iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்

இன்றைய ராசி பலன்கள்

வழக்குகள் சாதகமாக முடியும். பல காலமாக கனவு கண்டு கொண்டிருந்த திட்டம் நிறைவேறும். அலுவலக நண்பர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். மனைவி அல்லது கணவர் வழியில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் வாழ்வில் முன்னேற்றம் வரும்.

வார பலன்கள்

தமிழ் மாத ஜோதிடம்

14-3-2020 முதல் 13-4-2020 வரை

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும்

விகாரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ராகு வீற்றிருக்கிறார். ராசி நாதன் புதன் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 9-க்கு அதிபதியான சனி பகவான், தனது வீட்டில் சஞ்சரிக்கும் புதனைப் பார்க்கிறார். இதன் விளைவாக சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

லாப ஸ்தானத்தில் விரயாதிபதி சுக்ரன் வீற்றிருக்கிறார். சுக்ரன் 12-ம் இடத்திற்கு மட்டும் அதிபதியானவர் அல்ல, 5-ம் இடத்திற்கும் அதிபதியாவார். 5-ம் இடம் புத்திர ஸ்தானம் என்பதால், பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே நேரம் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், வரும் விரயம் சுப விரயமாகவே அமையும்.

பொதுவாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய், சனி சேர்க்கையால் சில பிரச்சினைகள் உருவாகலாம். மார்ச் 22-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி, மகரத்திற்கு சென்று உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

குரு நீச்சம் பெறும் மாதமிது. நீச்சம் பெற்றாலும் அதன் பார்வைக்குப் பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைக் குரு பார்க்கப் போகிறார். மகர குருவின் சஞ்சார காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். இம்மாதம் பங்குனி உத்திரத் திருநாள் வருகிறது. அன்றைய தினம் முழுமையாக விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.

மகர செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 22-ந் தேதி உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியான செவ்வாய், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் 6-க்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய், 8-ம் இடத்திற்கு வரும்பொழுது ‘விபரீத ராஜயோகம்’ செயல்படும். இதனால் வாழ்வில் திடீர் திருப்பங்கள் பல ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.

மகர குரு சஞ்சாரம்

குரு நீச்சம் பெறும் மாதமிது. நீச்சம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். சப்தமாதிபதியாக விளங்கும் குரு, 10-ம் இடத்திற்கும் அதிபதி. அதோடு கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவராகவும் விளங்குகிறார். எனவே அவர் நீச்சம் பெறும்பொழுது 7-ம் இடத்திற்கும், 10-ம் இடத்திற்கும் உரிய ஆதிபத்யங்களை எளிதில் நிறைவேற்றுவார். குறிப்பாக வெளிநாட்டு முயற்சியில் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும். மணமாலையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான மூலதனம் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

ரிஷப சுக்ரன் சஞ்சாரம்

மார்ச் 29-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். விரயாதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வீடு, இடம், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பெண்வழிப் பிரச்சினைகளும் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

நீச்ச புதன் சஞ்சாரம்

ஏப்ரல் 1-ந் தேதி மீன ராசிக்கு செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். நீச்சம் பெற்ற புதன் தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். ராசிநாதனாகவும், சுகாதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தனது வீடான 4-ம் இடத்தைப் பார்க்கும் பொழுது சந்தோஷம் அதிகரிக்கும். விற்ற சொத்துக்களுக்கு இணையாக, புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் வாய்க்கும். இம்மாதம் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 22, 23, 27, 28 ஏப்ரல்: 3, 4, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், திடீர் விரயங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தாய்வழி ஆதரவு, சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்வு அமைய, நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்ளுங்கள். பணிபுரியும் பெண் களுக்கு சக ஊழியர்களால் பிரச்சினைகள் உருவாகும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கண்டகச் சனி விலகும் வரை பொறுமையோடு செயல்படுவதே உத்தமம்.

ஆண்டு பலன் - 2020

1-1-2020 முதல் 31-12-2020 வரை

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க,கா,கி,கு,ஞ,ச,கே,கோ உள்ளவர்களுக்கு)
வரன்கள் வாசல் தேடி வரும்

உங்கள் ராசிநாதன் புதனோடு சூரியன் இணைந்திருப்பதால், புத - ஆதித்ய யோகத்தோடு இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டு பிறக்கும் பொழுதே, 5 கிரகங்கள் உங்கள் ராசியைப் பார்க்கின்றன. அவற்றில் ஒன்று குரு பகவான். அவர் நவக்கிரகத்தில் ‘சுபகிரகம்’ என்று அழைக்கப்படுபவர். அவரது நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு பிறக்கும் இந்த புத்தாண்டு, பலவித யோகங்களை வழங்கப் போகிறது.

