iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி மகரம்
மகரம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

7-8-2020 முதல் 13-8-2020 வரை

பணப்புழக்கம் குறைந்தாலும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. தொழில் செய்பவர்கள், படிப்படியாக வளர்ச்சி நிலையைக் காண்பார்கள். குடும்பத்தில் சுமுகமான நிலையே காணப்படும். தெய்வீக எண்ணங்கள் மனதில்தோன்றும். இந்த வாரம் முழுவதும் சண்முகக் கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.

தமிழ் மாத ஜோதிடம்

16.7.20 - 16.8.20

சார்வரி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் விரயாதிபதியான குருவோடு சனி, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை பயன்படுத்த இயலாது. உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனக்கலக்கமும், மருத்துவச்செலவும், மக்கட் செல்வங்களால் தொல்லைகளும் வந்து சேரும் மாதம் இது.

கடக புதனின் சஞ்சாரம்

ஜூலை 27-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரில் யாரேனும் ஒருவருக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உபரி வருமானம் வருவதற்கு வாய்ப்பும் உண்டு. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சிலருக்கு பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வரலாம்.

மிதுன சுக்ரனின் சஞ்சாரம்

ஜூலை 30-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளுக்குரிய கடமைகள் நிறைவேறும். வேலைக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். ‘பழைய தொழிலை மாற்றி வேறு தொழில் செய்யலாமா?’ என்று சிந்திக்கும் நேரம் இது.

மேஷ செவ்வாயின் சஞ்சாரம்

ஆகஸ்டு 12-ந் தேதி மேஷ ராசிக்குச் செவ்வாய் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப் போவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். தன்னம்பிக்கை துளிர்விடும். வீண்பழிகள் அகலும். ‘கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கலாமா?’ என்று சிந்திப்பீர்கள். வாக்குவாதம் செய்த உடன்பிறப்புகள் இப்பொழுது உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பர்.

சிம்ம புதனின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ஆகஸ்டு 13-ந் தேதி அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 6-க்கு அதிபதி 8-ல் வரும்பொழுது ‘விபரீத ராஜயோகம்’ செயல்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென தனவரவு வரலாம். மனக்கசப்புகள் மாறும்.

இம்மாதம் பிரதோஷ நேரத்தில் இல்லத்து பூஜை அறையில் நந்தி பதிகம் பாடி நந்தீஸ்வரரையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

ஜூலை: 16, 26, 27, 29, 30, 31 ஆகஸ்டு: 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.

பெண்களுக்கான பலன்கள்!

இம்மாதம் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும். வீண் விரயங்களிலிருந்து விடுபட எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உகந்தது. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படலாம். இல்லத்தில் சனி பகவானை நினைத்து சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

ஆண்டு பலன் - 2020

1-1-2020 முதல் 31-12-2020 வரை

உத்ராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம்

விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய 5 கிரகங்கள் வீற்றிருந்தபடியும், ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கத்தோடும் புத்தாண்டு பிறக்கிறது. செவ்வாய் உங்களுக்கு லாபாதிபதியானவர். அவர் லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். வீண் விரயங்களை எப்படியாவது குறைக்க வேண்டுமென்று முடிவு செய்வீர்கள். பிள்ளைகள் வழியிலோ, பிற உறவினர்களின் வழியிலோ விரயங்கள் வருவதைத் தவிர்க்க இயலாது.
உங்கள் ராசிநாதன் 12-ம் இடத்தில் இருக்கின்ற பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தைப் பற்றிய மனக்குழப்பம் அதிகரிக்கும்.

ஏழரைச் சனியில் உங்களுக்கு இப்பொழுது வரும் சுற்று எத்தனையாவது சுற்று என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். முதல்சுற்று அல்லது மூன்றாவது சுற்றாக இருந்தால் கொஞ்சம் பிரச்சினைகள் அதிகரிக்கத்தான் செய்யும். பிரச்சினைகளுக்கு வடிகால் அர்ச்சனைகளும், வழிபாடுகளும்தான். உங்களுக்கு அனுகூலம் தரும் ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைத்தால் வாழ்க்கை வளமாவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தையும் நலமாக்கிக்கொள்ள முடியும்.

