search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஸ்வாசம் பட டீசர் கிறிஸ்துமசுக்கு ரிலீஸ்
    X

    விஸ்வாசம் பட டீசர் கிறிஸ்துமசுக்கு ரிலீஸ்

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் வரும் என்று சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #ViswasamTeaser
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு பதில் தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் டீசரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த விருது விழாவில் கலந்துகொண்ட விஸ்வாசம் திரைப்படத்தின் இயக்குனர் சிவா, “பத்து நாட்களுக்குள் படத்தின் டீசரை எதிர்பார்க்கலாம்” எனக் கூறியிருக்கிறார். எனவே, பத்து நாட்களுக்குள்ளாக வர இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகவே விஸ்வாசம் திரைப்பட டீசரை எதிர்பார்க்கலாம் என்ற முடிவில் அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



    மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Viswasam #AjithKumar #ViswasamTeaser

    Next Story
    ×