ஜென்மத்தில் ராகு சஞ்சரிக்கிறார். ஆண்டின் தொடக்கத்திலேயே சப்தம ஸ்தானம் பலம்பெற்றிருக்கிறது. 7-ம் இடத்தில் சூரியன், புதன், வியாழன், சனி, கேது ஆகிய 5 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதன் பயனாக திருமணம் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தொழில் வெற்றி நடைபோடும். எதிரிகள் விலகுவர். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்.

சப்தம குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில் குரு, தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசியில் வீற்றிருக்கிறார். எனவே அவர் உங்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கப்போகிறார். இல்லத்தில் ஒவ்வொரு நாளும் இனிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணையாக இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளைக் கைகூட வைப்பது குருவின் கையில்தான் உள்ளது. அப்படிப்பட்ட குருபகவான், தன் சொந்த வீட்டில் சஞ்சரித்து அதன்பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இல்லறம் நல்லறமாக மாறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதை உயரும். வி.ஐ.பி.க்களின் பழக்கம், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நடக்கும். தொழிலில் மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள்.

வருடத் தொடக்கத்தில் 6-ல் செவ்வாய், 8-ல் சுக்ரன், 9-ல் சந்திர பகவான் இருப்பதால், வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி முதல் வயல், தோட்டம், வீடு போன்றவை வாங்கும் யோகம் வரை வந்து சேரும். 6-க்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திலும், 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் 8-ம் இடத்திலும் சஞ்சரித்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் வந்து சேர்ந்துவிடும். ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள், மீண்டும் வந்து சேர்வார்கள்.

கேது பலத்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் போராடி வராத தொகை, எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம். என்னஇருந்தாலும் ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் நாக தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு யோகம் தரும் நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்ளுங்கள்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள்ளேயே குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் குருவின் சொந்த வீடான தனுசு ராசிக்குள்ளேயே குரு வக்ரமும், சனி வக்ரமும் நிகழ்கிறது. குருவோடு இருப்பதால், சனியின் கடுமை கொஞ்சம் குறையும். உறவினர் பகை அகலும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். மகரம் என்பது குருவிற்கு நீச்ச வீடாகும். 12 ஆண்டிற்கு ஒருமுறை குருபகவான் இந்த இடத்திற்கு வந்து சஞ்சரிப்பார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, 8-ம் இடத்தில் நீச்சம் பெறும்பொழுது மிகுந்த யோகத்தை வழங்குவார். மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நேரம் இது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்பதற்கான அறிகுறி தென்படும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு உண்டு. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். காலையில் கொல்கத்தா, மாலையில் மலேசியா, இரவில் இந்தோனேசியா, அடுத்தநாள் அமெரிக்கா என்று பயணங்களால் சுற்றிச் சுழன்று கொண்டே இருப்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் இருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிக்கிறார். 1.9.2020 அன்று இந்த இரண்டு கிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் உள்ள ராகுவால் பயணங்கள் அதிகரிக்கும். பண விரயங்கள் ஏற்பட்டாலும், அவை சுப விரயமாக மாறும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர்மாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல்களும் கிடைக்கலாம். ஏற்று மதி, இறக்குமதி வணிகம் செய்வோர் லாபம் பெறுவார்கள்.

6-ல் உள்ள கேதுவால் எதிரிகளின் பலம் அதிகரிக்கும். எனவே எந்த முயற்சியையும் இயன்றவரை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு, முடிவடையாமல் உங்களிடமே திரும்பி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வடக்கு நோக்கிய விநாயகப் பெருமான் வழிபாடும், பெண்தெய்வ வழிபாடும் தடைகளை அகற்றும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகிறார். சனி உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். 8-ம் இடத்திற்கு அதிபதி வக்ரமாவது ஒரு வழிக்கு நன்மைதான். ஆனால் 9-ம் இடத்திற்கு அதிபதியாகச் சனி விளங்குவதால் தந்தை வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். சகோதரர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கோவில் திருப்பணிகளை முறையாகச் செய்வீர்கள். வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராகும்.

13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாயும், சனியும் சேர்க்கை பெறுகின்றன. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனிபகவான், கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். இதுபோன்ற காலங்களில் பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. மனக் கவலை அதிகரிக்கும். சேமிப்பு கரையும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும்.