குருவின் சஞ்சார பலன்கள்

ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் 12-ம் இடத்திலேயே சஞ்சரிக்கிறார். 12-ம் இடம் என்பது விரய ஸ்தானமாகும். அதே நேரத்தில் 3-ம் இடத்திற்கும் குருதான் அதிபதி. 3-ம் இடம் என்பது சகோதர- சகாய ஸ்தானமாகும். எனவே உடன்பிறப்புகளால் உங்களுக்கு விரயங்கள் ஏற்படலாம். அவர்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கலாம். நீண்ட நாள் வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்களுக்கு அந்த எண்ணம் கைகூடும். பூர்வீக சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன் - தம்பிகளுக்குள் இருந்த பிரச்சினைகள் அகலும். அதிக கோபத்துடன் இருந்த உடன்பிறப்புகள் கோபம் தணிந்து வருவார்கள்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களையும், ஏற்றங்களையும் எதிர்பார்க்கலாம். மேல் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக பல சலுகைகள் வழங்குவதாக கூறுவார்கள். பணிநிரந்தரம் பற்றிய தகவல் ஒருசிலருக்கு வந்து சேரலாம். உத்தியோக ஸ்தானம் குரு பார்வையின் மூலம் புனிதமடைவதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட, மீண்டும் பணியில் சேர வாய்ப்புஉண்டு. குருவின் பார்வை 8-ம் இடத்திலும் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். என்னயிருந்தாலும் விரய ஸ்தானத்தின் பலம் கூடுதலாக இருப்பதால் வருமானத்தைக் காட்டிலும் விரயம் அதிகமாகத்தான் இருக்கும். ஒருதொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் சனியும் தனுசு ராசிக்குள்ளேயே வக்ரம் அடைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் வக்ரம்பெறும் போது பொறுமை மிகவும் அவசியம். புது முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிர்பாராத விரயங்களும் உண்டு. ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். அது குருவுக்கு நீச்ச வீடாகும். குரு நீச்சம் பெற்றிருந்தாலும் அவரது பார்வை நமக்கு உச்சம்பெற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் அதன்பார்வை அற்புதமான இடங்களில் பதிகின்றது. 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. எனவே பிள்ளைகளால் பெருமை, பிரச்சினைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு, தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை, துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் யோகம், கல்யாண முயற்சி கைகூடுதல், அதிக பணப்புழக்கம் என பல நற்பலன்கள் நாடிவரப் போகிறது. குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக குரு பீடங்களுக்கு சென்று முறையாக வழிபட்டு வாருங்கள்.

ராகு -கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் 1.9.2020-ல் 11-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே நேரத்தில் 6-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு அதே நாளில் 5-ம் இடத்திற்கு வரப்போகிறார். எனவே நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஆன்மிகத்தின் மூலம் இல்லறம் சிறப்படையும். பின்னோக்கிச் செல்லும் இந்த இரண்டு கிரகங்களும்தான், உங்கள் வாழ்க்கைப் பாதை முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். ராகு -கேது பரிகாரமும், விநாயகர், துர்க்கை வழிபாடும் வெற்றிக்கு வித்திடும்.

ராகு -கேதுக்கள் சுயபலமற்ற கிரகங்களாகும். எனவே அவர்கள் யார் வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ, அந்த கிரகத்திற்குரிய பலன்களே அதிகம் கிடைக்கும் வகையில் நடந்துகொள்வார்கள். அந்த அடிப்படையில் செவ்வாய் வீட்டில் கேதுவும், சுக்ரன் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் சுகங்களும், சந்தோஷங்களும், பணவரவும் வரும். தொழில் விருத்தியும் அமையும். சுக்ரன் வீட்டில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். சுக்ரன் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் வீட்டில் ராகு சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளர்ச்சி, வியாபார விருத்தி, துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி, பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம், பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் போன்றவை கிடைக்கும்.

குறிப்பாக ‘பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலையும் கிடைக்கும். மாலையும் கிடைக்கும். அந்த அமைப்பு இப்பொழுது இருக்கிறது. அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார் அல்லவா? எனவே கொடுக்கும் ராகு தொழில் வளர்ச்சியைப் பெருக்குவார். வியாபாரத்தில் பணியாளர்களின் தொல்லை அகலும். தங்கம், வெள்ளி மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனிப்பெயர்ச்சிக் காலம்!

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசிக்குள் வக்ரம் பெறுகிறார். 13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசியில் செவ்வாய்- சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் இருக்கும் சனி, கும்பத்தில் இருக்கும் செவ்வாயைப் பார்க்கிறார். இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். பணவிரயங்கள் கூடும். வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதன் மூலமே வெற்றிக்கான வழியை அமைத்துக்கொள்ள இயலும்.

