search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
    X

    முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக ரஜினிகாந்த் 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #ARMurugadoss
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின.

    தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

    முதலாவதாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. #Rajinikanth #ARMurugadoss
    Next Story
    ×