26.12.2020 அன்று உத்ராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். அதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச் சனியாகச் சஞ்சரிக்கும் சனி பகவான், 8-ம் இடத்திற்குச் சென்று, அஷ்டமத்துச் சனியாக மாறுகிறார். 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் 8-ம் இடத்திற்கு வருவதால் ‘விபரீத ராஜ யோகம்’ அடிப்படையில் நல்ல பலன்களைக் கொடுப்பார். என்றாலும் அவர் 9-ம் இடத்திற்கும் அதிபதியாவதால் ஒருசில சமயங்களில் மனக்கஷ்டங்களும், ஒருசில சமயங்களில் பணக்கஷ்டங்களும் வரலாம். தசாபுத்தி பலம்பெற்றவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது.

செல்வ வளம் தரும் வழிபாடு

ஏகாதசி விரதமிருந்து பெருமாள்- லட்சுமிதேவியை வழிபட்டு வந் தால், பெருமைக்குரிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.
குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில், மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். இக்காலத்தில் குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அதாவது, குருவின் வீட்டில் சனியும், சனியின் வீட்டில் குருவும் என்று, ஒருவர் வீட்டில் மற்றொருவர் மாறி அமர்ந்திருப்பதற்கு ‘பரிவர்த்தனை யோகம்’ என்று பெயர். இது யோகங்களிலேயே மிகவும் சிறப்பான யோகமாகும். இதன்மூலம் சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் அமையும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லவும் யோகம் இருக்கிறது.
பெண்களுக்கான பலன்கள்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசி மீது குருவின் பார்வை பதிவதால், ஆரோக்கியம் சீராகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு அழகு பார்க்கும் யோகம் உண்டு. பிறந்த வீட்டுப் பெருமைகளைப் புகுந்த வீட்டிலும், புகுந்த வீட்டுக் குறைபாடுகளை பிறந்த வீட்டிலும் சொல்லாமல் இருப்பது நல்லது. சகோதரர்களின் பகையை சம்பாதிப்பீர்கள். தாய்வழி ஆதரவு ஓரளவு உண்டு. ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகு உடல்நலம் சீராகும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்த மாற்றங்களும், நீண்ட தூரப் பயணங்களும் உருவாகலாம். ராகு - கேதுக்களுக்குரிய பரிகாரங்களையும், சனிக்குரிய பரிகாரங்களையும் முறையாகச் செய்து வழிபடுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வருடத்தின் முற்பாதியை விட, பிற்பாதி நன்மை தரும். குறிப்பாக உத்தியோக முன்னேற்றம், ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த சலுகைகள் செப்டம்பர் மாதத்திற்கு மேல் கிடைக்கலாம்.

விகாரி வருட பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக் கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு, ஆரம்ப மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும் பிற்பகுதி முழுவதும் நல்ல பலன்களை செய்யும் வருடமாக இருக்கும்.

வருட ஆரம்பத்தில் ராஜ கிரகங்களான குரு, சனி ஆகியோர் உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாத அமைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ராசிநாதன் புதன் மற்றும் யோகாதிபதியான சுக்கிரன் இருவரும் வலுவாக இருப்பது வேலை, தொழில், அமைப்புகளில் நன்மைகளைத் தரும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

புத்தாண்டின் மிக முக்கிய பெயர்ச்சியாக வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குருபகவான் மாறுவதால் குருவின் பார்வை ராசிக்கு கிடைத்து அதன் பிறகு நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்க துவங்கும். இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் வாழ்க்கையை செட்டிலாக்கும் அமைப்பு உருவாவதால் திருமணம், நல்ல வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைக்கூடுதல், தொட்டதும் துலங்குதல், நிரந்தர வருமானம் கிடைத்தல் போன்ற பலன்கள் அப்போது நடக்கும்.

எனவே வருட ஆரம்பத்தில் உங்களுக்கு கிரகங்கள் தரும் பலன்கள் சுமாராக இருந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில் இருந்து நல்ல பண வரவுகளை தரக்கூடிய அமைப்புகள் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் எதற்கும் கலங்க தேவையில்லாத வருடமாக இந்த விகாரி தமிழ்ப் புது வருடம் இருக்கும்.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். வரும் தேர்தலில் வெற்றி உண்டு.

