search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கலைஞரின் வசனத்தை பேச பயந்தேன் - சரோஜா தேவி
    X

    கலைஞரின் வசனத்தை பேச பயந்தேன் - சரோஜா தேவி

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசும்போது, கலைஞரின் வசனத்தை பேச பயந்தேன் என்று கூறியிருக்கிறார். #SarojaDevi
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மகளிர் தினத்தையொட்டி தனியார் சேனலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவாஜி கணேசனுடன் ’இருவர் உள்ளம்’ படத்தில் நடித்தேன். எழுத்தாளர் லட்சுமியின் கதை இது. எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். கலைஞர்தான் வசனம் எழுதியிருந்தார். கலைஞரின் வசனத்தை சரியாகப் பேசவேண்டுமே என்று எனக்கு உதறலாகவே இருந்தது.

    அந்தப் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி அவர்கள் என்னிடம், ‘என்னை ஏன் விரும்பமாட்டேங்கிறே? எனக்கு படிப்பு இல்லையா? அழகில்லையா?’ என்றெல்லாம் கேட்பார். அதற்கு நான், ‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம்.



    ஆனால் இந்த மூன்றையும் காக்கின்ற கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’ என்று சொல்லுவேன். கலைஞரின் வசனம். அவர் பிரமாதமாக எழுதிவிட்டார். சிவாஜி சாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

    இந்த வசனத்தைப் பேசிவிட்டு, ‘எப்படி பேசினேன்? நல்லா இல்லியா?’ என்று பயந்துகொண்டே கேட்டேன். உடனே அவர், ‘பரவாயில்லியே... உன் ஸ்டைல்லயே, பிரமாதமா பேசிட்டியே...’ என்று சிவாஜி சார் சொன்னார். அப்பாடா... என்று நிம்மதியானேன்’. இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.
    Next Story
    ×