
‘அம்புலி’, ‘ஆ’ படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஹரி, ஹரீஷ். இவர்கள் புதி தாக இயக்கும் படம் ‘சில்க்’. இதில், நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் நாயகி மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்துக்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்களை விற்பனை செய்பவராக நட்ராஜ் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் ஆகியோர் கூறும்போது...
“பட்டுப்புடவைகளுக்கு பெயர்போன காஞ்சீபுரம் தான் கதையின் பின்னணி. இது பட்டுப்புடவையை மையமாக கொண்ட கதை. கதாநாயகன் ஒரு பட்டுபுடவையை ஆன்லைனில் விற்கிறார். இதனால் அவருக்கு ஏற்படும் சிக்கலை திரில்லர் பாணியில் சொல்ல இருக்கிறோம்.

இந்த கதையை நட்ராஜிடம் சொன்னவுடன், இது போன்ற ஒரு கதைக்குத்தான் காத்திருந்தேன் என்று மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றனர். #Silk