உங்கள் ராசியின் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்து இளைய பருவத்தினருக்கு குடும்பம் அமைய விடாமலும், அவர்களது நிதிநிலை உயர்வைத் தடுத்துக் கொண்டும் இருந்த ராகுபகவான் சில வாரங்களுக்கு முன் மாறி உங்களின் ஜென்ம ராசிக்கு வந்திருப்பது இதுவரை குடும்ப விஷயத்தில் நடந்து வந்த சாதகமற்ற அமைப்புகளை மாற்றுகின்ற ஒரு பெயர்ச்சிதான்.

சமீபத்தில் நடந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு இதுவரை குடும்பம் அமையாமல் இருந்து மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை அமைந்து குடும்பஸ்தனாவீர்கள். திருமணம் தாமதமாகி வந்த இளையவர்களுக்கு கல்யாணம் கூடி வரும். இந்த அமைப்பின் மூலம் இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் ஆதாயங்களை எதிர்பார்த்திருந்த உங்களில் சிலருக்கு நன்மைகள் உண்டு. சிலர் தூர இடங்களுக்குச் செல்வீர்கள்.

பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

மிதுன ராசி இளம் பருவத்தினருக்கு வருடப் பிற்பகுதியில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து நவம்பர் மாதத்திற்கு பிறகு அவரை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வீர்கள். இந்த வருடம் அனைத்து மிதுனத்தினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி. மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

உங்களில் சிலருக்கு மறைமுகமான வகைகளில் பணவரவு இருக்கும். வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நல்லசெய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக மனதில் உருப் போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும். பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு நல்ல நேரம் இது. சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும். நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு மிதுன ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த வருடம் நடக்கும்.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

கடந்த காலங்களில் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழாமிடத்தில் அமர்ந்து மிதுனராசி கணவன்-மனைவியர் இடையே கருத்துவேறுபாடு, பிரிவு, மனச் சங்கடங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சனி தற்போது அங்கிருந்து எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனி என்ற நிலை பெறுகிறார். அஷ்டமச் சனி என்றவுடன் யாவருக்கும் ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே தமிழில் உண்டு. அதேநேரத்தில் அதை சமாளிக்கும் நல்ல விஷயமாக கடந்த மாதம் முதல் குருபகவான் சாதகமற்ற பலனைத் தரும் ஆறாமிடத்திலிருந்து மாறி ஏழாமிடத்திற்கு வந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பது மிதுனத்திற்கு மிகவும் நல்ல அமைப்பு.

ராசிபலன்களே பொதுவான பலன்கள் என்றாலும் அதிலும் ஓரளவிற்கு தெளிவான பலன்களைச் சொல்ல முயற்சிக்கும் ஜோதிடனான நான் தற்போது மிதுனத்திற்கு மாற இருக்கும் அஷ்டமச் சனி என்ன விதமான பலன்களை தரப் போகிறது என்பதை என்னுடைய கோணத்தில் விவரித்தே ஆகவேண்டும்.
பலவிதமான விதிகளையும், விதிவிலக்குகளையும் கொண்டு ஆராய்ந்து பலன் அறிய வேண்டிய இந்த மாபெரும் கலையான ஜோதிட சாஸ்திரத்தில் “கோசார வேதை” என்கின்ற ஒரு நிலை உண்டு. இந்த கோசார வேதை என்பதன் அர்த்தம் என்னவெனில், ஒரு இடத்தில் நல்லதையோ, கெட்டதையோ தர இருக்கும் ஒரு கிரகத்தின் பலனை, குறிப்பிட்ட இன்னொரு இடத்தில் இருக்கும் கிரகம் மாற்றும் என்பதே.

எட்டில் இருக்கும் ஒரு பாப கிரகத்தை, கெட்ட பலன்களைத் தராமல் செயலற்றுப் போக வைக்க வேண்டுமெனில், ஏழாமிடத்தில் ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்பது கோட்சார வேதை விதி. அதன்படி அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட இருக்கும் மிதுன ராசிக்கு ஒரு யோக நிலையாக தற்போது எட்டில் மாற இருக்கும் சனிக்கு, மிக அருகில் ஏழாமிடத்தில் குருபகவான் ஒருவருடம் நிலை கொண்டு இருக்கப் போவதால், உங்களுக்கு அஷ்டமச் சனி தன்னுடைய கெடுபலன்களை முதல் ஒரு வருடத்திற்கு கண்டிப்பாக செய்யப்போவது இல்லை.

