய நிலை இருந்தது.

இன்னும் சிலருக்கு வேலையே இல்லாத நிலை இருந்தது. தொழில் சரியாக அமையவில்லை. அமைந்த தொழிலும் உருப்படியாக இல்லை. வியாபாரத்தில் குழப்பம், மேலதிகாரி தொல்லை என்று சிம்ம ராசிக்காரர்கள் அடைந்த துன்பங்கள் ஏராளம்.

ஒரு இருட்டுக் கிரகம் உங்கள் ராசியின் மேல் அமர்ந்ததால் பல சிம்ம ராசிக்காரர்களின் செயல்திறன் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. அனைத்து முயற்சிகளும் ஒரு முட்டுச்சந்தின் மேல் முட்டிக் கொண்டு முன்னே போக முடியாமலும், பின்னே திரும்ப முடியாமலும் ஒரு வினோதமான நிலைமை. ராகுவினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இருந்து வந்தது.

தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு எதிர்த்தன்மையுடைய கிரகங்களான ராகு-கேதுக்கள் நன்மைகளை தரக்கூடிய 6, 12-ம் இடங்களுக்கு மாறுகிறார்கள்.

இந்த அமைப்பு சிம்ம ராசிக்கு மிகுந்த நற்பலன்களை கொடுக்கக் கூடியதாகும். இப்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கடந்த 2 வருடங்களாக சிம்மத்திற்கு இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கி ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம் உருவாகும்.

இந்த மாற்றத்தினால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் நிலைமைகளில் இதுவரை இருந்து வந்த “கிணற்றில் போட்ட கல்” போன்ற நிலைமை இனிமேல் இருக்காது. அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை இனிமேல் இருக்காது.
ராசியில் இருந்து ராகு வெளியேறுவதால் இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். செயல்திறன் கூடும். இதுவரை இருட்டான குகைக்குள் இருந்தது போன்ற நிலைமை மாறி வெளிச்சத்திற்கு வருவீர்கள். முகத்தில் பொலிவு தெரியும். உங்களை அறியாமலேயே உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

உங்கள் ராசியான சிம்மம் ஒளி மிகுந்த ராசியாகி, அதன் மேல் இருந்த ஒரு இருட்டு விலகுவது, உங்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்பதால் சிம்ம ராசிக்காரர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் உங்கள் விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் இருந்து வந்த தடைகள் விலகுவதை காணலாம்.

ராகுவின் எதிர்முனை கிரகமான கேதுபகவான் 6-மிடத்திற்கு மாறுவதால் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் உங்களுக்கு அடி பணியும். கேது 6-மிடத்தில் அமர்வது கடன், நோய்கள் அற்ற வாழ்வை தரும் என்பதால் இதுவரை கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் நல்ல பணவரவு வந்து கடனை அடைப்பீர்கள்.

ஆறாம் வீடு அங்கே இருக்கப் போகும் கேதுவால் சுப வலிமை அடைவதால் அந்த பாவத்தின் கடன், நோய், எதிர்ப்பு ஆகிய தன்மைகள் இனிமேல் குறையும். எனவே அதிகமான கடன் தொல்லை, ஆரோக்கியப் பிரச்னைகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.
பிறந்த ஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைத்தால் ஒன்றரை வருடத்திற்குள் கடன் இல்லாத நிலைமையை அடைய முடியும் அளவிற்கு உங்களின் பொருளாதார உயர்வு நன்றாக இருக்கும். எப்படி பார்த்தாலும் சிம்ம ராசிக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகப்பெரிய நற்பலன்களை தர இருக்கின்றது என்பது உறுதி.

பாபக் கிரகங்கள் பனிரெண்டாம் வீட்டில் நன்மைகளைத் தருவார்கள் என்ற விதிப்படியும், ராகுவிற்கு கடகம் அதிநட்பு வீடு என்பதாலும் இந்தப் பெயர்ச்சியில் ராகுவால் உங்களுக்கு அதிகமாகன நற்பலன்கள் கிடைக்கும். தருவார். அதேபோல உங்களின் ஆறாம் பாவத்திற்கு மாறும் கேதுபகவானும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தருவார்.

பனிரெண்டாமிட ராகுவால் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் மாறுதல்கள் இருக்கும். ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், தொழில் இட மாற்றம் போன்றவை தற்போது நடக்கும். சிலருக்கு இம்முறை வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய அளவிற்கு ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்திலும் மாற்றத்தை ராகு தருவார்.

அதேபோல இயக்கும், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு ராகுபகவான் மிகுந்த நன்மைகளை அளிப்பார். இதுவரை வெளிநாடு போகாதவர்களை ராகு கடல் தாண்ட வைப்பார். வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் அடிக்கடி இருக்கும்.

விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  ராகுவால் உண்டு.

சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.  
நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தப் பெயர்ச்சி உங்களை ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம், வீண் விரோதங்கள் வரலாம்.

சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அபரிமிதமான நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு  பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தர்ம காரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.  

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம்  இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

யூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள்.  

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. உங்கள் நட்சத்திரநாயகன் கேதுபகவான் சுபபலம் பெறுவது நன்மைகளைத் தரும். மகம் நட்சத்திரக் காரர்களுக்கு இம்முறை வீடு வாகனம் தாயார் போன்ற இனங்களில் மிகப் பெரிய நன்மைகள் நடக்கும்.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு  இந்த முறை மிகப் பெரிய லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது. இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

தந்தையார் வழியில் நீங்கள் மிகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெகுதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். அடிக்கடி பிரயாணங்கள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் உண்டு. வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பரிகாரங்கள்

சென்னையில் இருப்பவர்கள் மேடவாக்கம் சேலையூருக்கு அருகில் உள்ள மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெறுங்கள். மற்றவர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் அதேநேரத்தில் வழிபடலாம்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store