search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
    X

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்கழு வெளியிட்டுள்ளது. #Viswasam #AjithKumar #VettiKattu
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் `அடிச்சு தூக்கு' என்ற முதல் சிங்கிள் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    `வேட்டிகட்டு' என தொடங்கும் அந்த பாடலை இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.

    மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamPongal2019 #ViswasamThiruvizha #VettiKattu #Viswasam2ndSingle

    Next Story
    ×