சனிபகவான் ஒருவருக்குத் தண்டனைகளைத் தர விதிக்கப்பட்ட கிரகம் என்றாலும் 12 ராசிகளுக்கும் அவர் ஒரே மாதிரியான தண்டனைகளையோ அல்லது கெடுபலன்களையோ தந்து விடுவது இல்லை. தான் இருக்கும் இடத்தை பொருத்தும், எந்த ராசிக்கு தான் பலன்களை அளிக்கப் போகிறோம் என்பதை பொருத்தும்தான் சனிபகவான் தனது நல்ல, கெட்ட பலன்களைச் செய்வார்.

அந்தவகையில் பார்க்கப் போவோமேயானால் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 2015, 2016, 2017ம் ஆண்டுகளில் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் மேஷ ராசியினர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக ரிஷபத்தினர் பட்ட துயரங்களும் அதிகம்.
மேஷத்திற்கு அஷ்டமச் சனியாக இருந்தபோது சனிபகவான் பகைவீட்டில், பாபத்துவ நிலையிலும், ரிஷபத்திற்கு எட்டில் இருந்தபோது குருவின் சம வீட்டிலும் இருந்தார். ஆனால் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் தனது சொந்த வீடான மகரத்திற்கு சனி மாறுகிறார். உங்கள் ராசிக்கு பாக்கியங்களைத் தரக்கூடிய யோகரான சனி தனது சொந்த வீட்டிற்கு மாறுவதாலும், மிதுனத்திற்கு அவர் யோகாதிபதி என்பதாலும் மிதுனத்தினர்களுக்கு தாங்க முடியாத கெடுபலன்கள் எதுவும் உறுதியாக வரப் போவது இல்லை.

பணம் பற்றிய புரிதல்களைத் தவிர்த்து வேறு கெடுதல்கள் மிதுனத்திற்கு இருக்காது. மிகத் தெளிவாகச் சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேஷ, ரிஷப ராசிக்காரர்களுக்கு நடந்த சாதகமற்ற, சங்கடமான பலன்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது. மிதுனத்தவர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும், தன்மைகளையும் தர விதிக்கப்பட்டவர் சனிபகவான் ஒருவர்தான். ஆகவே அவர் தண்டனைகளைத் தருகின்ற ஒரு பொதுவான கிரகம் என்றாலும் நல்லவைகளையும் தரக் கூடிய யோகாதிபதி என்பதால் மிதுனத்தின் மேல் சனிக்கு எப்போதும் ஒரு மென்மையான போக்கு கண்டிப்பாக உண்டு.

இந்த ஒரு காரணத்தினாலும் மற்ற ராசிகளுக்கு அஷ்டமச் சனியில் நடக்கின்ற கெடுபலன்கள் எதுவும் தற்போதைய சனிப் பெயர்ச்சியால் உறுதியாக மிதுனத்திற்கு நடக்காது. ஆயினும் வரும் முன் காக்க உரைப்பதுதான் ஜோதிடம் என்கிற விதிப்படியும், சனியைப் போலவே இன்னொரு வருடாந்திர கிரகமான ராகுவும் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பில் இருப்பதாலும் எந்த ஒரு ரிஸ்க் எடுக்கின்ற தொழில் அமைப்புகளையும் மிதுனத்தினர் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது.

“என்னடா இது.. அஷ்டமச்சனி கெடுதல்களை செய்யாது” என்றும் சொல்லி விட்டு, “ரிஸ்க் எதையும் எடுக்காதே” என்று குருஜி சொல்கிறார் என்று யோசித்தால் முறையான பலன்கள் என்றால் இப்படித்தான் இருக்கும். கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்கப் போவது இல்லை. ஆயினும் அனைத்திலும் தற்காப்புடன் முனைப்புடன் இருந்து கொள்வது நம்முடைய கடமை.

எனவே இன்றைய சனிப்பெயர்ச்சி நிலைப்படி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் எந்த விதமான ரிஸ்க் எடுக்காமலும், இருப்பதை கட்டிக் காத்தும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். “அரசனை நம்பி புருஷனைக் கை விடும்” அமைப்பு அஷ்டமச் சனியில் இருக்கும் என்பதால் மாற்றங்கள் எதையும் நீங்களே தேடிக் கொண்டு போகாமல் மாற்றங்கள் வந்தால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொண்டு, நம்மால் முடிந்த வகையில் திறம்படச் செய்வதே சிறந்தது.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படும் அமைப்பும் அது போன்ற எண்ணங்களும் சிலருக்கு வரலாம். அதுபோன்ற விஷயங்களும் தற்போது நடக்கும். அது போன்றவர்கள் எதிலும் பேராசைப் படாமல், புதிதாக எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பிக்காமல் விழிப்புணர்வுடனும், மனக் கட்டுப்பாட்டுடனும் இருப்பதன் மூலம் சனியால் நடக்க இருக்கும் சங்கடமான அமைப்புகள் இருந்தால் கூட அவற்றை சாதகமானவைகளாக கண்டிப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

அதேநேரத்தில் இன்னொரு பலனையும் சொல்கிறேன். அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களைத் தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் செட்டிலாக விடாமல் தடுக்கும். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும்.
நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார்.

சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதகமற்றவை செய்வார். குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணச் சிக்கல்களும், கடன்தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப் பணியாளர்கள் இதர வருமானங்கள் வரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள். எல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள்.

அஷ்டமச் சனி நடக்கும்போது மாணவர்கள் மற்றும் இளையவர்களுக்கு சோம்பலும், விரக்தி மனப்பான்மையும் வரும் என்பதால் இளைய பருவத்தினர் மற்றும் மாணவர்கள் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் அக்கறையுடன் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் படிப்பதை தவிர வயதுக்கேற்ற மற்ற விஷயங்களில் ஆர்வம் வந்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும். முக்கியமாக இப்போதுதான் காதல் வரும். அல்லது ஏற்கனவே உள்ள காதலால் மன அழுத்தம் வரும். எனவே இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

கணவன், மனைவி உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். அஷ்டமச் சனியில் பிரிவுகள் இருக்கும். அதை சுபப் பிரிவாக மாற்றிக் கொள்வது நம்முடைய கர்மாவை பொறுத்தது. குடும்ப விஷயங்களில் அவசரப்படாதீர்கள். வாழ்க்கைத் துணையிடம் பேசும்போது கவனமாக இருங்கள். நாக்கில் சனி இருக்கிறார் என்பது இப்போது பொருந்தும். முக்கியமாக இந்த காலகட்டத்தில் ஈகோ வேண்டவே வேண்டாம். அஷ்டமச் சனி காலத்தில் தான் அதிகம் விவாகரத்து வழக்குகள் நடக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள். இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்குவது, வீட்டை இடித்துக் கட்டுவது, புதுவீடு வாங்குவது போன்ற விஷயங்களில் இப்போது அவசரம் காட்டவேண்டாம். இருக்கும் வீட்டை விற்று, வீடு விற்ற பணம் வேறுவகையில் செலவாகி, இருந்த சொந்த வீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்கச் செய்வார் சனி என்பதால் கவனமுடன் இருங்கள். அவசரப்படாதீர்கள்.

போட்டி, பந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை கை கொடுக்காது. இவைகளில் சிறிது பணம் வருவது போல் ஆசை காட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அல்லது ஸ்ரீராமதாசன் ஹனுமானின் சந்நிதியில் சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுங்கள். அஷ்டமச்சனியின் கடுமை குறையும்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)

குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும் ஆறா மிடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு மாறுகிறார்.

ஏழாமிடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் இந்த இடம் மிகுந்த நன்மை தரும் இடமாக குருவிற்கு சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கோட்சார ராசிபலன்களாக இருந்தாலும் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்களாக இருந்தாலும், எதிலும் நுணுக்கமாக கணித்து பலன் சொல்லக்கூடிய நான் இம்முறை மிதுன ராசிக்கு சொல்ல இருக்கும் குருப் பெயர்ச்சி பலன்களும் சற்று மாறுபாடானதாகத்தான் இருக்கும்.

வருடக் கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுக்கள் தரும் பலன்களில் கோட்சார நிலையில் ஒருவருக்கு சனியின் பலன்கள் மட்டுமே கூடுதலாக தூக்கி நிற்கும். அதிலும் சனி சாதகமற்ற அமைப்பில் இருக்கும்போது மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும், அவைகள் தரும் நற்பலன்களை சனி தடுப்பார்.
குறிப்பாக அஷ்டமச் சனி, ஏழரைச் சனி காலங்களில் சனியின் ஆதிக்கம் மட்டுமே ஒருவருக்கு முன் நிற்கும் என்பதால், இந்த காலகட்டங்களில் வருகின்ற குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்றவை தங்களுடைய நல்ல, கெட்ட பலன்களை சனிக்கு முன்பாகத் தர இயலாது.