26.12.2020-ல் உங்கள் ராசிக்கு சனி வருகிறார். விரயச் சனியில்இருந்து விடுபட்டு ஜென்மச் சனியாக மாறுகிறது. மற்றவர்களுக்கெல்லாம் ஜென்மச்சனி ஆரோக்கியத் தொல்லைகளை அதிகம் கொடுக்கும். அன்றாடப் பணிகளில் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை ராசிநாதனாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தெய்வீக சிந்தனையை அதிகரித்துக் கொள்வதன் மூலமும், நேர்மறைச் சொற்களைப் பேசுவதன் மூலமும் நிகழ்காலமும் இனிதாக அமையும். எதிர்காலமும் இனிமையாக அமையும்.

செல்வ வளம் தரும் வழிபாடு

அமாவாசை தோறும் முன்னோர் வழிபாட்டையும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், பெரியநாயகி அம்மன், மாப்பிள்ளை நந்தி யோக தட்சிணாமூர்த்தி, மகிழமரத்தடி முனீஸ்வரர் ஆகிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்.
குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020 முதல் மகர ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை இருக்கிறார். அந்த நேரத்தில் சனியும், தனுசு ராசியில் வக்ரம் அடைகிறார். இருவரும் தங்களின் வீடுகளை மாற்றிக்கொண்டிருப்பதால் பரிவர்த்தனை யோகம் நடக்கிறது. இது மிகச் சிறந்த யோகமாகும். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சனிபகவான் உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர். எனவே இக்காலத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்குமென்றே கருதலாம். உங்கள் ஆற்றல் பளிச்சிடும் நேரமிது. அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கவலைகள் அகலவும், வருங்காலத்தை நலமாகவும் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.
பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு வருடத் தொடக்கத்தில் அதிக விரயத்தைக் கொடுத்தாலும், வருட மத்தியில் கொஞ்சம் வளர்ச்சியைக் கொடுக்கும். ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில், ஏற்படும் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணமுடன் செயல்படுங்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள், தவிர்க்க முடியாமல் வரலாம். பணியாளர்களின் தொல்லையும் உண்டு. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. குடும்பத் தகவல்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தாய் வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்களில் ஒருசிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நற்பலன்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடுகட்ட எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. சனிக்கிழமை தோறும் விநாயகர், அனுமன், சனிபகவான் ஆகியோரை வழிபடுங்கள்.

 

சார்வரி வருட பலன்

சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் சனி, விரய ஸ்தானத்தில் கேது மற்றும் சந்திரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியான செவ்வாய், 3,12-க்கு அதிபதியான குரு இணைந்து குரு-மங்கள யோகத்தை வழங்குகின்றனர். 6-ல் ராகு, ஜென்மத்தில் குரு இருப்பதால் ‘அஷ்டலட்சுமி யோகம்’ செயல்படுகிறது. பஞ்சமாதிபதி சுக்ரன் சொந்த வீட்டிலும், அஷ்டமாதிபதி சூரியன் உச்சம் பெற்றும், 6,9-க்கு அதிபதியான புதன் நீச்சம் பெற்றும் இந்த ஆண்டு தொடங்குகிறது. ஜென்மச் சனியால் விரயங்களே அதிகரிக்கும். பணம் வந்த மறு நிமிடமே செலவாகலாம். சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.

ராகு- கேது பெயர்ச்சி

1.9.2020 அன்று ராகு 5-ம் இடத்திற்கும், கேது 11-ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். ஐந்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். வரன்கள் முடிவாகும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிகத்திற்கு என்று ஒரு தொகையை ஒதுக்குவீர்கள். குறிப்பாக ஆலயத் திருப்பணிகள் செய்யும் யோகம் உண்டு. வீடு வாங்கும் யோகம், வாகனம் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு.

குருப்பெயர்ச்சி

15.11.2020 அன்று குரு, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது குருவுக்கு நீச்ச வீடு. இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிக பயணத்தை உருவாக்கும் நேரமாக இந்த நேரம் நிகழலாம். 3, 12 ஆகிய மறைவிடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் நீச்சம் பெறுவதால் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற அமைப்பில் சிலருக்கு ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும். தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். திருமணம் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

சனிப்பெயர்ச்சி

26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான், மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஏழரை சனியில், ஜென்ம சனி வரும்பொழுது, ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். சென்ற ஆண்டை காட்டிலும் இப்பொழுது சில பிரச்சினைகள் புதிதாக வந்து ஊடுருவும். கவலை அகல, வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகொண்டே இருக்கும். குடும்ப பிரச்சினைகளை தக்க சமயத்தில் சமாளிப்பது நல்லது.

