search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகருக்கும் இயக்குனருக்கும் வந்த பிரச்சனையால் ஜோடியாகும் வாய்ப்பை இழந்த நடிகை
    X

    நடிகருக்கும் இயக்குனருக்கும் வந்த பிரச்சனையால் ஜோடியாகும் வாய்ப்பை இழந்த நடிகை

    விவேகமான நடிகையின் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறாராம்.
    விவேகமான நடிகையின் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமலிருக்கிறாராம். இந்த ஆண்டு 3 படங்களில் நடிக்கும் அவர் அடுத்த ஆண்டிற்கும் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இந்நிலையில் தெலுங்கு நடிகரின் வாழ்க்கை படத்தில் நடிகை நடிப்பதாக இருந்ததாம். முதலில் இப்படத்தை வேறொரு இயக்குனர் இயக்கவிருந்தாராம். 

    ஆனால் ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து அப்படத்திலிருந்து இயக்குனர் விலகினாராம். தற்போது வேறொருவர் இயக்குகிறாராம். பழைய இயக்குனரின் நட்சத்திர தேர்வில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். அதன்படி நடிகருக்கு ஜோடியாக இந்தி நடிகை நடிக்கிறாராம். முக்கிய வேடமொன்றில் நடிப்பதாக இருந்த விவேகமான நடிகைக்கு அந்த வேடத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறாராம். 
    Next Story
    ×