இன்னும் சில வாரங்களில், வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி முதல் மிதுன ராசியினர் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் வர இருக்கிறீர்கள். அஷ்டமச் சனி காலத்தில் ஒருவருக்கு தொழில் முன்னேற்றமும், சொந்த வாழ்க்கையில் நல்ல பலன்களும், பண விவகாரங்களில் நன்மைகளும் நடக்காது என்பது விதி. இந்த அமைப்பின்படி பெரும்பாலான மிதுன ராசிக்காரர்களுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு சாதகமான பலன்கள் சொல்வதற்கில்லை.

குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையில் செட்டிலாக தடை செய்யும் அமைப்புகள்தான் இனி நடக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவ மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் தடைபடும். இது அஷ்டமச் சனி முடியும் காலமான 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

தற்போது வருகின்ற குரு பெயர்ச்சி, அஷ்டமச் சனியின் ஆதிக்கத்திற்கு முன்னர் பலன் தர இயலாது. ஒரு ஸ்தம்பித்த நிலையில்தான் பலன்கள் இருக்கும். எனவே ஏழாமிடத்துக் குருவால் கோட்சார ரீதியில் அது நடக்கும், இது நடக்கும் என்று எழுதி மிதுன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிவிட நான் தயாராக இல்லை. எனது இந்த பலனை மறுப்பவர்கள் அடுத்த வருடம் குரு மாறிய பிறகு ஒரு வருட காலத்தை பின்னோக்கிப் பார்க்கும்போது எனது பலனின் உண்மைத் தன்மையை உணருவீர்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி பெரிய நன்மை எதுவும் தந்து விடப் போவதில்லை. அதேநேரத்தில் குருவின் பார்வை மூலம் ராசி உறுதித் தன்மை பெறுவதால் எதையும் சமாளிக்கும் மனோதிடம் உண்டாகும். அதாவது அஷ்டமச் சனியால் உண்டாகும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதை சமாளிக்க கூடிய தைரியத்தை குரு தருவார் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

நான் ஏற்கனவே எழுதியுள்ளபடி மிதுன ராசி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. அடுத்தவரை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்

இந்த காலகட்டத்தில் எவரையும் நம்பி எந்தத் தொழிலும் செய்யக்கூடாது. கூடுமானவரை புதிய தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே செய்ய நேரிட்டாலும் அதிகமான முதலீடு இல்லாமல், சுத்தமாக பணத்தை முதலீடு செய்யாமல் உங்களுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து செய்யக்கூடிய தொழிலைச் செய்யலாம். பண முதலீடு கூடவே கூடாது அகலக் கால் வைக்காதீர்கள். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் கசப்பு மட்டுமே வருகின்ற காலகட்டம் இது.

அதேநேரத்தில் மிதுன ராசியில் பிறந்த எல்லோருக்கும் கெடுதலான பலன்கள் மட்டுமே நடந்து விடுவதில்லை. பிறந்த ஜாதக அமைப்பின்படி யோக தசாபுக்திகள் நடப்பவருக்கு கடுமையான கெடுபலன்கள் இருக்காது. அதேநேரத்தில் நல்லவைக ளும் நடக்காது.

சுப கிரகமான குரு 7-ஆம் இடத்திற்கு மாறுகின்ற நிலையில், தன்னுடைய நன்மை தரும் பார்வையால் 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுவார். அவர் பார்வை பெறும் பதினொன்றாம் இடம் லாபஸ்தானம் என்பதால் பாலைவனத்தில் நடந்து செல்பவனுக்கு நடுவே ஒரு சோலை தெரிந்தார் போல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு சில பணவரவு மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். ஆயினும் அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் என்பதால் அதுவும் தடைகளோடுதான் நடக்கும்.

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் திருமணத்தை நடத்தி வைக்க கூடிய ஏழாம் இடத்து குரு வந்திருப்பதால், தசா,புக்திகளின்படி தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் நடக்கும். அதேநேரத்தில் திருமணத்தின் மூலமாக பலன்களை அனுபவிக்க முடியாதபடி சில சிக்கல்கள் இருக்கும்.

சிலர் திருமணமான உடனே வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு திருமணம் ஆகாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பு மனதுக்குள் ஓடும்.

சுப கிரகமான குரு ஏழாம் இடமான ஆட்சி வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், தொல்லைகளை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும், செயல்திறனும் உண்டாகும் எதையும் ஒரு எதிர்கால நோக்கோடு செயல்படுத்த முயற்சிப்பீர்கள். எதையும் தனி ஒருவராக போராடிப் போராடித்தான் செய்வீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யவும் ஆள் இருக்காது.

