search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஹோரன்
    X

    அஹோரன்

    பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் வேற்றுக்கிரக மனிதர்களின் கதையாக உருவாகும் ‘அஹோரன்’ படத்தின் முன்னோட்டம்.
    கவிபாரதி கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அஹோரன்’.

    இதில் முன்னணி நட்சத்திரங்களுடன் புதுமுகங்கள் கங்காதரன், கே.கணேசன், நந்தினி, அக்‌ஷயா, அஜய், ஸ்டாலின், சினேகராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - ஜோசப், ஒளிப்பதிவு - டேனியல் லிவிங்ஸ்டன், ஸ்ரீராம், ஏ.ஜே.டிப்பு, பாடல்கள் - பிறைசூடன், சொற்கோ, பாலகிருஷ்ணன், சவுண்ட் எபெக்ட் - பிரேம்குமார்.

    கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங், இயக்கம் - ஜி.லோகேஸ்வரன், முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராகவும், படத் தொகுப்பாளராகவும் இருந்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    “விண்வெளியில் நிகழும் அதிசயங்களையும், வேற்றுக்கிரக வாசிகளால் பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.

    முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில், மெய் சிலிர்க்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. இவை மட்டுமல்ல, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைக்கதை அமைப்புடன் ‘அஹோரன்’ உருவாகிறது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
    Next Story
    ×