search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திருமணத்திலும் போட்டி போட்ட தீபிகா - பிரியங்கா
    X

    திருமணத்திலும் போட்டி போட்ட தீபிகா - பிரியங்கா

    பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இருக்கும் தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் திரையில் போட்டி போடுவதுபோல் திருமணத்திலும் போட்டி போட்டிருக்கிறார்கள். #Deepika #Priyanka
    இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவருக்கும் இதுவரை திரையில் போட்டி நிலவி வந்தது. இந்தி படங்களில் போட்டி போட்டு நடித்தவர்கள் ஹாலிவுட்டுக்கும் சென்று போட்டி போட்டுக்கொண்டனர்.

    இந்த போட்டி இருவரது திருமணங்கள் வரை தொடர்கிறது. பிரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    பிரியங்காவின் திருமண தேதி முடிவானதிலிருந்து ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தீபிகா படுகோனேவுக்கு, பிரியங்காவின் திருமணத்திற்கு முன்பே இன்று - நாளையும் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், அவரை விட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் பற்றிதான் அதிக அளவில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 



    தீபிகாவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே சினிமாவில் மட்டும் அல்ல திருமண வி‌ஷயத்திலும் போட்டி என்று பாலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் கிட்டத்தட்ட பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார். தான் எது செய்தாலும் அதைச் சமூக வலைதளத்தில் தெரிவித்து அனைவரையும் தன்னைப் பற்றியே பேச வைக்கிறார்.
    Next Story
    ×