குரு வக்ரமும், அதிசாரமும்

13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும் வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார் 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே குருவோடு இணைந்திருக்கிறார். மீண்டும் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு, குரு பகவான் செல்கிறார். இது போன்ற காலங்களில் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 12-க்கு அதிபதி வக்ரம் அடையும் போது செலவுக்கேற்ற பணம் உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

வழிபாடு

சனிக்கிழமை தோறும் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் அனுமனின் அலங்கார கோலத்தை வழிபட்டு வாருங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை

(உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.

மகர ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏழரைச்சனி அமைப்பில் ஜென்மச்சனி எனும் நிலையை அடைகிறீர்கள். இதன்மூலம் சனிபகவான் முயற்சிகள் பலனளிக்காத சாதகமற்ற பலன்களை இனி உங்களுக்குத் தர இருக்கிறார். ஆயினும் ஜென்மச்சனியின் பலன்களை நான் இரண்டு விதமாக பிரித்துச் சொல்வேன். ஐம்பது வயதிற்கு மேலானவர்களுக்கு இந்த சனி இரண்டாம் சுற்று என்கிற அமைப்பில் பொங்கு சனியாக செயல்பட்டு நல்ல பலன்களை தரும். ஆகவே நடுத்தர வயது மகரத்தினருக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். நிச்சயமாக கெடுபலன்கள் இருக்கவே இருக்காது.

ஜென்மச்சனி என்பது ஒருவருக்கு எதிர்மறை அனுபவங்களின் மூலம் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் என்பதால் மகர ராசி இளையவர்களுக்கு சில சாதகமற்ற பலன்களைச் செய்து அதன் மூலம் எதிர்கால வாழ்க்கையை எப்படி நல்லவிதமாக அமைத்துக் கொள்வது என்கிற படிப்பினையை சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் தருவார்.

எனவே நடுத்தர வயதைக் கடந்தவர்கள் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இளம் பருவத்தில் ஏழரைச்சனியை 1991, 1992, 1993-ம் ஆண்டுகளில் கடுமையாக உணர்ந்தவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பொங்குசனியாக நல்ல பலன்களைச் செய்து வாழ்க்கையில் சுபிட்சத்தை தரும். எனவே சனியைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

இன்னும் சொல்லப் போனால் சனிபகவானே உங்களின் ராசி அதிபதி என்பதாலும், தற்போது அவர் ஆட்சி நிலைக்கு வருகிறார் என்பதாலும், அடுத்தவருடம் குருவின் இணைவின் மூலம் சுபத்துவம் அடைவார் என்பதாலும் தனது வீடான மகரத்திற்கு நல்லவைகளுக்கான அனுபவங்களை மட்டுமே தருவார் என்பது விதி. மற்ற ராசிகளுக்கு தரும் கெடுபலன்களை அவர் எப்பொழுதுமே மகரத்திற்குத் தருவது இல்லை. எனவே எதற்கும் கவலை வேண்டாம்.

மேலும் பிறந்த ஜாதக அமைப்பில் சனி சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெற்றவர்களுக்கும் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி காலங்களில் தாங்க முடியாத கெடுபலன்கள் நடப்பது இல்லை. ஆகவே கோட்சார ரீதியில் ஏழரைச்சனி நடக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் முறையான வழிபாடுகளை செய்து கொள்வதன் மூலம் சாதகமற்ற பலன்களை கூட நல்ல பலன்களாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மகரத்தினர் நினைவில் கொள்வது நல்லது.

அதேநேரத்தில் ராசியில் சனி இருப்பதால் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும், திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது இளைஞர்களுக்கு நன்மையைத் தரும்.

இளைய பருவத்தினர் 2020 ஆகஸ்டுக்குப் பிறகே ஜென்மச் சனியின் பாதிப்புகளை உணர ஆரம்பிப்பீர்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக எந்த விஷயத்திலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ராசியில் சனி இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண்அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக கீழ்நிலைப் பணியாளரிடம் விலகியே இருங்கள். சனி என்பவர் வேலைக்காரனைக் குறிப்பவர் என்பதால் அவருடைய காரகத்துவங்களில் இருந்துதான் பிரச்னையை ஆரம்பிப்பார்.

இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். இளைய பருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளை பிறர் அறிய மாட்டார்கள். நீங்களே சோம்பலாகி விடுவீர்கள். உங்களை விட திறமைக் குறைவானவருடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் காதல் வரும். கூடவே காதல் தோல்வியும் வரும். எனவே காதல், கத்திரிக்காய் என்று உங்களின் ஆக்கசக்தியை இழந்து மனஅழுத்தத்தில் தவிப்பதை தவிருங்கள்.

குடிப்பழக்கம் இருப்பவர்கள் ஜென்மச்சனி முடியும்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்துவது நல்லது. குறிப்பாக குடித்து விட்டு வண்டி ஓட்டவே செய்யாதீர்கள். விபத்து நடக்கிறதோ இல்லையோ தெருமுனையில் காவலர் ஊதும் கருவியுடன் இருந்து உங்கள் பாக்கெட்டை காலி செய்வார். பாருக்குள் நுழைந்தால் உங்களிடம் சண்டை போடுவதற்கென்றே இன்னொரு நபர் காத்துக் கொண்டிருப்பார்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டில் தனிமைத் துயரை அனுபவிப்பீர்கள். ஆனால் அது இங்கே குடும்பத்திற்கு தெரியக் கூடாது என்று தொலைபேசியில் பேசும் போது சந்தோஷமாக இருப்பதாக நடிப்பீர்கள்.

வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது. போலீஸ் ஸ்டேஷன் போகாதவர்களையும், கோர்ட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் சனி அங்கே போக வைத்து விடுவார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதியாவர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நடுத்தர வயதுக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மகர ராசி பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் பிரச்னை எதுவும் கைமீறிப் போகாது. கணவன்-மனைவிக்குள்ளும் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்குத் தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்குத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார்.

குடும்பத்தைப் பிரிக்கும் சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் வருவார் என்பதால் எவரையும் நம்பாமல் குடும்ப பிரச்சினைகளை கணவர்-மனைவி இருவர் மட்டும் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வதன் மூலம் சனியை ஜெயிக்கலாம். குறிப்பாக ஒருவரை ஒருவர் சந்தேகப்படாதீர்கள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் மகர ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். மொத்தத்தில் இந்தக் சனிப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தரும். மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச்சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை இரவு சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளிப்பதும், நடக்க இயலாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் வாங்கிப் பரிசளிப்பதும் மிகச் சிறந்த பரிகாரங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)

குருப்பெயர்ச்சி பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குரு தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதன்படி இந்தக் குருப் பெயர்ச்சியின் சில வாரங்களுக்குப் பிறகு வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு ஜென்மச் சனி எனும் சாதகமற்ற நிலை ஆரம்பிக்க இருக்கிறது.

ஒருவருக்கு கடுமையான ஜென்மச்சனி நடக்கும் போது சனியின் கெடுபலன்கள் மட்டுமே முன்னே நிற்கும். குரு உள்ளிட்ட மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும் கூட அதை சனி தடுப்பார். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் நன்மைகளோ தீமைகளோ மகரத்திற்கு பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.

மகர ராசிக்கு இ\ப்போது இரண்டு பிரிவாக நான் பலன் சொல்வேன். அதாவது இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் இளைஞர்களுக்கு சாதகமற்ற பலன்களும், ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும். இளைய பருவத்தினர் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் காதல் போன்ற விஷயங்கள் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

முக்கியமாக குடிப்பழக்கம் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடி நிலையத்தில் உங்களிடம் வீண் சண்டை போடுவதற்கென்றே ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டமும் அவர் பக்கம்தான் இருக்கும். அசிங்கம், கேவலம், வம்புச் சண்டை வரும் காலம் இது. எதிலும் நிதானமாக இருங்கள்.

எதிர் வரும் வருடத்தில் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் இந்த காலகட்டத்தில் இளைய பருவத்தினருக்கு கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.
அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். குறிப்பாக சொல்வதானால் மகரத்தினர் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது.

அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ, வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ இப்போது வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.முதலீடின்றி தனது திறமையை மூலதனமாக வைத்து சொந்தத் தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுய தொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் வராது. இந்தப் பிரிவினருக்கு நெருக்கடிகள் இருக்குமே தவிர நஷ்டங்கள், கஷ்டங்கள் எதுவும் இருக்காது.

