search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
    X

    சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா

    சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sasikumar #Vijay #Suriya
    சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், நடிகராக பிசியாகிவிட்டார். கடைசியாக ஈசன் படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்த சசிகுமார் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார், விஜய்யிடம் ஒரு வரலாற்று கதையை சொன்னபோது, அவர் மிகவும் ரசித்து, நிச்சயம் பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். இதை சசிகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எனவே சசிகுமார் இயக்கத்தில் விஜய் வரலாற்று படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போதைய தகவலின்படி, விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லையாம்.



    இதையடுத்து சசிகுமார், சூர்யாவிடம் அந்த கதையை கூறியதாகவும், கதை பிடித்துப்போன சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு ஹரி, சுதா கொங்காராவுடன் தலா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sasikumar #Vijay #Suriya

    Next Story
    ×