search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தேர்தல் தூதரானார் அபிநயா
    X

    தேர்தல் தூதரானார் அபிநயா

    நாடோடிகள், ஈசன் படங்களில் நாயகியாக நடித்த நடிகை அபிநயா, தற்போது தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். #Abhinaya #Election
    நாடோடிகள், ஈசன் படங்களில் நாயகியாக நடித்தவர் அபிநயா. பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான இவரின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அபிநயா கூறும்போது ‘தங்கள் உடல்நலப் பாதிப்புகளால், மாற்றுத்திறனாளிகள் பலரும் தேர்தலில் பெரும்பாலும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

    இந்தநிலையை மாற்ற, தெலுங்கானா மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக, என்னை தூதராக நியமிச்சிருக்காங்க.

    பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று, மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கணும்; தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கணும்னு வலியுறுத்துறேன். இதனால் நிறைய மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பாங்கனு நம்புறேன். தவிர, கல்வி மற்றும் மருத்துவத்துறையிலயும் இப்போ விழிப்புணர்வு கொடுக்கிறேன். ஆனால் நடிப்புதான், என்னோட பிரதான செயல்பாடு. சினிமாவில் நடிக்கிறதால ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்.

    குதிரைப் பயிற்சிக்கும் போறேன். எனக்கிருக்கும் பேச்சுத்திறன் பிரச்சினையால், ஆரம்பத்தில் டயலாக்கை உள்வாங்கி நடிக்க ரொம்ப சிரமப்படுவேன். நிறைய பயிற்சி எடுத்து, இப்போ சிரமமின்றி நடிக்கிறேன்.

    என் டயலாக் ஸ்கிரிப்டை படிச்சும், டைரக்டர் நடிச்சுக்காட்டுறதைப் பார்த்தும் நடிச்சுடுறேன். சந்தோ‌ஷமா நடிக்கிறேன். இப்போ, தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் தலா ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். தமிழில் நடிக்கப் பேச்சுவார்த்தைப் போயிட்டிருக்கு” என்கிறார் அபிநயா.
    Next Story
    ×