search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார்
    X

    பிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார்

    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் அளித்துள்ளார். #RajkumarHirani #MeToo
    முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், சஞ்சு போன்ற இந்தி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய்தத் நடிப்பில் இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் கமல் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‌ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படம்.

    ராஜ்குமார் ஹிரானி மீது சஞ்சு படத்தில் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 6 மாதம், ராஜ்குமார் ஹிரானியால் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா, அவரது மனைவி அனுபமா சோப்ரா, படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த பெண் இயக்குனர் அனுப்பியுள்ள மெயிலில் ‘2018 -ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி ஹிரானி தனது வீடு மற்றும் அலுவலகத்தில் செக்ஸ் ரீதியாக என்னை துன்புறுத்தினார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்குமார் ஹிரானி பதிலளிக்க மறுத்ததோடு தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தரப்பு வக்கீல் தேசாய், ’இயக்குனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், வேண்டும் என்றே அவதூறு பரப்புகிறார்கள்’ என விளக்கம் அளித்துள்ளார்.



    இந்த இ-மெயில் தொடர்பாக சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத் சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவரது மனைவி அனுபமா சோப்ரா அந்த பெண் இ-மெயில் அனுப்பி இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த பிரச்சினையை எப்படி எடுத்துச்செல்வது என்பது குறித்து யோசிக்க கால அவகாசம் வேண்டும் என்று அவள் என்னிடம் கூறினாள். அவள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.

    சஞ்சு படத்தின் திரைக்கதை ஆசிரியர் அபிஜத் ஜோஷி கூறும்போது ’அந்த பெண்ணின் பிரச்சினையை காதுகொடுத்து கேட்பது என் கடமை. அவளுக்கு துணை நிற்பேன். மேலும், அறம் தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சையின் எதிரொலியாக ஹிரானியின் இணை தயாரிப்பில் பிப்ரவரி 1-ந் தேதி வெளிவர இருக்கும் ‘ஏக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×