குரு தனது 7-ம் பார்வையால் ராசியில் இருக்கும் ராகுவை பார்ப்பது இந்த பெயர்ச்சியின் மூலம் கிடைக்க இருக்கும் ஒரு அற்புதமான நிலை. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கடந்த காலங்களில் வாழ்க்கைத் துணையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, பிரிவு முடிவுக்கு வரும். உங்கள் மனம் விரும்பும் தீர்வு இப்போது உண்டு. இதுவரை தாழ்வு மனப்பான்மையால் எதையும் முயற்சிக்காமல் இருந்தவர்கள் தற்போது தைரியமாக முயற்சி செய்வீர்கள்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர் களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

அஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

மிதுனத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த சாதகமற்ற நிலையான இரண்டு, எட்டு எனப்படும் நிலையில் இருந்து மாறி தற்போது ஓரளவிற்கு சாதகம்தான் என்று சொல்லக்கூடிய ஒன்று, ஏழாம் இடங்களில் ராகு-கேதுக்கள் இன்னும் ஒன்றரை வருடங்கள் நிலை கொள்ள இருக்கிறார்கள்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டாமிடத்தில் நிலைகொண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவில் தடைகளையும், பொருளாதார சிக்கல்களையும் கொடுத்து வந்த ராகுவும், எட்டாமிடத்தில் இருந்து உங்களில் சிலருக்கு கடன்தொல்லை, வம்பு, வழக்கு போன்றவைகளைக் கொடுத்து வந்த கேதுவும் 2019-ம் வருடம் மார்ச் மாதம் ஒன்று மற்றும் ஏழாமிடங்களுக்கு மாறுவது நன்மையான ஒரு அமைப்பே ஆகும்.

இம்முறை ராகு உங்களுக்கு ஜென்மராகுவாக மாறினாலும், வருடக் கிரகங்கள் பெயர்ச்சி ஆனதும் தனது நல்ல, கெட்ட பலன்களைத் தராது எனும் விதிப்படி ஜென்ம ராகு தனது சாதகமற்ற பலனைத் தரத் துவங்கும் நேரத்தில், அடுத்த குருப் பெயர்ச்சி நடந்து ராகு சுபக்கிரகமான குருவின் பார்வைக்குள் வருவதால் கெடுபலன்களைச் செய்யமாட்டார் என்பதோடு அவரால் உங்களுக்கு சில நன்மைகளும் இருக்கும்.

பொதுவாக ஜென்மராகுவால் மனஅழுத்தம், தவறான முடிவுகளால் சில சங்கடமான சூழல்கள், அறிவுத்திறன் குறைதல், உடல்நலக்கேடு போன்றவை இருக்கும் என்றாலும் இம்முறை குருவின் பார்வையால் பிற்பகுதி ஒரு வருடம் ராகு புனிதப்படுவதால் மேற்கண்ட கெடுபலன்கள் உங்களுக்கு இருக்காது.

அதேநேரம் ஏழாமிடத்தில் நிலைகொள்ள இருக்கும் கேது ஏற்கனவே அங்கே இருக்கும் சனியின் இணைவால், மனைவி, நண்பர்கள், கூட்டாளிகள் போன்ற விஷயங்களில் சாதகமற்ற பலன்களை தருவார் என்பதால் இந்த பெயர்ச்சியினால் இளைய பருவத்தினருக்கு தாமத திருமணம், திருமணமானவர்களுக்கு மண வாழ்வில் பிரச்சினைகள், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, தொழில் முனைவோருக்கு, பங்குதாரர்களிடம் சச்சரவு, கூட்டு தொழிலில் லாபக்குறைவு போன்ற பலன்களை கேது தருவார் என்பதால் மேற்கண்ட இனங்களில் மிதுன ராசிக்காரர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

இந்தப் பெயர்ச்சியினால் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் இருந்த நிலை மாறி உங்களுடைய வாக்கு பலிதம் ஆகும்.

ராசியைப் பார்க்கும் சனி உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்த விதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.

முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் சிலருக்கு இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நல்லதொழில், வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த சில மாதங்களாக ஏழில் இருக்கும் சனி தடைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.

நடுத்தரவயது தாண்டிய மிதுன ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகா பெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கலாம்.

காதல் வரும் வருடம் இது. பெண்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களையே அதிகம் தரும். கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மை யாக கடுமையாக உழைத்தால் மட்டுமே இப்போது வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் மிதுன ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

பரிகாரங்கள்

ராகு கேது பெயர்ச்சி நடந்த பிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்தி ரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே பேரருள் திருத்தலமான ஸ்ரீ காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். ஒரு குறையும் வராது.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store