search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகும் ரஜினியின் முத்து
    X

    புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகும் ரஜினியின் முத்து

    ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது. #Rajini #Muthu #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியானது.

    1998-ம் ஆண்டு அக்டோபரில் 50 திரையரங்குகளில் ஒடொரு மகாராஜா (டான்சிங் மகாராஜா) என்ற பெயரில் ரிலீசான முத்து படம் அங்கு வெற்றி பெற்றது.

    100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 2006-ம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்தில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றும்போது முத்து படத்துக்கு அங்கே கிடைத்த வரவேற்பை பற்றி குறிப்பிட்டார். ரஜினிக்கும், மீனாவுக்கும் ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் உருவானார்கள்.

    ஜப்பானில் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் அந்த தாக்கம் இன்னும் இருப்பதால் படத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளான 4கே திரை மற்றும் 5.1 ஒலி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

    டிசம்பர் மாதம் வெளியிடுவதற்காக படத்தை டிஜிட்டலாக மாற்றி தொழில் நுட்பத்தை புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    படம் தொடங்குவதற்கு முன்னர் ரஜினி திரையில் தோன்றி ஜப்பான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார். இந்த வீடியோவை படத்துக்கான விளம்பரத்திலும் பயன்படுத்த இருக்கிறார்கள். ஈடன் என்டெர்டெயின்மெண்ட் என்ற ஜப்பானிய பட நிறுவனம் 25 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் மறுவெளியீடான படம் என்ற பெருமையை முத்து படம் பெற இருக்கிறது.
    Next Story
    ×