அரசு, தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும். பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

குருவின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப் பெற்று அந்த பாவகங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ, ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.

பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க தடங்கல்கள் விலகும்.
குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவகம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். எட்டாமிடம் வலுப் பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியால் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

மகரத்தினர் தங்கள் உழைப்பின் மூலம் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. இந்தக் குருப்பெயர்ச்சி சில மாற்றங்கள், அலைச்சல்களைக் கொடுத்தாலும் அனைத்தும் உங்களின் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.

பரிகாரங்கள்:

மகரத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

இதுவரை மகரத்திற்கு ஒன்று, ஏழாமிடங்களில் அமர்ந்து சாதகமற்ற பலன்களைக் கொடுத்துக் கொண் டிருந்த ராகு-கேதுக்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆறு, பனிரெண்டாமிடங்களுக்கு மாறுவதால் மகர ராசிக்கு இந்தப் பெயர்ச்சி நன் மைகளை தரும்.

ஆறாமிடத்திற்கு மாறும் ராகுவால் கடன் தொல்லை நீங்குதல், ஆக்கபூர்வமான கடன் அமைதல், கடனால் பிரச்சினை இல்லாத சூழல், ஆரோக்கிய மேன்மை, இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலுதல் வேலை, செய்யும் இடத்தில் பிரச்சினை இல்லாத தன்மை போன்ற நல்ல பலன்கள் நடக்கும் என்பதால் இந்த பெயர்ச்சி மகரத்திற்கு சந்தோஷத்தைத் தரும் என்பது நிச்சயம்.

குறிப்பிட்ட ஒருபலனாக நண்பர்கள் மூலம் பொரு ளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனு சரணையான பேச்சு இருக்கும். கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் சாதகமாகும்.

இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே அதிகம் நடக்கும். குறிப்பாக பெயர்ச்சியின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ஆறாமிடத்து ராகுவால் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு செலவு அவர்களுடைய எதிர் கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக இருக்கும் சேமிப்பை எடுத்து செலவிட வேண்டியது இருக்கும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டு வார்கள்.

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்பு டையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

அடுத்து மிக முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். எப்போதுமே கோட்சார பலன்களை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ரீதியில் தொலைநோக்குப் பார்வையோடு நான் எழுதுபவன் என்பதால் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில நிலைகளை மகரராசிக்காரர்களுக்கு தரும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் ராகு-கேது பெயர்ச்சி முடிந்தவுடன் மகர ராசிக்கு ஜென்மச்சனி அமைப்பு ஆரம்பிக்க இருக்கிறது. எதிர்வரப்போகும் அமைப்பால் 30, 40 வயதுகளில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் தடுமாற ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அவர்களை சிக்கலுக்கு உள்ளாக வேண்டிய அமைப்புகளின் ஆரம்பங்களை ராகு இந்த நேரத்தில் ஆரம்பித்து வைப்பார் என்பதால் மகரத்தினர் இப்போதே அனைத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மேலும் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக் காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர் கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதி யாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவ தற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாது காப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. செலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத மகர ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்ற வற்றிற் காகவோ கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

வம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக் கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள். நிலம் வீடு போன்றவைகளை வாங்கும் போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப்பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. வருங்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்தப் பெயர்ச்சி நிர்ணயிக்கும்.

கிரகங்கள் தரும் சில மாற்றங்கள் எதற்காக நடந்தது என்று அந்த சமயத்தில் நமக்குப் புரியாவிட்டாலும் சில கஷ்டங்களுக்குப் பின் நன்மைகள் நடக்கும்போது நமக்குத் தெளிவாகும் என்பதால் மகர ராசிக்காரர்கள் நாளை நன்றாக இருக்கப் போவதற்கான அடிப்படை மாற்றங்களைத் தர இருக்கும் இந்தப் பெயர்ச்சியை வரவேற்கலாம்.

பரிகாரங்கள்

ஒரு சனிக்கிழமை ராகு காலத்தில் கருப்பு நிறமுள்ள விதவைப் பெண்மணி ஒருவரை மேற்கு நோக்கி நிறுத்தி வைத்து ஒரு கருப்புநிற பிளாஸ்டிக் தட்டில் ஒரு கருப்புப்புடவை ரவிக்கை நான்குகிலோ கருப்பு உளுந்து ஒரு கருப்பு பென்சில் பாக்கெட் ஒரு கண்மை டப்பா வைத்து தானம் செய்யுங்கள்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store