search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு
    X

    என்னவொரு சமூகப் பொறுப்பு - விஷாலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ‘சண்டக்கோழி 2’  படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’.

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. போஸ்டரின் மூலம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி ரிலீசாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.
    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

    ‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Ayogya #Vishal #RashiKhanna

    Next Story
    ×